வங்கிகளில் பல நூறு கோடி அல்லது பல ஆயிரம் கோடிகள் கடன் பெற்றுவிட்டு தர மறுப்பவர்களின் பெயரை வெளியிட அரசு தயக்கம் காட்டுவது ஏன்? மேலும் அவர்களின் வாரா கடன்களை தள்ளுபடி செய்வது ஏன்?  சிறிய கடன் பெற்றவனை திரும்ப தராவிட்டால் சேதாரப்படுத்தும் அரசு பெரிய கடன் பெற்றவர்களை தப்பிக்க செய்வது ஏன்? வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. வாராக்கடன் என்பது வங்கிகளை மட்டுமல்லாது, பொருளாதாரத்தையும் பாதித்து வருகிறது.இந்தியா முழுவதும் 12 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. அதாவது மக்களுக்குச்  சொந்தமானவை. வங்கிகளிடமிருந்து    ...

மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தரும் நிறுவனங்கள் கடும் நெருக்கடிகள் தருவதன் மூலம் தமிழகமெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளன. காவல் நிலையங்களிலும், மாவட்ட ஆட்சியரிடமும் பெண்களின் புகார் மனுக்கள் குவிகின்றன…! பல இடங்களில் போராட்டங்களும் நிகழ்ந்துள்ளன. கொரோனா கொடுங்காலம் வாழ்வாதாரத்தைப்  பறித்துவிட்டதால்  ஏழை எளிய மக்கள் பரிதவித்து நிற்கின்றனர். கடன் என்ற சிலந்திவலை அவர்களின் கழுத்தை நெரித்துக் கொண்டு இருக்கிறது இதனால் கலங்கிப்போன சிலர் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். கந்து வட்டி போன்ற சட்டத்துக்குப் புறம்பானவற்றில் மாட்டிக் ...

இது நாள் வரையில்லாத அளவுக்கு புதுப்புது நெருக்கடிகளைத் தனது வாடிக்கையாளர்கள் மீது திணிப்பதன் மூலம் எல்.ஐ.சி.யின் வாடிக்கையாளர்களான ஏழை,எளிய மக்களின் பல லட்சம் பாலிசிகள் காலாவதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது! கடந்த மார்ச் 24 ந்தேதி  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்னும் அது முழுமையாக விலக்கிக்  கொள்ளப் படவில்லை. தொழில் ,பணி என்று சகலமும் தொய்வடைந்து மக்கள் பெரும் பாதிப்பில் உள்ளனர். குறிப்பாக ,கீழ்த்தட்டு, நடுத்தர பொருளாதாரப் பிரிவில் வாழும் மக்கள் வயிற்றை  வாயைக்கட்டி வாழ்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் இணுக்கி இணுக்கி செலவழிக்கிறார்கள். வீட்டுக் கடன்,  வாகனக் கடன்,  இ .எம். ஐ. செலுத்த கால நீட்டிப்பு ...

இன்றைக்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் முதல், குடு குடு கிழவன் வரை, செல்போன் பயன்படுத்தாத நபரே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை  இருக்கிறது. இப்படி செல்போன் பயன்பாடு அதிகரித்தாலும்,செல்போன் கடைகள் வியாபாரமின்றி விரக்தியில் மூடப்பட்டு வருகின்றன என்பதே உண்மை! ’’ ஆன்ராய்டு செல்போனா, அதுல கண்ட கண்ட கருமாந்திரமெல்லாம் வருதுப்பா. அதையெல்லாம் என் பிள்ளைங்களுக்கு ஒரு நாளும் கொடுக்க மாட்டேன்…’’ என்று சொன்ன பெற்றோர்களெல்லாம், பள்ளிக்கூடம் மற்றும் ஆசிரியர்கள் வற்புறுத்தலைத் தொடர்ந்து, ஆன்ராய்டு போனுலயே எதுப்பா நல்ல போனு… ஜூம் மீட்டிங்குல ...

’’இன்சூரன்ஸ் பண்றீங்களா சார்…” என்று யாராவது கேட்டால் உஷாராகிவிடுங்கள்!  இன்றைக்குப் பல இன்சூரன்ஸ்கள் தேவையற்றது. கட்டுபவர்களைவிட நடத்தும் முதலாளிகளின் லாபத்தைக் குறிக்கோளாகக் கொண்டது.இதைப் படித்தால் இன்சூரன்ஸ் விஷயத்தில் உங்களுக்கு ஏமாற்றம் இருக்காது.  இன்சூரன்ஸ் என்று சொன்னால் முதலில் நினைவுக்கு வருவது எல்.ஐ.சி ஆகும். இவை மத்திய அரசு நிறுவனமாகும். பல வருடங்கள் இந்தியாவின் மிகச்  சிறந்த நிறுவனமாகத் தனித்து செயல்பட்டுவந்தது. ஆனால், எல்.ஐ.சியை இருக்க 2000வது ஆண்டில்  தனியார் இன்சூரன்ஸ்  நிறுவனங்கள் தொடங்கினார்கள். அன்று தொடங்கிப் பல ஆபத்துகளை  இன்சூரன்ஸ்துறை சந்திக்கிறது!  இன்று எல்.ஐ.சிக்கு போட்டியாக 24 தனியார் ...