மெல்லக் கொல்லும் விஷமாக ரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் நாளும் நம் உடலில் உணவின் வழியே சேர்கின்றன. விவசாயம் நச்சுமயமானதற்கு, தடை செய்யப்பட்ட படு ஆபத்தான பூச்சிக் கொல்லி, களை கொல்லிகளை இந்தியாவில் அரசாங்கமே அனுமதிப்பது தான்! “Monocrotophos” போன்ற இன்னும் 6 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசால் 60 நாட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை விற்ற மருந்துகள் பாதி நிலத்திலும் மீதி நாம் உண்ட உணவிலும் வயிற்றை சென்றடைந்ததுள்ளது. இன்னும் சில கடைகளிலும் விவசாயிகள் கைகளிலும் மிச்சமுள்ளது. மீண்டும் ...

கடலை பற்றிச் சொல்ல கடலை விட அதிக செய்திகள் உள்ளன! ஏழு கடல்கள் என்னென்ன? கடலுக்குள் என்னென்ன உள்ளன? கடல் எல்லைகளை நாடுகள் எப்படி வரையறுக்கின்றன! கடலின் அதிசயங்கள், அற்புதங்கள் என்னென்ன..? கடல் ஆராய்ச்சிகள் கண்டடைந்தது என்ன? கடல் புவியின் அனைத்துப் பெருங்கடல் நீரையும் உடனிணைத்த ஓர் அமைப்பாகும். இவ் வமைப்பில் “பெருங்கடல்கள்” என்று அழைக்கப்படும் அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடல், தென்முனைப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் ஆகிய ஐந்தும் அடங்கும்! கடல் இந்த உலகின் 71 %  மேற்பரப்பினை மூடியுள்ளது. இதனால், மனிதர்களும் ...

மதம், பக்தி, கலாச்சாரம் ஆகியவற்றின் பெயரால் ஜோஷிமத்தில் ஏராளமான  மக்கள் குவிந்தனர்! வீட்டுமனைகள், வணிக நிறுவனங்கள் பெருகின! வளர்ச்சியின் பெயரால் இயற்கை சுரண்டப் பட்டது! தற்போது வாழ இயலா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது! ஊட்டியும், கொடைக்கானலும் இன்னொரு ‘ஜோஷிமத்’ ஆக வாய்ப்புள்ளதா..? புகழ்பெற்ற கேதாரிநாத், பத்ரிநாத் “புண்ணிய ” கோவில் தலங்களின் நுழைவாயிலாக கருதப்படும் ஜோஷிமத் என்ற சுற்றுலா நகரம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக புதைந்து கொண்டிருக்கிறது! கிட்டத்தட்ட ஏழாயிரம் அடி உயரத்தில் இரண்டு பள்ளத்தாக்குகளுக்கிடையில் இமயமலைச் சரிவின் நடுவில் அமைந்துள்ள இந்த நகரம் மெள்ள ...

கைவிடப்பட்ட சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமாம்! இத் திட்டத்தை முன்பு அதிமுகவும், பாஜகவும் கைகோர்த்து எதிர்த்துள்ளன! இந்த திட்டம் மன்மோகன் சிங் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், எதனால் கைவிடப்பட்டது? என்ன நடந்தது? மீண்டும் இதை செயல்படுத்த வாய்ப்புள்ளதா?  பத்தாண்டுகளுக்கு முன்பு “சேது சமுத்திர திட்ட பணிகளை மீண்டும் தொடர்ந்தாக வேண்டும்” என தி.மு.க எம்.பிகள் வலியுறுத்த, அதை எதிர்த்து அ.தி.மு.க, பா.ஜ.க எம்.பிகள் இராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி பாராளுமன்றமே ஸ்தம்பித்து, அவையை ஒத்தி வைக்க வேண்டியதாயிற்று என்பதை ...

சமீப காலமாக காடுகள் பல்வேறு வகைகளில் காவு கொள்ளப்படுகின்றன! சுற்றுலா தளம், ஆன்மீகப் புனித தளம், தொழிற்சாலைகள், விடுதிகள்..என பலவாறாக ஆக்கிரமிக்கப் படுகின்றன! காடுகளை அழித்தால் பெரும் தண்ணீர் பஞ்சம் உருவாகும்! காடுகளை காப்பாற்ற செய்ய வேண்டியது என்ன..? காவிரி, வைகை, தாமிரபரணி, அமராவதி, பவானி என எத்தனையோ ஆறுகளின் ஊற்றுக்கண், மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள்தான். அங்கே பொழிகின்ற மழை நீர்தான், இந்த ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடுகின்றது; தமிழ்நாட்டு மக்களின் தாகத்தைத் தீர்க்கின்றது;  நெல், கரும்பு, வாழை எனப் பயிர்களை விளைய வைக்கின்றது. ...

சொகுசான வாழ்க்கைக்காக இயற்கையை அழித்துக் கொண்டுள்ளோம். இயற்கையை அழிப்பதன் மூலம் நாம் நம்மையே அழித்துக் கொண்டுள்ளோம். வளர்ச்சியின் பெயரால், விஞ்ஞானத்தின் பெயரால், பொருளாதாரப் பேராசையால் சூழலியல் சூறையாடப்படுகிறது! இதன்  பின் விளைவுகளை மனித குலம் தாங்குமா…? சூழலியல் ஒரு சிக்கலான, அற்புதமான கண்ணிகள் அந்த அற்புதத்தை கண்டுணர்வதும் அதை சிதைக்காமல் நம் வாழ்வியலை தொடங்குவதும் தான் இந்த பிரபஞ்சத்தின் நுணுக்கமான படைப்பம்சத்தின் சாரமாகும்! நம் கண்ணுக்குத் தெரியாத ஒரு மாய சுவர் நம் முன் தோன்றி நிற்கிறது. அந்த சுவர் மிக ஆழமானதாக கட்டமைக்கப்பட்டு ...

இயற்கையை அவதானிக்க, நம் இளம் தலைமுறையினரை பழக்க வேண்டும்! எழுத்துக்களால் எழுதப்படாத ஒப்பற்ற புத்தகம் இயற்கை. அதில், உயிரோட்டமாய் இருப்பது பறவையினங்கள். காகங்கள் மனிதனோடு மிக நெருங்கிய தொடர்பில் வசிப்பவை. தற்காப்புணர்வு மிகுந்தவை! காக்கை பற்றிப் பேச நிறைய உள்ளன! புவியோட்டை அழகாக்குவதில் பசுமைமாறாக் காடுகள், புல்வெளிகள், வண்ண வண்ண மலர்கள், நீர்பரப்புகள், மேகமூட்டங்கள் அவற்றினிடையே பறந்தலையும் பறவையினங்கள்…. என்று இயற்கையின் மொத்தமும் முதலிடம் வகிக்கின்றன. நாம் எதேச்சையாய் பாய்ச்சும் ஒரு பார்வை வெட்டில் எத்தனை எத்தனை பூச்சிகளும் பறவைகளும் பறந்து செல்வதை நம் ...

காக்கை கூடு பதிப்பகம் சமீபத்தில் ‘செங்கால் நாரை விருது’க்கான போட்டியை அறிவித்து இருந்தது! அவற்றில் தேர்வு செய்யப்பட்ட சுற்றுச் சூழல் சார்ந்த அருமையான கட்டுரைகள் ‘அறம்’ இணைய இதழில் தொடர்ந்து வெளியாகும். இவை  பொது மக்களுக்கு மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பயனுள்ளவையாக இருக்கும்!  அற்புதமான சுற்றுச் சூழல் கட்டுரைகள் அணிவகுத்து வர உள்ளன! படிக்க, பரவசம் பெறுக! நம் தேவைகளுக்கான தாவரங்களை குறித்த அடிப்படை அறிவை பெற்றிருக்காததே தாவரக் குருடாகும்! நம்மை சுற்றியுள்ள தாவரங்கள், மரங்களை கவனிக்காதது, நமக்கும் அவற்றுக்குமான உறவை உணராமல் ...

காக்கை கூடும், ஓங்கில் இயற்கை கழகமும் இணைந்து நீலகிரி மாவட்டம் குன்னூரில் பறவை நோக்கு சூழலியல் சுற்றுலாவை மூன்று நாட்கள் நடத்தின! பறவைகள், விலங்குகள் பற்றிய புரிதலை அனுபவ ரீதியாகப் பெறுவதற்கான இந்த நிகழ்வு, ”அடடா இத்தனை அற்புதங்களா..” என மலைக்க வைத்தது! பறவை நோக்குபவர்கள் ஒரு இடத்தில் கூடி பறவைகள் குறித்து பேசி, விவாதித்து, புதிய விஷயங்களை கற்று, காலை மாலை வெளியே சென்று பறவைகளைப் பார்த்துக் கழிக்கும் நிகழ்வாக அமைத்து இருந்தோம்.  3 நாட்கள்  (கடந்த வெள்ளி-சனி-ஞாயிறு) நீலகிரி மாவட்டம் குன்னூரில் ...

இயற்கையான நீர் நிலைகளை அழித்து உருவாக்கப்பட்ட சென்னை மாநகரம் பெருமழை பெய்யும் போது மிதக்கிறது!  434 ஏரி, குளங்களை விழுங்கி இந்த பெரு நகரம் உருவானது. இந்த அத்தனை பகுதிகளும் மழை, வெள்ளம் வரும் போது அல்லோகலப்படுகின்றன! மயிலை நாகேஸ்வரராவ் பூங்கா ஏன் மிதக்கிறது? நூறாண்டுகளுக்கு முந்திய கணக்கின்படி சென்னையில் 474 நீர் நிலைகள் இருந்துள்ளன என்றால், நம்ப முடிகிறதா? இன்று அவற்றில் பத்து சதமான நீர் நிலைகள் கூட உயிர்ப்புடன் இல்லை என்பது வளர்ச்சியா? வீழ்ச்சியா? சென்னையின் மையப் பகுதியில் உள்ள மயிலாப்பூர் ...