காவல்துறை பயிற்சிப் பள்ளியில் நடக்கும் அதிர வைக்கும் சம்பவங்களே கதை! காவல்துறையின் மூர்க்கத்தனத்தின் பின்னணி, அதிகாரிகளின் ஈகோ, ஆதிக்க உணர்வும், அடிமை உணர்வும் கட்டமைக்கப்படும் நுணுக்கம் ஆகியவற்றை துல்லியமாக படம் பிடித்த வகையில் இது வரை சொல்லப்படாத கதைக் களமாகும்! ‘டாணா’ என்றால் காவல்நிலையம் என்று  பொருள் . டாணாக்காரன் என்பதை காவல்காரன் என்று சொல்லலாம். விக்ரம் பிரபு காவலர் பயிற்சிக் பள்ளியில் சேர்வதில் கதை தொடங்குகிறது. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற படங்களில் பணிபுரிந்த தமிழ் இப்படத்தில் இயக்குநராக ...

உண்மைகளை ஊனப்படுத்தி, பொய்களைக் கொண்டு ஊர்வலம் நடத்துகிறது காஷ்மீர் பைல்ஸ்! இந்தப் படத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற புரிதல் நமக்கு வேண்டும்.காஷ்மீர் தொடர்பான உண்மைகளை நாம் வெளிப்படுத்த வேண்டும். காஷ்மீர் பண்டிட்களை தொடர்ந்து அகதிகளாக வைத்து பாஜக அரசியல் செய்வதை அம்பலப்படுத்த வேண்டும். ‘பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிந்தனைக் களம்’, என்ற கோவையைச் சார்ந்த அமைப்பு,  ‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம்  குறித்த கருத்தரங்கை நடத்தியது. இதில் இலக்கியவாதியும், அரபு   நாடுகளின் அரசியலை கூர்ந்து பார்ப்பவருமான இரா. முருகவேள்,  உரையாடினார். இசுலாமியர்களுக்கும், பெருந்தன்மையான பொதுச் ...

‘ஜல்சா’ என்பதற்கு ஒன்று சேர்தல் எனப் பொருள்!  படு விறுவிறுப்பான இந்த இந்திப் படம் ஓடிடி தளத்தில் ஒடுகிறது! மனித நேயமின்றி மனசாட்சியை அலட்சியப்படுத்தும் போது, குற்றவுணர்வு எப்படி கொன்று போடுகிறது என்பதும், இப்படிப்பட்டவர்களை மன்னிப்பதா? வேண்டாமா? என்பதும் உயிர்ப்போடு சொல்லப்படுகிறது! மும்பையின் உயர் வகுப்பை சார்ந்த ஒரு ஊடகவியலாளராக வித்தியாமேனன் நடித்துள்ளார். இவர்  இரவில் ஒரு இளம் பெண் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்தி  விடுகிறார். அவரிடம் பணி புரியும் சமையலரின் பெண் தான் விபத்திற்குள்ளானவள்! தன்னிடம் உண்மையை மறைக்கும் முதலாளியம்மா  ...

புகழ்மிக்க ஒரு  நடிகையின் துன்பமும், வலியும் நிறைந்த சொல்லப்படாத மறுபக்க வாழ்வை சித்தரிக்கும் சீரியலே Fame Game. நடிகையின் குடும்ப வாழ்க்கையும், திரையில் அவள் வளர்ந்த விதமும் மாறி, மாறி சொல்லப்படுகிறது. இது  நமக்குத் தெரிந்த பல திரை நட்சத்திரங்களின் வாழ்வை நினைவுபடுத்துகிறது. தொண்ணூறுகளில் வெளியான கல்நாயக் படத்தின் ‘சோளி கே பீச்சே கியா ஹை’ என்ற பிரபல பாடல் புகழ், மாதுரி திக்‌ஷித்தான், Fame Game என்ற இந்தித் தொடரில் அனாமிகா ஆனந்த் என்ற நடிகை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு நடிகையின் குடும்ப ...

காஷ்மீர் மண்ணில் இந்து பண்டிட்களின் கண்ணீரும், ரத்தமும் மட்டுமா உறைந்திருக்கிறது! அதே அளவுக்கு இஸ்லாமியர்களின் இழப்புகளும் உண்டே! இந்த இருதரப்புக்குமான இணக்கத்தை சீர்குலைத்த கூட்டமே இந்த படத்தையும் எடுத்துள்ளது! அரைகுறை உண்மைகளைச் சொல்லி இஸ்லாமிய துவேஷத்தை பரப்புகிறது! அரைகுறை உண்மைகளையும் , ஆதாரமற்ற புனைவுகளையும் ஒருதலைபட்சமான காட்சி படிமங்களாக்கி ’முஸ்லீம் வெறுப்பு’ என்ற குரூர நோக்கத்திற்காக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம் காஷ்மீர் பைல்ஸ்! அதில் வெற்றியும் பெற்றுள்ளது. கலைத் திறமையும்,  நவீன சினிமா தொழில் நுட்பங்களும் கைகோர்த்து இந்துத்துவ நோக்கத்தை நிறைவு செய்கின்றன! காஷ்மீர் ...

மியாவ்’ (Meow) – வளைகுடா நாட்டில் நடைபெறும்  முஸ்லிம் குடும்பக்கதை. வளைகுடா நாடுகளில் வாழும் ஒரு மலையாள இஸ்லாமிய குடும்பத்தின் ஊடல்,மோதல்,கூடல் ஆகியவை மிக இயல்பாக காட்சிபடுத்தப்பட்டு உள்ளது. இஸ்லாமிய அடிப்படை வாதத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது. தஸ்தகிர் ஒரு சூப்பர் மார்கெட் வைத்திருக்கிறான். மூன்று குழந்தைகள். மனைவி கோபித்து சென்ற நிலையில், தனது கார் ஓட்டுநரும், உதவியாளருனமான சந்திரேட்டனை  வைத்துக் கொண்டு, குடும்பத்தை நடத்துகிறான். இயக்குனரான லால் ஜோஸ் மிக அழகாக கதையை எடுத்துச் செல்கிறார். கதையில் வில்லன் இல்லை; திருப்பங்கள் இல்லை; மோதல்கள் ...

விவசாயிகள் இன்று சந்திக்கும் பிரச்சினைகளை அடி முதல் நுனி வரை அதன் உண்மைத் தன்மையுடன் பேசும் படம்! 80 வயது விவசாய தாத்தா கதாநாயகனாக நம் மனதில் பதிகிறார். இயற்கையை நேசிக்க கற்றுத் தரும் படம், அதிகாரத்தின் பொய் முகங்களை அம்பலப்படுத்துகிறது! இது வரை வந்த படங்களிலேயே விவசாயத்தை இவ்வளவு உயிர்ப்பான மண் வாசனையுடன் வெளிப்படுத்திய படம் இதுவாகத்தானிருக்கும்! விவசாயம் எவ்வளவு சிக்கலானது, விவசாயிகள் எதிர்கொள்ளும் இன்னல்கள் என்னவென்பதை கவித்துவமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.  இது இயற்கை விவசாயம், மரபணுமாற்றுப் பயிர்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் நிலத்திற்காக செய்யப்படும் ...

உண்மையில் இது யாரும் பேசத் துணியாத கதை! இது வரையிலான இந்திய சினிமாவில் திருநங்கையை கதாநாயகியாக்கும் துணிச்சலோ, திருநங்கையின் காதல் உணர்வையும், வலியையும் சொல்லும் கண்ணோட்டமோ ‘சண்டிகர் கரே  ஆஷிக்கி’ யைப் போல வந்ததில்லை! சென்ற வாரம் ஸ்ருதி சித்திரா என்பவர் உலக அளவிலான திருநங்கை அழகு போட்டியில் முதன்முதலாக இந்திய அளவில் வெற்றி பெற்றவராக கவனம் பெற்றார். திருநங்கை காதலை மையக் கருவாகவும், அந்தக் காதலை இந்த சமூகம் எதிர் கொள்ளும் அணுகுமுறையை யதார்த்தமாக, கலைநயத்துடனும் தந்துள்ளார் இயக்குனர் அபிசேக். திருநங்கையாக படம் ...

தெலுங்கு படங்கள் என்றால், அதிரடி சண்டை, குத்தாட்டங்கள் கொண்ட காரசாரமான மசாலா படங்கள் தான் என்பதை தகர்த்துவிட்டது ஷ்யாம் சிங்கா ராய்! தேவதாசி முறையின் சுரண்டல், மென்மையான காதல், இடதுசாரி எழுத்தாளனின் ஆளுமை, தலித்கள் மீதான வன்கொடுமை, போன்றவற்றை கலையம்சத்துடன் சொல்கிறது! விறுவிறுப்பான ஒரு வணிக சினிமாவில் இவை காட்சிப்படுத்தப்படும் போது இப்படியும் தெலுங்கு சினிமா இருக்கிறதா..? என்று வியக்கத் தோன்றுகிறது. பொதுவாகவே, மலையாளம், தமிழ், கன்னட, வங்காள மொழிப் படங்கள் நல்ல கலையம்சத்துடனும், கதைகளுடனும் வெளிவருகின்றன. அது போல தெலுங்கு மொழி சினிமாவில், ...

2021 ல் தமிழ் சினிமா எப்படி இருந்தது..என்று பார்க்கும் போது, படு பிற்போக்கான ஹீரோயிசப் படங்கள், ரத்த வாடை வீசும் வன்முறை படங்களுக்கு மத்தியில், நம்மை பெருமிதம் கொள்ள வைத்த படங்களும் கணிசமாகவே வெளியாகியுள்ளன! பெருந்தொற்று காலம் சற்றே மட்டுப்பட்ட ஜனவரி 2021 தொடங்கிய போது, அணை போட்டு தடுக்கப்பட்டிருந்த வெள்ளம் பீறிட்டு பாய்வது போல மாஸ்டர்,கர்ணன், ஈஸ்வர்ன், பூமி,காடன், அதிகாரம்..என வரிசையாக படங்கள் வெளியாயின! அதற்குப் பிறகு சற்றே தொய்வு ஏற்பட்டு, பிறகு மீண்டும் வீரியம் பெற்று ஆண்டு முழுவதற்குமாக சுமார் 180 ...