இந்தோனேசியக் கலாச்சார, சமூக, அரசியல் பின்னணியோடு கூடிய ஒரு காதல் கதையே ‘சிகரெட் கேர்ள்’. வித்தியாசமான கதை. புதிரான மனிதர்கள்! நமக்குத் தெரியாத உலகத்தை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள்! அதுவும், அசாத்திய ஆளுமை நிறைந்த, கூர்மையான அறிவுள்ள பெண் கதாபாத்திரம் அசத்துகிறது! Gadis Kretek என்ற பெயரில் வெளி வந்த  புகழ்பெற்ற நாவலை வைத்து எடுக்கப்பட்ட, இந்த ஐந்து மணி நேரத் தொடரை ரசித்துப் பார்க்கலாம். கதை இந்தோனேசியாவின் தலைநகரான ஜாகர்தாவில் தொடங்குகிறது. மரணப்படுக்கையில் இருக்கும் தொழிலதிபர், ‘ஜாங் யா’ என்ற பெயரை முணுமுணுக்குகிறார். அதைக் ...

விஜய்யின் “லியோ” படம் கழுதைப் புலிகளை பற்றி தவறான சித்திரத்தை சமூக தளத்தில் உருவாக்குகிறது! உண்மையில் இவை இயற்கையின் பாதுகாவலன். படு ஆபத்தான விலங்கில்லை! அதே சமயம் மனிதன் நட்பாக்கி கொள்ளும் விலங்குமில்லை. இவற்றின் இயல்புகள், செயல்பாடுகள் சுவாராஷ்யமானவை; ‘ஹைனா’ எனப்படும் கழுதைப் புலிகள் ஓர் தனித்துவமான விலங்கு. தற்போது இவை மிகவும் அரிதாகி வருகிறது. இவைகளைக் குறித்து அறிவியல் பூர்வமாகவும், உயிரின வரலாற்றுடனும் அறிந்து கொள்வது நல்லது! விஜய் நடிப்பில் வெளியான ” லியோ “திரைப்படம் பார்த்த இளம் குழந்தைகள் கொடூரச் சண்டைகளில்  ...

பழங்குடி செவ்விந்தியர்களுக்கு அமெரிக்கர்கள் செய்த துரோக வரலாற்றை  ஆவணமாக்கி உள்ளனர். தனது சொந்த நாட்டின் துரோகத்தை தோலுரித்து, பழங்குடிகளின் வாழ்வியல் போராட்டத்தை நேர்மையாக பதிவு செய்துள்ளார் மார்ட்டின் ஸ்கார்சிசி! ஒட்டி உறவாடி, எளியோரை அழிக்கும் ஆதிக்கத்தின் சூழ்ச்சி: உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மார்ட்டின் ஸ்கார்சிசியின் கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன் வெளியாகி இருக்கிறது.  கடந்த 20ம் தேதி அகில அளவில் வெளியான இப்படம் இந்தியாவில் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. சில திரையரங்குகளில் ஐமேக்ஸ் என்னும் அகன்ற ...

‘லியோ வசூலில் சாதனை படைத்தது ‘என்கிறது தயாரிப்பு நிறுவனம்! ‘எங்களுக்கு லாபமில்லை’ என்கிறது தியேட்டர்கள் தரப்பு! உண்மைகளை ஆராய்ந்தால், பெரிய மாஸ் ஹீரோக்களை வைத்து படமெடுப்பதன் மூலம் பல அநீதிகளும், மெகா சுரண்டல்களுமே பல தரப்பிலும் அரங்கேறுகிறது..!  ‘லியோ படத்தின் ஒரு வார கலெக்‌ஷன் 461 கோடி ப்ளஸ்’ என தயாரிப்பாளர் சார்பில் ஒரு விளம்பரம் தரப்பட்டது. இதையடுத்து திரைப்பட உரிமையாளர்களிடம் ”நல்ல கலக்சனாமே…” என பத்திரிகையாளர்கள் கேட்கப் போக, அவர்களோ, பொங்கி தீர்த்து விட்டார்கள்! ”கலெக்‌ஷனுக்கெல்லாம் குறைச்சல் இல்லை. நல்ல வசூல் தான்! ...

பல நூறு கோடிகள் கொட்டி ரத்தம் தெறிக்க எடுக்கப்படும் வன்முறை நிறைந்த தமிழ் சினிமா சூழலில் சிறிய பட்ஜெட்டில் நமது ரசனைக்கு நல்ல தீனியாக, காட்சி வழியே கவிதை மொழி பேசும் படமாக, நிஜ வாழ்க்கையின் நெருக்கடிகளை மிக அழகாகப் பேசும் கூழாங்கல் உலகத் தரத்தில் எடுக்கப்பட்டுள்ளது; அறிமுக இயக்குனர் பி. எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் “கூழாங்கல்”.  2022 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவிலிருந்து பரிந்துரை செய்யப்பட்ட இந்த தமிழ்ப் படம் ஏற்கனவே ...

Khufiya  என்றால் ரகசியமாகும். தபு உளவு அதிகாரியாக வருகிறார். நாட்டு ரகசியங்களை இந்திய உளவு அமைப்பான ரா (RAW)  அதிகாரி கடத்துகிறார்.  அவரை பொறி வைத்து பிடிப்பதே கதை. உளவு, துரோகம், தேசப் பற்று..போன்றவற்றைச் சொல்ல இஸ்லாமிய வெறுப்போ, பாகிஸ்தான் எதிர்ப்போ இல்லாத விறுவிறுப்பான, திரில் படம்! ராவில் பணிபுரிந்த அமர்பூஷன் எழுதிய Escape to nowhere என்ற நூலை வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஹைதர் மற்றும் மக்பூல் போன்ற பாராட்டப்பட்ட படங்களை எடுத்த விஷால் பரத்வாஜு இதை சினிமாத்தனம் இல்லாமல் எடுத்துள்ளார். ...

100 கோடி முதலீடு இருந்தால் தான் சினிமா எடுக்கணுமா? சிறிய பட்ஜெட் படங்களே கூடாதா? மலையாளம், கன்னடம்,தெலுங்கு, வங்க மொழிகளின் சிறிய பட்ஜெட் படங்கள் அங்கு அமோக வரவேற்பு பெறுகின்றன. இங்கு சிறிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வராமல் முடங்கும் சூழல் எப்படி ஏற்பட்டது? தமிழ் சினிமாவை கட்டுப்படுத்துவது யார்? திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான விஷால், “ஒரு கோடி முதல் 4 கோடி வரை பட்ஜெட் உள்ள படங்களை எடுக்க திரைத்துறைக்கு யாரும் வராதீர்கள். அதற்குப் பதில் அந்த பணத்திற்கு நிலம் வாங்கிப் போடுங்கள். ...

ஆதிக்க சாதியாக தங்களை கருதுவர்கள் ”எங்க ஆளுடா இவர்! ” என ஏன் மாமன்னன் படத்தின் கொடூர வில்லன் பகத்பாசிலை கொண்டாடுகிறார்கள்!  இந்தக் கதாபாத்திரம் சமுதாயத்தில் ஆதிக்க சாதி உணர்வை மேலும் தூண்டி வலுப்படுத்தியுள்ளதற்கு என்ன காரணம்? உண்மையில் இந்தப் படம் எடுத்த மாரி செல்வராஜுன் நோக்கம் தான் என்ன..? சாதி ஆதிக்கத்தின் குறியீடாக பகத்பாசிலைக் கொண்டாடும் இந்த மன நிலைக்கு என்ன காரணம்? பகத் பாசில் சிறப்பாக நடித்தது தான் காரணமா? பகத்பாசிலுக்கு இப்படி ஒரு கதாபாத்திரம் தந்ததன் மூலம் மாரி செல்வராஜுன் ...

சாதிப் பகைமைகளை கூர்மைபடுத்தி படங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில், இரு முரண்பட்ட சாதிகளுக்கு இடையே, சாதியைக் கடந்த நட்பும், நேசமும் சாத்தியமானதே என காட்டுகிறது இப்படம். நட்பு, காதல், அரசியல், சாதி ஆணவம், துரோகம்.. என ஒரு கிரைம் திரில்லரான இந்தப் படம் சொல்ல வரும் செய்தி என்ன? சாதிப் பிரச்சினைகளில் உழலும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் ஒன்றான தெக்குப்பட்டியில் வசிக்கும் மூர்க்கசாமியும் (அருள்நிதி), பூமிநாதனும் (சந்தோஷ் பிரதாப்) ஆத்ம நண்பர்கள். ஒடுக்கப்பட்ட  தனது மக்களை தன்மானத்துடன் வாழப் பாடுகிறார் பூமிநாதன். இதற்கு ஆதிக்கச் சாதியைச் ...

‘நேர்மைக்கு அழிவில்லை’ என நம்பிக்கையூட்டுகிறது பம்பர். இது வரை சொல்லப்படாத கதை ஒன்றை தேர்வு செய்து, பெரிய நடிகர், நடிகை பட்டாளமின்றி, பெண்ணின் உடலை காசாக்கும் விரசக் காட்சிகள் இன்றி, ‘மானுட வாழ்வில் நேர்மறையான சிந்தனை அற்புதமான வாய்ப்புகளை உருவாக்கித் தரும்’ என சொல்கிறது படம். தூத்துக்குடியை கதைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருப்பதால் திருநெல்வேலி வட்டார வழக்கில் படம் முழுக்க சுகமான தமிழை சுவைக்க முடிகிறது! வறுமையில் வாடும் போது சென்று பார்த்தாலும் சீண்ட மறுக்கும் உறவுகள் செல்வம் வந்ததும் எப்படி தேடி வந்து ...