அன்பு நண்பர்களே, அறம் வாசகர்களே வணக்கம்! நேற்றைய தினம் காலை சுமார் 11.15 மணியளவில் என் வீட்டிற்கு ஆறு நபர்கள் அதிரடியாக நுழைந்தார்கள்! அப்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்த நான் அவர்களிடம் ”நீங்கள்ளாம் யாரு” என்றேன். ”சைபர் கிரைமில் இருந்து வருகிறோம். விசாரிக்கணும்” என்றனர். ”சைபர் கிரைம்மா..” என்ற நான் கேட்டு முடிப்பதற்குள் என் கையில் இருந்த செல்பேசியை வெடுக்கென்று பிடுங்கி விட்டனர். என தோள்களையும், கைகளையும் அழுத்திப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்றனர். ”விசாரணனைக்கு வர வேண்டும் என்றால், வருகிறேன். இந்த மாதிரி ...
பாண்டித்துரை, அரசரடி, மதுரை கனியாமுத்தூர் பள்ளி தொடர்பாக ஊடகங்களில் இரண்டு பிரேத அறிக்கைகளை ஒப்பிட்டு வழக்கறிஞர்கள் பேசினால் நடவடிக்கை எடுக்கபடும் என்கிறாரே நீதிபதி சதீஸ்குமார்? ஜனநாயகத்தை காப்பதற்காகத் தான் நீதிமன்றம்! அழிப்பதற்காகவல்ல! மடியில் கனமிருப்பவர்கள் பதற்றப்படவே செய்வர்! நீதிபதி ஏன் பதறுகிறார். க.செபாஷ்டின், வேலூர். ‘செந்தில் பாலாஜியை இன்னும் வலுவாக தாக்கி பேசுங்கள்’ என திமுக அமைச்சர்கள் சிலரே தன்னிடம் ஏர்போர்டில் பேசியதாக அண்ணாமலை கூறியுள்ளாரே..? நான் விசாரித்த வகையில் இது உண்மை தான்! ஸ்டாலின் தலைமையில் திமுகவின் அதிகாரமட்டத்தில் நிலவும் குழப்பத்தின் அறிகுறி ...
எஸ். ராமநாதன், திருச்செந்தூர் எந்த தைரியத்தில் மதுரை ஆதீனம் இந்தப் போடு போடுகிறார்? யேங்கப்பா..! என்னா வாய்க் கொழுப்பு! ‘சாமியாரா? சண்டியரா?’ என சதேகமே வந்துவிட்டது! தமிழக ஆட்சியாளர்களின் பலவீனமும், ஒன்றிய ஆட்சியாளர்களின் உசுப்பலும் தான் இதற்கு காரணம்! ஜெயலலிதா ஆட்சியில் மதுரை ஆதீனக் கோவில்களிலும்,மடத்திலும் முறைகேடுகள் நடப்பதை சுட்டிக் காட்டி ‘ மதுரை ஆதினத்தை கலைத்துவிட்டு கோயில்களை அற நிலையத் துறை எடுத்துக் கொள்ளும்’ என ஆணையிட்டார். அவ்வளவு தான் ஆடிப் போனார் அருணகிரி! ”அம்மா தாயே பராசக்தி ..”என சரணடைந்தார்! உண்மையில் ...
சரவணப் பெருமாள், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் திமுகவின் ஓராண்டு ஆட்சி குறித்த உண்மையான மதிப்பீட்டைத் தருக! பாராட்டத்தக்க அம்சங்கள்; இறையன்பு, உதயச் சந்திரன் போன்ற நல்ல அதிகாரிகளுக்கு உயர்ந்த பொறுப்புகளைத் தந்து ஓரளவுக்கேனும் சுதந்திரமாக இயங்க அனுமதித்து இருப்பது! பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், மா.சுப்பிரமணியம் போன்ற மனசாட்சிக்கு மதிப்பளிக்கும் அமைச்சர்கள் பங்கு பெற்றுள்ள ஒரு அமைச்சரவை! ஆட்சியாளர்களின் தவறுகளை ஊடகங்கள் சுட்டிக்காட்டும் போது ஓரளவுக்கேனும் நடவடிக்கைகள் எடுப்பது! நமது அறத்தில் வெளியான சில கட்டுரைகளுக்குமே கூட உடனடி ‘ரெஸ்பான்ஸ்’ கிடைத்து மாற்றங்கள் நடந்தன! அதிமுக ஆட்சியாளர்களைப் ...
மு.கருப்பசாமி, அருப்புக் கோட்டை, விருதுநகர் மாவட்டம் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன? ஒரு ஆண் எத்தனை பெண்ணோடு தொடர்பு கொண்டவனாகத் தான் இருந்தாலும், தனக்கான மனைவி பத்தினியாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பான்! அதே போல கருணாநிதி எப்படிப்பட்ட ஊழல் செய்யும் தலைவர் என்பதை அருகிருந்து அணுவணுவாக உணர்ந்த போதிலும் தன்னை பொருத்தவரை ஒரு நேர்மையாளராக நிலை நிறுத்திக் கொண்டவர் சண்முகநாதன்! கருணாநிதியின் சாதனைகள் பலவற்றுக்கு அவரது மனைவி, மக்கள், சகாக்களை விட அதிக உறுதுணையாக இருந்த ஒரே நபர் ...
வேல்முருகன், சுங்குவார் சத்திரம்,காஞ்சிபுரம் நாகலாந்து சம்பவத்தில் அமித்ஷாவின் விளக்கத்தை கேட்டீர்களா? அப்பாவிகள் சென்ற வாகனத்தை தவறுதலாக புரிந்து கொண்டு இராணுவத்தினர் ஆறு பேரைக் கொன்றுவிட்டனர். அதில் கோபமடைந்த கிராமத்தினர் வேன்களுக்கு தீ வைத்துள்ளனர்! இதனால் அவர்களையும் சேர்த்துக் கொன்றுள்ளனர். மாநில போலீசாரை துணைக்கு வைத்துக் கொண்டிருந்தாலே இந்த சம்பவம் தவிர்க்கப் பட்டு இருக்கும்! மாநில அரசு நிர்வாகத்தின் துணையோடு ரோந்து சுற்றி இருந்தால், உயிர்ப்பலிக்கே வாய்ப்பில்லை என உள்ளுர் காவலர்கள் வருந்துகின்றனர். உள்துறை அமைச்சருக்கு இதில் குற்ற உணர்வு கூட இல்லை என்பது தான் ...
க. நாகராஜன், அருப்புக் கோட்டை நீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை இன்னும் குடியரசுத் தலைவருக்கே அனுப்படவில்லையாமே? செப்டம்பர் 20 ஆம் தேதி நீட் தேர்வு தொடர்பான அந்த அறிக்கை குடியரசுத் தலைவருக்கு அனுப்பட்டதாக நம்பி நாம் காத்துக் கிடக்கிறோம். அது, இன்னும் தமிழக ராஜ்பவன் டேபிளில் இருந்து கூட நகரவில்லை என்பதும், அதைக் குடியரசு தலைவருக்கு அனுப்ப கோரி முதல்வர் கவர்னரை தற்போது சந்தித்து வேண்டியுள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன! பல கோடி மக்களின் விருப்பம், அவர்களின் வாழ்வை பாதிக்கும் அம்சம்…எப்படி ...
‘டாக்டர் அய்யாவிற்கு மனம் திறந்த மடல்’ என்றொரு சிறு நூல்! 84 பக்கங்கள் கொண்டது! வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த பெரிய மனிதரும், காங்கிரஸ் தலைவராகவும் இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது! பல வன்னிய அறிவு ஜீவிகள்,முன்னோடிகள் இந்த சிறுநூல் உருவாக்கத்திற்கு அளப்பறிய தகவல்களைத் திரட்டித் தந்துள்ளனர். ராமதாஸின் அரசியல் வளர்ச்சிக்கு அருந்துணையாக இருந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி. அப்படிப்பட்ட வாழப்பாடியார் 1999 நாடாளுமன்ற தேர்தலுக்கு நின்ற போது அவரை தோற்கடிக்க களம் கண்டு வெற்றி பெற்றார் ராமதாஸ். அந்த துரோகம் இன்றளவும் வன்னிய முன்னோடிகளால் ...
அப்துல்லத்தீப், ராணிப்பேட்டை, வேலூர், சி.பி.ஐ, அமலாக்கத்துறை இயக்குனர் பதவி காலங்களை தங்கள் வசதிக்கு ஏற்ப அதிகரிக்க பாஜக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளதே? பதவி நீட்டிப்பு வேண்டுபவர்கள் பணிந்து நடக்க வேண்டும் என்பதைப் புரிய வைக்கிறார்கள்! சட்டம், நீதி, தர்மம் எனப் பேசும் அதிகாரிகளுக்கு ஆட்சியாளர் போடும் தூண்டில்! எதிர்ப்பவர்களை வேகமாக இன்னும் சிறையில் தள்ளுவார்கள்! ஜான் ஜேக்கப், நாகர்கோவில், கன்னியாகுமரி திருச்சி அருகே படுகொலையான காவலர் குடும்பத்திற்கு யாரும் கேடாமலே ஒரு கோடி நிதி அறிவிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், கொரானாவை ...
க.அமுதன், சுசீந்திரம், கன்னியாகுமரி ”அதிமுக அரசின் ஊழல்களை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும்” என முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருக்கிறாரே.? இதற்கெல்லாம் புளகாங்கிதப்படும் மனநிலையை மக்கள் கடந்துவிட்டனர். சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்புகள் எப்போது இடிந்துவிழுமோ என்ற நிலையில் சென்ற ஆட்சியாளர்களால் கட்டப்பட்டு உள்ளது. தொட்டாலே சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்துவிழுந்ததை யாவரும்பார்த்தோம். அண்ணா பல்கலை கழகம் மற்றும் ஐ.ஐ.டி நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை தந்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றார்கள். என்ன ஆச்சு? அவர்கள் தந்த விசாரணை அறிக்கையே வெளியிடபடாமல் ...