எந்த ஒரு திட்டத்திலும் யார் பலன் பெறத் தகுதியானவர்கள்,தகுதியற்றவர்கள் என்பது வேளாண் அதிகாரிகளுக்கு துல்லியமாகத் தெரியும்! ஆனால்,மோசடி செய்வதற்கென்றே கொண்டு வரப்பட்ட திட்டமாக இதை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் நினைத்து செயல்பட்டதாகத் தான் தெரிகிறது இந்த திட்டத்தின் மூலகர்த்தா தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்! அவர் தான், தன் தேர்தல் வாக்குறுதியில் சிறு,குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு நான்காயிரம் இலவசமாக தரப்படும் என அறிவித்து ஆட்சியைக் கைப்பற்றினார். இதைத் தான் மோடி தேர்தலுக்கு முன்பே கொடுத்து அடுத்த ஆட்சிக்கு அடித்தளம் போடும் எண்ணத்துடன் அறிவித்தார். சென்ற ஆண்டு ...

சென்னை  காசிமேடு மீன்பிடித்துறைமுகத்திலிருந்து ஜூலை 23 அன்று (IND-TN-02-MM-2029)  விசைப் படகில் ராயபுரத்தை சேர்ந்த படகு ஓட்டுநர் ரகு, திருச்சினாங்குப்பத்தை சேர்ந்த லெட்சுமணன், சிவகுமார், பாபு, பார்த்தி ஆகியோரும் திருவெற்றியூர் குப்பத்தை சேர்ந்த கண்ணன், தேசப்பன், முருகன், ரகு ஆகியோரும் லெட்சுமிபுரத்தை சேர்ந்த தேசப்பன் உள்ளிட்ட 10 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். ஆகஸ்ட் 7 ந்தேதி கரைதிரும்பியிருக்க வேண்டியவர்கள் இன்று வரை திரும்பவில்லை. அவர்கள் 10 நாட்களுக்கான உணவை மட்டுமே கொண்டு சென்றனர்.அவர்களை ஜூலை 28 முதல் தொடர்புகொள்ள முடியவில்லை. சம்பந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தை ...

கடவுளை அரசியல் பிழைப்புக்கு பயன்படுத்துவதை கடைசி வரை எதிர்த்த ஒப்பற்ற துறவி சுவாமி அக்னிவேஷ்! ஒரு உண்மையான ஆன்மீகவாதிக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் சுவாமி அக்னிவேஷ்! ’’கடவுளை கோயிலில் தேடாதீர்கள்…,அன்பு,கருணை, நீதி,கருணை ஆகிய வடிவங்களில் வெளிப்படுவதே கடவுள்…’’என்றவர் கடைசி வரை விளிம்பு நிலை மனிதர்களில் ஒருவனாகவே வாழ்ந்து மறைந்தார். ’’அர்ச்சகர்களையெல்லாம் சாமியாக்கிவிடாதீர்கள்! அதுவும் பிழைப்புக்கான ஒரு தொழில்! அர்சகர்கள் என்பது வேறு,அருளாளர்கள் என்பது வேறு’’ ’’இன்னினாரெல்லாம் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்றால்,அங்கே ஆண்டவன் மட்டும் எப்படி நுழைந்து குடியிருக்க முடியும்…’’ இறைவனை வழிபட வேண்டும் என்று ...

’’இவர் குற்றமற்றவர், புகாருக்கே முகாந்திரமில்லை.’’ என  விசாரணை செய்யாமலே உடனே தூய்மை சான்றிதழ் அளித்து விடுவிக்கப்பட்டுள்ளார் மத்தியப் பிரதேச நீதிபதி ஒருவர்! மாவட்ட நீதிபதி ஒருவரால் தான் பாலியல் பாதிப்புக்கு ஆளானதாக நீதித்துறை சார்ந்த பெண்ணின் வழக்கை விசாரித்த மத்தியப் பிரதேச நீதிமன்றம்  அந்த நீதிபதி மீது ஒழுங்கு விசாராணை நடத்த உத்தரவிட்டது. அந்த நீதிபதியோ, ’’என்னை விசாராணை செய்யக் கூடாது இது என் பதவி உயர்வை பாதிக்கிறது’’ என உச்ச நீதிமன்றத்தில் முறையிடுகிறார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ...

அறம் என்றால் என்ன? என்ற வினாவிற்கு மிகச் சிறப்பாக அர்த்தம் சொன்ன பண்டை நூல் திருக்குறள்தான். வள்ளுவத்தை அடிப்படையாகக்கொண்டு எழுந்து நிற்கும் தமிழ்ச்சமூகத்தில் மனிதநேய சக்திகளுக்கு பஞ்சம் இருக்குமா? இயற்கை சீற்றங்களால் தமிழகம் பாதிக்கப்படும் போதெல்லாம் பல்லாயிரக்கணக்கான உதவும் கரங்கள் இம்மண்ணில் தோன்றி  சமூகப்பணி ஆற்றியதை அனைவரும் அறிவோம். குறிப்பாக 2015 ஆம் ஆண்டு சென்னை மாநகரம் பெரு வெள்ளத்தில் தத்தளித்த போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் களமிறங்கி ,ஆற்றிய பணிகளை உலகமே பார்த்து வியந்தது . ஓர் ஊருக்கு, மாநிலத்திற்கு அல்லது நாட்டுக்கு பிரச்சினை ...

சென்னைக்கருகில் உள்ள புகழ்பெற்ற திருப்போரூர் கந்தசுவாமி கோயில் சொத்துகளை அபகரிக்கும் முயற்சிகள் நடக்கின்றன! அதை தடுத்து காப்பாற்றும் முயற்சிகளும் வேகம் கொண்டுள்ளன! கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் உள்ள மெத்தனங்கள்,தனிப்பட்ட சிலரின் பேராசைகள் இவற்றுக்கிடையே அதை காப்பாற்றுவதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டதும்,அதையும் மீறி சில தவறுகள் நடப்பதையும் பாரபட்சமின்றி பேசுகிறது இந்தக் கட்டுரை! மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பிறகு இந்துக்கோவில்களும், அவற்றின் சொத்துக்களும் ஒரு குறிப்பிட்ட வம்சத்தாராலும், பிரிவினராலும் பராமரிக்கப்பட்டு வந்தது. இச்சமயத்தில் கோவில் நகைகள் திருட்டுத்தனமாக வெளியில் விற்கப்பட்டன. அதேபோன்று நிலங்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டன. இதையடுத்து ...

’’அப்பாடா ஒழிந்தது…’’ என்று பெற்றோர்களை பெரு மூச்சுவிட செய்ததும் ’’ஐயோ பறிபோகிறதே…’’ என இளைய சமுதாயத்தை கதறவைத்திருப்பதும்…வேறு,வேறு அல்ல! ஒன்றே! அது தான் பப்ஜி போன்ற ’டென்சண்ட் கேம்ஸ்’! தடை செய்த செய்தி!ஆனால் அப்படி பெற்றோர்கள் நிம்மதி பெருமூச்சு விடமுடியாது என்ற வகையில் இந்திய நிறுவனமான பெங்களூரைச் சேர்ந்த என்கோர் கேம்ஸ் FAU-G என்ற பெயரில் ஒரு மொபைல் விளையாட்டைக் கொண்டு வர உள்ளதாம்! அழிவிற்கான விளையாட்டு விளையாட்டு என்றால் உடலும்,உள்ளமும் ஒருங்கே இசைந்து மகிழ்வது, நண்பர்களோடு தோழமை கொண்டு வளர்வது என்று நாம் ...

காந்தியத்தால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தவர்களில் நானும் ஒருவன்! 1980 களில் காந்தியப் பண்புகளைக் கொண்ட அரிய தலைவர்கள் சிலரை நான் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கண்டேன்! தன் 5 ஆம் வயதிலேயே தன்னை கட்சிக்கு ஒப்புவித்து கொண்ட முது பெருந்தியாகி தோழர் எம். வி.சுந்தரம், தன் சொத்துகள் அனைத்தையும் கட்சிக்கு தாரை வார்த்து,எளிய வாழ்க்கை வாழ்ந்த தோழர்.கே.டி.கே.தங்கமணி, தன் வாழ்னாளெல்லாம் கட்சி பிரசுரங்களை மக்களிடம் கொண்டு செல்வதிலேயே தன்னை அர்ப்பணித்த முதுபெரும் தோழர்.முருகேசன், மார்க்சிய பேரறிஞர் தோழர்.ஆர்.கே.கண்ணன்…, போன்ற தலைவர்களிடம் பேசி,பழகிடும் வாய்ப்பு பெற்றவர்களில் ...