கம்யூனிஸத்தை பேசவும், எழுதவும் பலர் உள்ளனர். ஆனால், கம்யூனிஸ்டாக வாழ்வது மிகக் கஷ்டமாகும்! ஆனால், காந்தி இயல்பிலேயே கம்யூனிஸ குணாம்சங்களோடு இருந்தார்! அந்தப்படியே தான் அவரது போனிக்ஸ், டால்ஸ்டாய் பண்ணை, சபர்மதி, சேவாகிராம் ஆகிய ஆஸ்ரம வாழ்க்கையை ஒரு கம்யூனாக கட்டமைத்து, யாவருக்கும் சமமான வாழ்க்கையை வாழ்ந்து காண்பித்தார்! இன்னும் எத்தனையெத்தனை விவகாரங்களில் அவர் ஒரு தீவிர கம்யூனிஸ்டாக வெளிப்பட்டார் எனப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது! காந்தியின் கட்டுரைகளும், பேச்சுகளும் தொண்ணூறு தொகுதிகளாக வந்துள்ளன. அரசியல், சமூகம், பன்னாட்டு விவகாரம்  என பலவற்றை  தொடர்ந்து ...

இது 18 ம் நூற்றாண்டு நாயக்கர் கால சமூகத்தை துல்லியமாக  சித்தரிக்கும் நாவல்! சாதிகளுக்கிடையிலான நுட்பமான மோதல்களும், ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்வதற்கான சூழ்ச்சிகளும், அதனால் ஏற்படும் பேரழிவுகளும், பாதிப்பு ஏற்படுத்துவர்களின் பதற்றமும், பாதிக்கப்படுவர்களின் சீற்றமுமான வரலாற்றில் நாம் இழந்ததையும், மீண்டதையும் பல அரிய தகவல்களுடன் படு விறு, விறுப்புடன் சுவைபடச் சொல்கிறது இரா.முத்துநாகுவின் ’சுளுந்தீ’ ஒரு சமுதாயம் எந்தக் காலத்திலும், அதனளவில் நிறைவாகவே இருந்திருக்கிறது. இப்போது ‘அரசு இரகசியம்’ என்றால், அப்போது ‘அரண்மனைக் கமுக்கம்’; இப்போது ‘காவல்துறை’ என்றால், அப்போது ‘குடிபடை’ , ...

வீரப்பனை பற்றி தெரிந்த நமக்கு வீரப்பன் குழுவில் உள்ள சாகசமான நபர்களையும்,அவர்களின் குணாதிசியங்களையும் பற்றி தெரியாது. வீரப்பனை, அவர் குழுவின் பல்வேறு அங்கத்தினர்களை, இவர்களுடன் தொடர்பிலிருந்த மக்களை, போலீசின் தேடுதல் வேட்டைகளை பற்றியெல்லாம், மிகவும் விலாவாரியாக, துல்லியமாக எழுதப்பட்ட நூல்களே இவை! ஒரு மனிதனைப் பற்றி 2000 பக்கங்களுக்கு சலிப்பேயின்றி, விறுவிறுப்பாக எழுத முடியுமா? ஆம் முடியும் என்பதை நிருபிக்கிறது பத்திரிகையாளர் சிவசுப்ரமணியம் எழுதி வெளிவந்து உள்ள புத்தகங்கள்! அவரது “வீரப்பன் வாழ்ந்ததும்-விழுந்ததும்”  மொத்தம் 4 பாகங்களாக  வெளிவந்துள்ளன! தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸார் ...

அட, எல்லாத்திலுமா சாதியப் பார்வை…? நீர், நிலம், தீ, காற்று, வானம், திசைகள், தாவரங்கள்,உயிரினங்கள்…ஆகிய  ஒவ்வொன்றிலுமே சாதியக் கண்ணோட்டமா..? என நம்மை திகைக்க வைக்கும் நூலை சூழலியல் ஆய்வு நோக்கில் படைத்துள்ளார் நக்கீரன். எத்தனையெத்தனை புதிய கோணங்களில் நம்மை சிந்திக்க தூண்டுகிறார்..வாவ்! நம் நாட்டின்  பாரம்பரியமான கருப்பட்டியை கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார்;  ஆனால் வெளிநாட்டில் இருந்து வந்த  தேங்காய் எப்படி கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டது’ என்று கேள்வி எழுப்புகிறார் நக்கீரன். ‘சூழலும் சாதியும்’ என்ற அவரது புதிய நூல் வெளி வந்து மூன்று தான் ஆகியுள்ளது. ...