தனக்கு முடிவெடுக்க அதிகாரமற்ற ஒரு விவகாரத்தில் மனுவை வாங்கி வைத்துக் கொண்டு வருஷக்கணக்கில் கமுக்கமாக இருந்த கவர்னரின் பெருந்தன்மையை என்னென்பது? அவருக்கு அதிகாரம் இருக்கிறதா எனத் தெளிவு பெறாமலே அவரிடம் ஒரு மனுவைத் தந்து வருடக்கணக்கில் காவடிதூக்கி, கை கூப்பிய ஆட்சியாளர்களின் ஆண்மையை என்னென்பது? முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாத கவர்னர் மூன்று நாட்களில் முடிவெடுப்பார் என நீதிமன்றத்திற்கு உத்திரவாதம் வழங்கிய மத்திய அரசின் சொலிடர் ஜெனரலின் சட்ட அறிவை என்னென்பது? முடிவெடுக்க அதிகாரமில்லாத கவர்னருக்கு ஒரு வாரக் கெடு கொடுத்து, ”ஐயா உடனடியாக முடிவெடுத்து ...

நீதித்துறையில் ஜாதி உணர்வு இருக்கிறதா? ’’ஆம், இருக்கிறது, சந்தேகமில்லை!’’ நீதிபதிகளும் குற்றங்கள் செய்பவர்களா? ’’ஆம்,செய்பவர்களே!’’ நீதிபதிகள் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களா? ’’இல்லை! நூற்றில் ஒரு நீதிபதி இருக்க வாய்ப்புண்டு!’’ இந்த சமூகத்தில் என்னென்ன உன்னதங்கள்,சிறப்புகள் உள்ளனவோ, அவை நீதிகளிடமும் உள்ளன! இந்த சமூகத்தில் என்னென்ன பலவீனங்கள்,குற்றங்களுள்ளனவோ அவை நீதிபதிகளிடமும் உள்ளன! அவர்களும் இந்த சமூகத்தின் உருவாக்கம் தானே! நீதிபதிகளைக் குறித்து நமது அறம் இணைய இதழில் ஏற்கனவே எழுதியுள்ளேன். நீதித்துறையின் மீதான பாலியல் புகார்களை நிராகரிப்பதா? ஆனால், தன்னை சுற்றியுள்ள பாசிடிவ் அம்சங்களை பார்க்கத் தவறி, ...

தப்லீக் ஜமாத் சம்பந்தபட்ட செய்திகளில் வெறுப்பு பிரச்சாரங்களுக்கு மத்திய அரசு துணைபோன விபரீதம் உச்ச நீதிமன்றத்தின் உலுக்கி எடுத்த விசாரணையின் மூலம் நன்றாக அம்பலப்பட்டுள்ளது! உலகையே முடக்கிப் போட்ட கோவிட் 19 கொரோனா நோய்த் தொற்று இந்தியாவில் அறியப்பட்ட முதல் காலகட்டத்தில், கொரோனாவை இந்தியாவுக்குள் கொண்டு வந்து பரப்பியதான தோற்றத்தை உருவாக்கி, முழுப் பழியையும் தப்லீக் ஜமாஅத்  அமைப்பின் மீது சுமத்தி, பல பிரபல ஊடகங்கள் எழுதின. கடந்த மார்ச் மாதம் டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாத் ஆன்மீக மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் சிலர் ...

இந்தியாவில் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் புதிதல்ல, எத்தனையோ முறை ஆட்சியாளர்கள் விமர்சனங்களை தாங்க முடியாமல் பத்திரிகையாளர்களை கைது செய்துள்ளனர். ஆனால்,அர்னாப் கைதான போது தான் பத்திரிகை சுதந்திரம் குறித்த அக்கரை  உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பொத்துக் கொண்டு வருகிறது! அடடா என்னாமா துடிச்சு போயிட்டாங்க. அர்னாபிற்கு நீதிமன்றம்  வெறும் 14 நாட்கள் தான் சிறை என தீர்ப்பளித்தது. அதுவும் ஜாமீன் வேண்டுமென்றால், கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என்றது. ஆனால், அர்னாப் சாதரணமானவரா? ’’விட்டேனா பார்’’ என உச்ச நீதிமன்றத்திற்கே சென்று விட்டார். உச்ச ...

’’வாவ்… நீதிமன்றமே இப்படி கேட்டுவிட்டது!’’ ’’சபாஷ் நீதிபதிகள்! மக்கள் மனதில் இருப்பதை அப்படியே பிரதிபலிச்சிருக்கார்ப்பா…’’ கூட்டத்தின் கைதட்டலுக்காக பேசும் மேடை பேச்சாளர்கள் குறிப்பாக தொழில்முறை பேச்சாளர்கள் பேசுவதைப் போல நீதிபதிகளும் சமீப காலமாகப் பேசிவருகின்றனரோ..என்ற சந்தேகம் சில நாட்களாக எனக்கிருந்தது! ஒரு முறை என் நண்பனிடம் சொன்னபோது, ’’அடச்சே..உனக்கு மட்டும் தான் இது போன்ற சந்தேகம் வரும்…’’ என்று என கிண்டலடித்தான்! ’’ஊழல் அதிகாரிகளை ஏன் தூக்கிலிடக் கூடாது?’’ என்று மதுரை ஹைகோர்ட் கேட்டவுடன் என் சந்தேகம் தீர்ந்துவிட்டது! இந்த நீதிபதிகள் ஏதோ வானத்திலிருந்து ...