மூளைக்குள் சுற்றுலா பெயருக்கேற்ப நம்மை ஒரு நீண்ட நெடிய பயனுள்ள அறிவார்ந்த ஒரு பயணத்திற்குள் இந்தப் புத்தகம் இட்டுச் செல்கின்றது. வெ இறையன்பு எழுதியிருக்கும் இந்த புத்தகம் 626 பக்கங்கள் கொண்டது.  இந்த புத்தகத்தில் உள்ள தகவல் களஞ்சியங்கள் நம்மை பிரமிக்க வைக்காமல் இல்லை. மூளையைப் பற்றிய விரிவான பல கதைகள் நிரம்பிய சுவாரஸ்யமான என்சைக்ளோபீடியா என்றுக் கூறலாம். கிட்டதட்ட மூளை சம்மந்தமாக எதையுமே விட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் ஆசிரியர் பரந்து விரிந்து தகவல்களை சேகரித்துள்ளார் என்பது தெரிகிறது. இதற்காக அவர் பல மருத்துவர்கள் ...

வ.உ.சியை வாழ்க்கை துணையாக்கும் நூல்! இடது சமூக அரசியல்,கலை இலக்கிய காலாண்டிதழ் வ.உ.சியை நினைவு கூர்ந்து, சிறப்பிதழ் ஒன்றை வ.உ.சியின் 150 ஆவது பிறந்த நாளுக்கான ஆவண சிறப்பிதழாக நேர்த்தியாகக் கொண்டு வந்துள்ளது. வ.உ.சி குறித்து இது வரை ஏராளமான செய்திகள் வெளி வந்துள்ளது. ஆனால், இந்த இதழை படித்த போது இன்னும், இன்னும் வ.உ..சி பற்றி பேசவும், எழுதவும் நிறைய உள்ளது எனத் தோன்றியது! அவ்வளவு அரிய தகவல்களை தொகுத்து தந்துள்ளனர்! ‘மக்கள் வாழ்வில் வ.உ.சியின் அறியப் படாத வாய்மொழிக் கதைகள்’ என்ற ...

இந்திய ஆட்சிப் பணியும் சினிமாவும் மற்றும் நானும்- ஞான ராஜசேகரன் இந்த நூலில் ஞான ராஜசேகரன் அவர் கேரளாவில் மாவட்ட ஆட்சியராக இருந்த போது சந்திக்க நேர்ந்த சிக்கலான பிரச்சினைகளையும், அதற்கு தான் காண்ட தீர்வுகளையும் சுவைபடக் கூறியுள்ளார். அதே போல அவர் இயக்கிய புகழ் பெற்ற திரைப்படங்களின் உருவாக்க அனுபவங்களையும் வெகு சுவாரஷ்யமாக எழுதியுள்ளார்.  ஞான ராஜசேகரன் மாவட்ட ஆட்சியராக பணியாற்றும்போதே , கேரள அரசின் சிறப்பு அனுமதியைப் பெற்று முத்திரை பதித்த திரைப்படங்களை இயக்கியது சாதனையே. திரைப்படத் தணிக்கை துறை அதிகாரியாகவும் ...

உலகப் புகழ் கல்வியாளராக, பொருளாதார நிபுணராகத் திகழ்ந்த மால்கம் ஆதிசேசய்யா ஒரு தமிழர். இவர் யுனெஸ்கோ மூலமாக உலகத்திற்கு மட்டுமல்ல, தமிழகம் மற்றும் இந்திய கல்வி, பொருளாதார முன்னேற்றங்களுக்கும் பங்களித்தவர்! இந்த நூல் இந்திய சமூக, பொருளாதாரம் பற்றிய அவரது அரிய பதிவுகளாகும்! மால்கம் ஆதிசேசய்யா வேலூரில் பிறந்தவர். லயோலா கல்லூரி, கேம்பிரிட்ஜ் கிங்ஸ் காலேஜ், லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிஸ் போன்ற புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்தவர்! பிறகு சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் ஆறாண்டுகள் பணியாற்றியவர்! பிறகு, ஜெனீவாவில் உள்ள உலக ...

தென்னாப்பிரிக்காவில் காந்தி என்ற நூல் புதியதாக காந்திப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்ற முனைப்போடும் இதுவரை பலரின் கவனத்தில் இருந்து தப்பிய அரிய தகவல்களை ஆதாரபூர்வமாக கொண்டும்  எழுதபட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் பிரபல வரலாற்றாய்வாளர் ராமச் சந்திர குஹா எழுதிய Gandhi before india என்ற நூலை மிகச் சிறப்பாக தமிழுக்கு தந்துள்ளார் சிவசக்தி சரவணன். காந்தி ஒரு மக்கள் தலைவராக உருப்பெற்றது தென்னாப்பிரிக்காவில். அதன் பிறகு இந்தியாவில் வெற்றிகரமாக அவர் 30 ஆண்டுகள் நடத்திய போராட்டங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக அமைந்தது தென்னாப்பிரிக்காவில் அவர் ...

ஜெயகாந்தனை நேசிக்கும் தீவிர வாசகப் பரப்புக்காக இரு நூல்கள் வெளி வந்துள்ளன. ஜெயகாந்தனை குறித்து எவ்வளவு வாசித்தாலும், பேசினாலும் திகட்டுவதே இல்லை! இரண்டு நூல்களையும் படைத்தவர், ஜெயகாந்தனைக் குறித்து உள்ளும், புறமும் நன்கறிந்த எழில்முத்து. அறியப்படாத கூடுதல் தகவல்கள்! நூலாசிரியர் எழில்முத்து மறைந்த புலவர் கோவேந்தனின் மகன்! கோவேந்தன் தமிழ் கூறும் நல்லுலகு அறிந்த நல்ல கவிஞர், கட்டுரையாளர், மொழிப் பெயர்ப்பாளரும் கூட. அது மட்டுமல்ல, நூலாசிரியரின் மாமனார் எழுத்தாளர் தேவபாரதியும் ஜெயகாந்தனின் நெருங்கிய மிக நெருங்கிய ஆரம்ப கால சகா தான்! நூலாசிரியர் ...

‘ஏழரைப் பங்காளி வகையறா’  மதுரை இஸ்மாயில்புரத்தை மையமாகக் கொண்டு, இஸ்லாமிய சமூகத்தின் வாழ்வியலை நேர்கோட்டில் சொல்லும் யதார்த்தமான நாவல் இது. எஸ். அர்ஷியா எழுதிய இந்த நாவல் எளிய மனிதர்களின் உண்மைக் கதையாகும் .வாழத் தெரியாதவன் குடும்பம் படும் பாட்டை பேசுகிறது! ‘ஒரு சமூகத்தின் வாழ்வியலை, மூன்று தலைமுறை ஊடாக,  பேசுகிறது. இது வளமான இலக்கிய நாவல்’ என்று கூறுகிறார் பேரா.எஸ்.தோதாத்ரி். தன் முன்னோர்களின் வாழ்வியலை இழையாகக் கொண்டு ஏழரைப் பங்காளி என்ற வம்சத்தின் பெயரையே நாவலாக்கி உள்ளார், அர்ஷியா. 15 ஆம் நூற்றாண்டில் இஸ்மாயில் ...

‘இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள்’ என்ற நூல் இந்த காலகட்டத்திற்கான ஒரு அவசியத் தேவை! கருணையற்ற கார்ப்பரேட் மருத்துவத்திடம் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளும் சகல வழிமுறைகளையும் எளிமையாக விளக்குகிறது! நோயாளிகள் மட்டுமல்ல, மருத்துவர்களும் வாசிக்க வேண்டிய நூலாகும்! இன்றைக்கு நாம் சந்திக்கும் மிகப் பெரிய சவால்களில் ஒன்று மருத்துவ தொழிலில் மனிதாபிமானமற்ற நிலைமையாகும். மருத்துவத்தை லாபம் கொழுக்கும் வணிகமாக பார்க்கும் மனநிலைக்கு நவீன சமூகம் கட்டமைக்கப்பட்டு உள்ளது. வணிகத்தில் கடை பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச நெறிமுறைகளைக் கூட பின்பற்ற மறுத்து நோயாளிகளை ஏமாற்றியும், அறியாமைக்குள் ...

தீஸ்தா! அச்சமில்லாதவர்! மோடியை அஞ்ச வைத்துக் கொண்டிருக்கும் மனித உரிமைப் போராளி! குஜராத் படுகொலையையும், அதில் மோடியின் தொடர்பையும் உலகறியச் செய்தவர். ஜெயமோகனின் அறம் மகத்தான மானுட நேயப் படைப்பு! இதில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு உண்மைக் கதையும் நம் உள்ளத்தை உலுக்குபவை. குஜராத் கலவர்ம் மற்றும் படுகொலைகளுக்கு நியாயம் கேட்டு இடையறாத சட்ட போராட்டதை நடத்திய தீஸ்தாவை தற்போது ஒன்றிய அரசு கைது செய்துள்ள நிலையில் இந்த நூல் முக்கியத்துவமாகிறது. பத்திரிகையாளரான தீஸ்தா செதல்வாட் எழுதிய  ‘ தீஸ்தா செதல்வாட் நினைவோடை – அரசமைப்புச் ...

இவ்வளவு வெளிப்படையாகவும், இணக்கமாகவும் மாநில முதல்வர்களுடன் ஒரு பிரதமர் தொடர்ந்து உறவாடி இருக்க முடியுமா? என்ற ஆச்சரியத்தை தருகின்றன, நேருவின் கடிதங்கள்! பாகிஸ்தான் உடனான உறவை பகையின்றி பேணுவதில் தான் இரு நாடுகளுக்குமே எதிர்காலம்.. போன்ற கருத்துக்கள்! இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்கலால் நேரு, மாநில முதலமைச்சர்களுக்கு, 1947 முதல் 1963 வரை 15 நாட்களுக்கு ஒரு முறை கடிதங்கள் எழுதியுள்ளார். ஆய்வாளரான மாதவ் கோஸ்லா (Madhav Khosla), இந்தக் கடிதங்களை, ‘Letters for a Nation’ என்ற பெயரில் நூலாக தொகுத்துள்ளார். இதனை ...