இக்கால இளைய தலைமுறையினருக்குப் பெருமளவு அறிமுகமில்லாத, பெயரளவில் மட்டுமே கேட்டுணரப்பட்ட ஒரு இயற்கையின் அதிசயம்தான் மின்மினிப் பூச்சிகள். “நெருப்பில்லாமல் வெளிச்சமா?… மின்சாரம் இல்லாமல் லைட்டா?… அதுவும் ஒரு பூச்சியின் உடல் மீதா?…” என்று நடப்புச் சமுதாயத்தினர் ஆச்சரியப்படும் இயற்கையின் அற்புதப் படைப்புதான் இந்த வெளிச்ச ஜீவன். மின்மினிப் பூச்சி அல்லது கண்ணாம் பூச்சி (Firefly) என்பது வண்டு வகையைச் சார்ந்த ஒரு பூச்சியாகும். இதை மினுக்கட்டான் பூச்சி, லைட்டு பூச்சி என்றெல்லாம் அழைப்பர். உண்மையில் இந்த மின்மினிப் பூச்சிகள் வண்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இதன் ...
விவசாயத்திற்கு இரண்டு இலட்சம் கோடி உர மானியம் அரசு தருகிறது! ஆனால், இதன் பலன் விவசாயிக்கு கிடைப்பதில்லை! உரச் செலவும், பூச்சி மருந்து செலவும் பாடுபடும் விவசாயியை எப்போதுமே கடனாளியாக்குகிறது! நவீன விவசாயத்தால் பலனடைவது உரக் கம்பெனிகள், உரக்கடைகள், பூச்சி மருந்து தயாரிப்பாளர்களே! கொஞ்சம் சுதாரிச்சுக்கிடலாமா..? கொஞ்சம் சுதாரிச்சுகிட்டா இந்த நச்சு வலைப் பின்னலில் இருந்து விலகி, சுகமாக செலவு குறைந்த விவசாயம் பண்ணலாம் என்பது எங்க அனுபவம்! விவசாயத்தில் நச்சுக்களே உரங்கள்-பூச்சிக் கொல்லிகள்-களைக்கொல்லிகள் என்ற பெயரில் விதைக்கப்படுகின்றன! இந்த நச்சு இன்னும் எத்தனை ...
சைபீரியா என்றால் தூங்கும் நிலம் என்று பொருள். உண்மையில் தன்னுள் ஆயிரம் ஆயிரம் அதிசயங்களை மறைத்து வைத்து, இந்நிலம் தூங்கிக் கொண்டுள்ளது. அதை எழுப்பி விடாமல் இருப்பதே மனிதர்களுக்கு நல்லது..! அதை ஒரு வேளை எழுப்பிவிட்டால், அவ்வளவு தான்…! மனிதகுலம் பூமியில் வாழ்வதே சவால்! ஏன்? சைபீரிய உறைபனி நிலத்தை உலகின் மிகப்பெரிய ஃபிரீசர் என்றே கூறலாம். ஏனெனில், தன்னுள் புதைந்துள்ள தாவர மற்றும் விலங்கு படிமங்களை பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக, இந்நிலம் மிக அழகாக பதப்படுத்தி வைத்துள்ளது. காலநிலை மாற்றத்தின் காரணமாக அதிகரித்துவிட்ட பெரு ...
உலக உருண்டையில் நான்கில் மூன்று பங்கு (72 %) நீரால் ஆனது. அதில் பெரும்பகுதி கடலாக உள்ளது. இது இயற்கையின் பெருங்கொடைகளில் ஒன்று. கடல் பூமியின் பருவ நிலையைச் சீராக வைப்பதோடு மட்டுமல்லாமல் காற்றைச் சுத்தப்படுத்தவும், உணவு வழங்கவும் உதவி செய்து கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழுமிடமாகவும் இருக்கிறது. நுண்ணுயிரி முதல் உலகின் மிகப்பெரிய விலங்கான நீலத்திமிங்கலம் வரை கடலில்தான் வாழ்கின்றன. இந்த பூமியிலுள்ள அனைத்து உயிர்களும் வாழ சம உரிமை உள்ளபோதும் உயிரினங்களின் இறுதித் தோற்றமாகிய மனிதனின் அளவு மீறிய நுகர்வுக் கலாச்சாரத்தின் காரணமாக ...
மரங்களே பூமியை தாங்கி பிடித்திருக்கும் பந்த கால்கள். வீட்டுக்கு அழகே முன்னால் நிற்கும் மரங்கள் தான். சின்ன சின்ன மரங்களின் வழியே சித்திரம் அசைக்கும் வீதி தெருக்கள். வேப்ப மரங்களின் காற்றும், நிழலும் உள்ளம் பூரிப்பவை! ஒரு மரம் இரண்டு தொழிற் சாலைகளுக்கு சமம். மரங்களுக்கும், மனித வாழ்வுக்குமான தொடர்புகள் ஆழமானது! மரம் நடுகிறவன் கடவுளுக்கு ஒப்பானவன். அவனே ஆதியை கை நழுவாமல் பற்றி இருக்கிறான். அவன் தான் தீர்க்கதரிசி. எல்லாமே சுழற்சியின் ஞாபகங்களால் உருவானவை. கோடரி கதை…. விறகு வெட்டி கதைகளை தூரோடு தூக்கி ...
”சென்னைத் துறைமுகம் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான கடல் கட்டுமானங்கள் கடலியல் சூழலிலும், கடற்கரை பரப்புகளிலும், மீனவர்களின் வாழ்க்கையிலும் ஏற்படுத்திய விளைவுகள் என்ன..என்பதையெல்லாம் ஆராயும் போது, அதிர்ச்சிகரமான சில உண்மைகள் தெரிகின்றன” என்கிறார் கடல் சூழலியல் ஆய்வாளர் வறீதையா கான்ஸ்தந்தின்! உலகக் கடல்கள் ஒரு பேரியக்கம். நகர்ந்து கொண்டிருக்கும் பிரம்மாண்டம். காற்று, அலை, ஓதம், நீரோட்டம், மேல்நோக்கிய பெயர்வு (upwelling) என்பதாக விரியும் இவ்வியக்கமே கடலை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அதன் பல்லுயிர்த் திரட்சிக்கும், அங்கிருந்து பெறுகிற மீன்வளத்துக்கும் இதுவே ஆதாரம். கரையில் நாம் பார்க்கிற கடல், ...
திருவள்ளுவர் சிலையைவிட உயரமாகக் கடலுக்குள் கருணாநிதிக்கான பேனா அடையாளச் சின்னம் அமைய உள்ளது! கடலுக்குள் கட்டுமானம் அமைவதால் உண்மையிலேயே சுற்றுச் சூழல் பாதிப்பு உள்ளதா? அல்லது திராவிட எதிர்ப்பின் அம்சமாக எதிர்க்கிறார்களா..? சுற்றுச் சூழல் சொல்லும் உண்மை என்ன? தமிழ் மொழிக்கே அடையாளம் தரும் ஒற்றை நபராக கலைஞர் கருணாநிதியை முன்னிலைப் படுத்தும் முயற்சியாக பேனா வடிவ நினைவுச் சின்னம் சென்னை மெரினாவில் அமைப்பதில் இந்த அரசு உறுதி காட்டி வருகிறது. மெரினா கலைஞரின் சமாதியில் இருந்து நேராகச் செல்லும் வகையில், கடலின் நடுவே ...
மெல்லக் கொல்லும் விஷமாக ரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் நாளும் நம் உடலில் உணவின் வழியே சேர்கின்றன. விவசாயம் நச்சுமயமானதற்கு, தடை செய்யப்பட்ட படு ஆபத்தான பூச்சிக் கொல்லி, களை கொல்லிகளை இந்தியாவில் அரசாங்கமே அனுமதிப்பது தான்! “Monocrotophos” போன்ற இன்னும் 6 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசால் 60 நாட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை விற்ற மருந்துகள் பாதி நிலத்திலும் மீதி நாம் உண்ட உணவிலும் வயிற்றை சென்றடைந்ததுள்ளது. இன்னும் சில கடைகளிலும் விவசாயிகள் கைகளிலும் மிச்சமுள்ளது. மீண்டும் ...
கடலை பற்றிச் சொல்ல கடலை விட அதிக செய்திகள் உள்ளன! ஏழு கடல்கள் என்னென்ன? கடலுக்குள் என்னென்ன உள்ளன? கடல் எல்லைகளை நாடுகள் எப்படி வரையறுக்கின்றன! கடலின் அதிசயங்கள், அற்புதங்கள் என்னென்ன..? கடல் ஆராய்ச்சிகள் கண்டடைந்தது என்ன? கடல் புவியின் அனைத்துப் பெருங்கடல் நீரையும் உடனிணைத்த ஓர் அமைப்பாகும். இவ் வமைப்பில் “பெருங்கடல்கள்” என்று அழைக்கப்படும் அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடல், தென்முனைப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் ஆகிய ஐந்தும் அடங்கும்! கடல் இந்த உலகின் 71 % மேற்பரப்பினை மூடியுள்ளது. இதனால், மனிதர்களும் ...
மதம், பக்தி, கலாச்சாரம் ஆகியவற்றின் பெயரால் ஜோஷிமத்தில் ஏராளமான மக்கள் குவிந்தனர்! வீட்டுமனைகள், வணிக நிறுவனங்கள் பெருகின! வளர்ச்சியின் பெயரால் இயற்கை சுரண்டப் பட்டது! தற்போது வாழ இயலா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது! ஊட்டியும், கொடைக்கானலும் இன்னொரு ‘ஜோஷிமத்’ ஆக வாய்ப்புள்ளதா..? புகழ்பெற்ற கேதாரிநாத், பத்ரிநாத் “புண்ணிய ” கோவில் தலங்களின் நுழைவாயிலாக கருதப்படும் ஜோஷிமத் என்ற சுற்றுலா நகரம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக புதைந்து கொண்டிருக்கிறது! கிட்டத்தட்ட ஏழாயிரம் அடி உயரத்தில் இரண்டு பள்ளத்தாக்குகளுக்கிடையில் இமயமலைச் சரிவின் நடுவில் அமைந்துள்ள இந்த நகரம் மெள்ள ...