தமிழகத்தில் அரசு பழங்குடிகளையும், காடுகளையும் கையாளும் முறை மிக மோசமாக உள்ளது. கல்வி,பொருளாதாரம்,சூழலியல் பாதுகாப்பு,அடிப்படைத் தேவைகளுக்கான ரேஷன் பொருள்கள் பெறுவது, ஓட்டுப் போடுவது என எல்லாவற்றிலும் தமிழக பழங்குடிகள் சந்திக்கும் பிரச்சினைகளை சொல்கிறார் சிவ சுப்பிரமணியன். பழங்குடிகளே  காடுகளைப் பாதுகாக்க முடியும் வனத்துறை வேலைக்குக் கேரளா, கர்நாடகா அரசுகள் 60 சதவிகிதம் அந்த மாநில பழங்குடிகளையே  நியமனம் செய்கின்றன.. ஆனால்  தமிழ்நாடு  அந்த காடுகளை பற்றி அனுபவமே இல்லாத நபர்களை நியமிக்கிறார்கள்.   நகர்புரத்தில் இருப்பவருக்குக் காட்டிற்குள் வேலை கொடுக்கிறார்கள்.அவரால் காட்டிற்குள் என்ன வேலை செய்ய முடியும்? காடு,விலங்குகள் பற்றிய எந்த வித அனுபவமும் இல்லாத, ...

 சமீபகாலமாக காடுகளும்,பழங்குடிகளும் அங்கு அத்துமீறி ஊடுருவிய நகரவாழ்மக்களால் சுரண்டப்படுகின்ற அவலத்தையும்,அங்குள்ள வளங்கள் சூறையாடப்பட்டு,அவர்கள் நகரமக்களின் வாழ்வியல் தேவைக்கேற்ப ஆட்டிவைக்கப்படுவதுமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல ஆண்டுகளாக காடுகளில் சுற்றி அலைந்து,பழங்குடிகளின் வாழ்க்கை பிரச்சினைகளை எழுதி வரும் பத்திரிகையாளர் சிவ சுப்பிரமணியன் அறம் இதழுக்காக ஜா.செழியனுக்கு தந்த நேர்காணல். அடிப்படையில் இந்த பூமி காடு,மலைகள் சூழ்ந்ததாகவே இருந்தது. காட்டைப் பண்படுத்தி விவசாய பூமியாக்கினான் மனிதன். காலப்போக்கில் காடு,மலையை விட்டு மனிதன் விலகி வந்து தனக்கான வாழும் பகுதியை  உருவாக்கி  கொண்டான். அவற்றை நகரம் என்றழைக்கிறோம் . அங்கு வாழ்பவன் அறிவு ...

கற்பகத் தருவாக கருதப்பட்ட பனைமரங்கள் தற்போது அழிவின் விளிம்பில் நிற்கின்றன! அடி முதல் நுனி வரை அற்புத பயன் தரும் நம் பாரம்பரிய பனையைக் காப்பதற்கு ஒரு போர்க்கால நடவடிக்கை தேவைப்படுகிறது. எட்டுகோடி பனை மரங்கள் இருந்த தமிழகத்தில் தற்போது சுமார் இரண்டரை கோடி பனைகள் தான் உள்ளன. இது இன்னும் பேரழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. இதன் அழிவுக்கு வித்திட்டவர் எம்ஜிஆர் தான்..தான் கட்டமைக்க விரும்பிய சாராய சாம்ராஜ்யத்திற்காக பனை வளத்திற்கு சாவுமணி அடித்தார்…இது குறித்து விரிவாகப் பார்ப்போம். சமீபகாலமாக விடுதலை சிறுத்தைகள்,நாம் ...

’’ஏன் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடந்துக்கிறீங்க…’’ ’’ஐயோ…அவன் காட்டுமிரண்டித்தனமாக நடந்துக்கிறவனாச்சே…’’ ’’நீங்க படிச்சவரு தான…பிறகு ஏன் இப்படிக் காட்டுமிராண்டித்தனமாக ’பிகேவ்’ பண்றீங்க…’’ இதெல்லாமே… காட்டுவாசிகளைப் பற்றிய அறியாமையில் அடிக்கடி நம்மிடையே வெளிப்படும் வார்த்தைகள்…! சமீபத்தில் ஒரு பிரபல எழுத்தாளர் கூட அவரது கட்டுரையில் அடிக்கடி காட்டுமிராண்டி என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தார். இது அவருக்குப் பிடித்த சொல்லாக இருக்கலாம். தவறு செய்பவர்களைப் பார்த்து ஏன் காட்டுமிராண்டி மாதிரி செய்கிறாய் என்று குறிப்பிடும் சொல்லாக இவற்றைப் பயன்படுத்தி வருகிறோம். காட்டு மிராண்டி என்பது மிக ஆபத்தான சொல்லா? ...

காட்டுயிர் என்பது காடுகளில் மட்டுமே வாழும் உயிரினம் என்று நினைத்து இருப்போம். உண்மை அப்படி இல்லை. மனிதர்கள் வளர்க்கும் உயிரினங்களாக, மனிதர்களை நம்பி வாழும் உயிரினங்களாக இல்லாமல் மனிதர்கள் அருகிலேயே இயற்கை சூழலில் இரையைத் தேடி வாழும் உயிரினங்கள் அனைத்தும் காட்டுயிராகும் என்று காட்டுயிர் ஆய்வாளர் ஜெகநாதன் குறிப்பிடுகிறார். காடுகள் என்பது உயிரினங்கள் மிகுதியாக இருக்கும் இடம் மட்டுமே. ஏன் நம் வீட்டில் வாழும் எலியும்  ஒரு காட்டுயிராகும். இயற்கையாகவே உலகமே ஒரு காடுதான். பல ஆயிரம் வருடங்களாக மனிதன் காடுகளில் தான் வாழ்ந்தான். ...

உங்கள் வீடு உங்களுக்கு மட்டும் சொந்தமில்லை… ராமமூர்த்தி சொந்தமாக ஒரு இடத்தை வாங்கினார். அதை தன் உறவினர்கள், நண்பர்களுக்கு மகிழ்ச்சியாக சொன்னார். சட்டப்படி அந்த இடம் அவருக்கு மட்டுமே சொந்தம். அதில் வேறு யாரும் உரிமை கொள்ளவோ, வசிக்கவோ உரிமை இல்லை என்பதை சட்டம் உணர்த்தும். ஆனால் இயற்கை நீதிப்படி ராமமூர்த்தி வாங்கிய இடத்தில் உள்ள மரத்தில் பறவைகள் கூடு கட்டியிருக்கும், அணில்கள் தாவி ஓடும், தரையில் இருந்த  ஓணான் ஒன்று மரத்தில் ஏறும், செடிகளை சுற்றி வண்டுகள், பூச்சிகள் பறந்துக் கொண்டு இருக்கும், ...

சென்னையில் வார இறுதி நாட்களில் பெரும்பாலான குடும்பங்கள் மெரினா கடற்கரை, சிட்டி சென்டர்,  சினிமா தியேட்டர் என்று செல்வது வழக்கம்..  காடுகளைப் பார்க்க வேண்டும் என்றால் பல நூறு கிலோமீட்டர் கடந்து முதுமலை செல்லவேண்டும் என்பதால் 90 சதவிகிதம் மனிதர்கள் கடைசிவரை காடுகளுக்கு செல்வதும் இல்லை, பார்ப்பதும் இல்லை.  மற்றும் வீட்டுச் சிறுவர்களுக்கும் காடுகளை அறிமுகப்படுத்துவதில்லை. ஆனால்,  காடுகள்  மிகச் சிறந்த இடமாகும். ஒரு முறை காடுகளுக்குச் சென்று வந்தால் மீண்டும் மீண்டும்  அங்குச் செல்லத்  தூண்டும்.  சிறு வயதிலேயே உங்கள் வீட்டு சிறுவர்களை காடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள். அதற்காக  பல நூறு கிலோமீட்டர்கள் ...

விலங்குகளால் மனிதன் இறப்பதை விட, மனிதனால் காட்டு விலங்குகள் இறப்பது நூறு மடங்கு அதிகம்..! புலால் உண்ணும் விலங்குகள் பொதுவாக மனிதனைக் கொல்வதில்லை என்பது ஆச்சரியமாகத் தெரிந்தாலும்,அதுவே முற்றிலும் உண்மையாகும். மனிதன்-விலங்கு மோதல் சூழல் எப்படி ஏற்படுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்..! இயற்கையாக விலங்குகளுக்கு மனிதன் இரை கிடையாது. சட்டப்படி மனிதனுக்கும் காட்டு விலங்குகள் உணவு கிடையாது. இப்படியிருக்க விலங்குகள் ஏன் மனிதனைக் கொல்கின்றன…? சிறுத்தை ஒன்று  லாரி ஓட்டுனரை அதிகாலை கொன்றது, புலி மனிதனை அடித்திழுத்துச் சென்றது,யானை வன ஊழியரைத் தாக்கியது என்று பத்திரிகையில் அவ்வப்பொழுது செய்திகள் வரும். ...

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் மார்ச் வரை பறவைகளின் மாதம் என்று சொல்லலாம். அந்த ஆறு மாதம் தமிழகத்தில் இருக்கும் அனைத்து பறவைகள் சரணாலயங்களும் மிகச் சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கிவிடும். செப்டம்பர் மாதம் முதல் வெளிநாடுகளிலிருந்து பறவைகள் இந்தியாவிற்கு வந்து கொண்டு இருக்கும்.  இமயமலையிலிருந்து தமிழகத்திற்கு வலசை வரும் சாம்பல் வாலாட்டி பறவை, வால்பாறைக்கு தற்பொழுது வந்து உள்ளது. அதன் வருகையை ஒட்டி அங்கு உள்ள இளம் பறவையாளர்கள் சாம்பல் வாலாட்டி பறவையை வரவேற்று சுவரொட்டி அடித்து ஒட்டி உள்ளனர். குளிர்காலத்தில், தமிழ்நாடு பறவைகளின் நாடு என்று சொல்லும் அளவு நம்மைச் சுற்றி ...

அதிகாலை 4 மணிக்கு வீட்டுத்  தோட்டத்தில் உள்ள மரத்தில் இருந்து ஒரு பறவையின் குரல் கேட்கிறதா?.. நிறைய முறை அப்படி கேட்டு உள்ளேன். உங்களில் பலரும் கேட்டு இருக்கலாம். ஏன் விடிவதற்கு முன்பே அந்த பறவை குரல் கொடுக்கிறது?…  பொதுவாக பறவைகள் விடியல் தொடங்கும் சிறிது நேரத்திற்கு முன்பே இருப்பிடத்தில் இருந்து வெளியே கிளம்பு தயாராக இருக்கும். வெளிச்சம் தென்பட்டதும் பறப்பதற்கும், இரை தேடுவதற்கும், ஓயாமல் குரல் கொடுப்பதற்கும் என்று பறவைகளின் முழு செயல்படுகள் விடிந்தே தொடங்கும். ஆனால் அதற்கு முன்பே அதிகாலை 4 ...