பெரியார் என்றவுடன் கடவுள் மறுப்பாளர்,  பிராமணர்களுக்கு எதிரி என்று தான் பலரது நினைவுக்கு வரும். பெரியாரின் மனித நேயத்தை, பிராமணர்களிடம் அவர் கொண்டிருந்த நட்புணர்வை, இந்த சமூகத்தில் அவர் காண ஏங்கிய மாற்றத்தை இதைவிட எளிதாக, சுவாரசியமாக வேறொருவர் சொல்ல முடியுமா.. தெரியவில்லை! எதிலும் உண்மை என்ன என்று தெரியாமல், தெரிந்து கொள்ள விரும்பாமல்   பெரியார் பெயர் கேட்டவுடன் சிலர் தவறாகவே எண்ணுகிறார்கள்.. உண்மையில் பெரியார் என்பவர் யார்? பிராமணர்கள் சொல்வது போல் அவர்களுக்கு எதிரியா? அல்லது கடவுள் மறுப்பதில் மட்டும் கவனம் செலுத்தினாரா? ...

அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய 44 கட்டுரைகளின் தொகுப்பு தற்போது நூலாக வெளிவந்துள்ளது. உலகம் முழுமையிலும் பல்வேறு கால கட்டங்களில் நடந்த முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்களின் சமூக, அரசியல் பின்னணி, அவை நடைபெற்ற விதம், அதற்கான நியாயங்கள் குறித்த பதிவாக இந்த நூல் கவனம் பெறுகிறது. மதுரையைச் சேர்ந்த அ.முத்துக்கிருஷ்ணன் சமூக செயற்பாட்டாளர். இவரது சமூகப் பங்களிப்பிற்காக பெரியார் விருதையும், அம்பேத்கர் விருதையும் பெற்றவர். பல்வேறு காலக்கட்டங்களில் உலகெங்கிலும் நடந்துள்ள எதிர்ப்பியக்கங்களைத்  தேர்ந்தெடுத்து இந்த நூலில் எழுதியுள்ளார். இங்கிலாந்தின் தேநீர் வரியை எதிர்த்து அமெரிக்காவில் நடந்த போராட்டம் அதன் ...

தமிழுக்கு உண்மையாகவே பெரிய பங்களிப்பை தந்து, காலத்தால் அழியாத தடங்களை பதித்தவர் மால்கம் ஆதிசேசய்யா! உலகப் பேரறிஞரான ஆதிசேசய்யா, சர்வதேச நிறுவனமான யுனெஸ்கோவின் முக்கிய தலைமை பொறுப்பில் அரும்பணி ஆற்றப் போன நிலையில் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெரும் தொண்டாற்றியுள்ளார்! இன்றைக்கு நாம் கொண்டாடும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் உருவாகவும், அது நின்று நிலை பெறவும் யுனெஸ்கோவிடம் இருந்து நிதி உதவி பெற்றுத் தந்தவர் ஆதிசேசய்யா! மூன்றாம் உலகத் தமிழ் மாநாட்டை பாரிஸ் மாநகரில் நடத்தி, சாதனை படைத்தவர்! இதன் மூலம் செம்மொழியான தமிழின் ...

உலகையே திரும்பி பார்க்க வைத்த வீரஞ் செறிந்த டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ரத்தமும், சதையுமாக உயிர்ப்புடன்  பதிவு செய்துள்ளது இந்த நூல்!  நூலை எழுதியவர் இந்த போராட்டத்தை கட்டமைத்து வழி நடத்திய ஐக்கிய விவசாயிகள் முன்னணி என்ற எஸ்.கே.எம்மின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன். அடிப்படையில் ஒரு தொழிற்சங்கவாதியான இவர் விவசாயிகள் போராட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தமிழகத்தின் அனைத்து விவசாய சங்கங்களையும் ஒன்றிணைத்து மிக இணக்கமாகவும், வலுவாகவும், சரியான திட்டமிடலுடன் செயல்பட்டு உழவர் போராட்டத்தை வழி நடத்தியவராவார். தன்னை முன்னிலைபடுத்திக் கொள்ளாமல், ...

திமுகவின் ஆரம்ப காலத் தூண்களில் முக்கியமானவர் இராம.அரங்கண்ணல். பெரியார், அண்ணாவிடம் குருகுலவாசம் செய்தவர். தனி மனித ஒழுக்கம்,  எதிரிகளையும் நண்பனாக்கிடும் சுபாவம், பொதுநலத் தொண்டு, நேர்மை ஆகியவற்றைக் கொண்ட அரங்கண்ணல் அரசியலிலும், சினிமாவிலும் சந்தித்த சவால்கள் சுவையானவை..!  சிறுவயதில் தீவிர காங்கிரஸ் பற்றாளராக இருந்த இராம.அரங்கண்ணல் தன் தமிழ் பற்றாலும், திருவாரூர் பள்ளித் தோழன் கருணாநிதியின் நட்பாலும் திராவிட இயக்கத்தின் பக்கம் நகர்கிறார். 15 வயதிலேயே அண்ணா, பெரியார் ஆகியோரோடு தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. இடையில் அண்ணாமலை பல்கலை மாணவனாக இருந்த போது அந்தக் கால ...

மகாபாரதத்தை எத்தனையோ பேர் எழுதியுள்ளனர். எத்தனை முறை படித்தாலும் சலிக்காது! அதில் விவரிக்கப்படும் பல்வேறு குணாம்சங்களைக் கொண்ட கதாபாத்திரங்கள் இன்றைய சமூகத்திலும் காணக் கிடைக்கின்றனர் என்பதே அதன் வெற்றிக்கு காரணம்! ஆனால், பாரதக் கதைகள் நெடுகிலும் பார்ப்பனர் மேன்மையே விதந்தோதப்படுகிறதே…ஏன்? மகாபாரதத்தில் மானுட மேன்மைகளை சொல்லும் கதாபாத்திரங்களும் உண்டு! மானுடத்தின் இழிவைச் சொல்லும் – அநீதி இழைப்பதில் உச்சம் தொட்ட – கதாபாத்திரங்களும் உண்டு! அன்பு, கருணை, கொடை வன்மை, பெருந்தன்மை, இரக்கம், வீரம், வீராப்பு, துரோகம், வெறுப்பு, வன்மம், ஆணவம், சஞ்சலம், சிறுமை…என ...

எத்தனை மேதமை! என்னே ஒரு புலமை! வியக்கதக்க பன்முகத் தன்மை…! என  பற்பல விதங்களில் நமக்கு பாரதியை அறியத் தருகிறது இந்த நூல்! பாரதி எழுத்துக்களை  படிப்பதிலும், ரசிப்பதிலும் நமக்கு ஒரு தேர்ந்த பயிற்சியை தருகின்றன இந்தக் கட்டுரைத் தொகுப்பு! படிக்கப் படிக்கத் திகட்டாத தேனாக ஆனந்தம் தருகின்றன யாவும்! பாரதி பக்தனாகவும், பாரதியை பேசுவதிலும், எழுதுவதிலும் பித்தனாகவும் உள்ள கடற்கரய் மத்த விலாச அங்கதம் ‘யாமறிந்த புலவன்’ என்ற பெயரில் பாரதியை பற்றிய நூற்றாண்டு கால விமர்சனக் கட்டுரைகளை தொகுத்துள்ளார். பாரதியைக் குறித்து ...

மறக்கப்பட்ட மக்கள் திரைப்படக் கலைஞர் நிமாய் கோஷ்”  எதார்த்த திரைப்படத்தின் முன்னோடியும், திரைத்துறை  தொழிற்சங்கத்தை தோற்றுவித்தவருமான நிமாய் கோஷ் இந்திய திரைப்பட வரலாற்றில் தனி இடம் பெற்ற ஓர் அபூர்வ கலைஞர். அவரைப் பற்றிய விவரங்களை நன்கறியும் வாய்ப்பு தற்போது வெளிவந்திருக்கும் “நிமாய் கோஷ் : புதுநெறி காட்டிய திரைக் கலைஞர்” என்ற நூல் மூலம் கிடைத்தது. திரைப்படத் துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் அனைவருக்கும் வங்காள திரைப்பட மேதை சத்யஜித் ராய் பற்றிய அறிமுகம் கிடைத்து விடுகிறது. ஆனால், அவருக்கு  முன்னோடியாகவும், நண்பராகவும் ...

ரசனையுடன் கூடிய விழிப்புணர்வு கட்டுரைகள்! பொக்கணம் என்ற சொல்லுக்கு பை என்ற பொருளாம். இந்த நூல் சுற்றுச் சூழல், மருத்துவம், இலக்கியம், தொல்லியல்.. என சகல தரப்பிலான கட்டுரைகளை உள்ளட்டக்கிய ஒரு பையாகும்! இந்த நூலின் ஆசிரியர் பிரபல மருத்துவர் அ.உமர் பாரூக். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற புகழ் பெற்ற கணியன் பூங்குன்றனாரின் புற நானூற்றுப் பாடல் முழுவதையும் வரிக்கு வரி ஆய்வுக்கு உட்படுத்தி, புதிய சிந்தனை போக்கை பதிவு செய்கிறார். “தீதும், நன்றும் பிறர் தர வாரா”, என்பதும், “ஆற்று ...

மூளைக்குள் சுற்றுலா பெயருக்கேற்ப நம்மை ஒரு நீண்ட நெடிய பயனுள்ள அறிவார்ந்த ஒரு பயணத்திற்குள் இந்தப் புத்தகம் இட்டுச் செல்கின்றது. வெ இறையன்பு எழுதியிருக்கும் இந்த புத்தகம் 626 பக்கங்கள் கொண்டது.  இந்த புத்தகத்தில் உள்ள தகவல் களஞ்சியங்கள் நம்மை பிரமிக்க வைக்காமல் இல்லை. மூளையைப் பற்றிய விரிவான பல கதைகள் நிரம்பிய சுவாரஸ்யமான என்சைக்ளோபீடியா என்றுக் கூறலாம். கிட்டதட்ட மூளை சம்மந்தமாக எதையுமே விட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் ஆசிரியர் பரந்து விரிந்து தகவல்களை சேகரித்துள்ளார் என்பது தெரிகிறது. இதற்காக அவர் பல மருத்துவர்கள் ...