தமிழக வேளாண்மை நிதிநிலை அறிக்கை  கண் கவரும் ஜிகினா தோரண அறிவிப்புகளால் களை கட்டுகிறது! இதற்கு இத்தனை கோடி! அதற்கு அத்தனை கோடி! என.. அறிவிப்புகள்! ஆனால், கடைசியில் விவசாயிகள் விழுந்து அழுவதோ.., தெருக் கோடியில்! உண்மையில் யாருக்கானது இந்த வேளாண் நிதி நிலை அறிக்கை..? வெளி நாடுகளுக்கு விவசாயிகளை அழைத்துச் செல்லும் திட்டம், ரூ.14 ஆயிரம் கோடி பயிர்கடன், ரூ.1,500 கோடி வட்டிக்கடன், 77 லட்சம் பனங்கன்றுகள் 15 லட்சம் தென்னங்கன்றுகள், பாரம்பரிய நெல் உற்பத்திக்கு ஊக்கம், தரிசு நில மேம்பாட்டு, சிறுதானிய ...

பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் நல்ல மனிதர் தான்! ஆனால், நிதி அமைச்சராக அவர் படுதோல்வி அடைந்து கொண்டுள்ளார் என்பதற்கு இந்த பட்ஜெட்டே சாட்சியாகும்!  மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்த, திமுக ஆட்சியின் பட்ஜெட் இவ்வளவு ஆர்வம் காட்டுவதேன்? திமுக அரசு பதவி ஏற்ற பிறகு வெளியிடப்பட்டு இருக்கும் மூன்றாவது பட்ஜெட் இது! பி.டி.ஆர். சிறந்த பொருளாதார நிபுணர் தான்! ஆனால், அவரை சரியாக சுதந்திரமாக இயங்கவிடாதது ஒரு புறமும், தமிழக பொருளாதார கள நிலவரங்கள் அவருக்கு போதுமான அளவுக்கு தெரியாமல் ...

உலகின் மிகப் பெரிய பணக்கார நாடான அமெரிக்காவிலேயே மூன்று வங்கிகள் திவாலாகி உள்ளன! இவை எப்படி திவாலாகின? என்னென்ன காரணங்கள்? அமெரிக்க மக்களும், அரசும் இவற்றை எப்படி அணுகுகின்றன? இதன் எதிர் வினையாக இந்தியா என்ன பாதிப்பை சந்திக்கும். இந்திய வங்கிகள் பலமாக உள்ளனவா..? ஒரு அலசல்! உலகம் முழுக்க ஒரு வித பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது! அடுத்தடுத்து என ஒரே வாரத்தில், அமெரிக்காவின் மூன்று வங்கிகள் திவாலாகி விட்டன. திவாலானதில் மிகப் புகழ் பெற்ற பெரிய வங்கி, சிலிக்கான் வேலி வங்கியாகும். ...

அரசின் வசம் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்கள், சொத்துக்களை கண்டறிந்து தனியாருக்கு தாரை வார்க்க பாஜக அரசு என்.எல்.எம்.சி என்ற புதிய அமைப்பை தோற்றுவித்து உள்ளது! இனி இந்தியா என்பது மக்களுக்கானதில்லை! சில தனி முதலாளிகளின் சொத்து என்பதே பாஜவின் செயல் திட்டமான என்.எல்.எம்.சி! ஆட்சியில் அமர்ந்தது முதல் பாஜக அரசு நம் முன்னோர்கள் பாடுபட்டு உருவாக்கிய அரசின் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை செய்து வருவது நம் எல்லோருக்கும் தெரியும். அது போல தற்போது அரசிடம் பயன்படுத்தப்படாமல் உள்ள உபரி ...

ஆருத்ரா கோல்டு, ஐ.எப்.எஸ்..போன்ற மோசடி நிறுவன வரிசையில் ஹிஜாவு  அசோசியேட்டும் இணைந்துள்ளது. இந்த மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள்  சுமார் 40 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆட்சியாளர்களுக்கும், காவல்துறைக்கும் தெரியாமலா இவ்வளவு மோசடிகள் அரங்கேறுகின்றன..? காலம்தோறும் இது போன்ற மோசடி நிறுவனங்கள் முளைத்து வந்து வந்து நம்ப முடியாத அளவு வட்டிப் பணம் தருவதாக விளம்பரபப்டுத்தி வசூல் வேட்டை நடத்துவதும்,பின்னர் வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது. ஒவ்வொரு முறையும் ஏமாற்றும் நிறுவனத்தின் பெயர் மாறுகிறது. ஏமாற்றும் முறை மாறுகிறது! ...

வாவ்! கார்ப்பரேட்களுக்கு வரிச் சலுகைகள் அள்ளி வழங்கப்படுவெதென்ன? எளிய மக்கள் மீதான மறைமுக வரிச்சுமை பற்றி கப்சிப்! பல கோடி தொழிலாளர்களின் அமைப்பு சாரா துறைகளுக்கு அரோகரா! விவசாயத்திற்கும், கல்விக்கும், மருத்துவத்திற்கும் நிதியே இல்லை! ஆக, பட்ஜெட்டின் ஒவ்வொரு அம்சமும் இந்த ஆட்சி யாருக்கானது என்பதை காட்டுகிறது! 2024 -ல் தேர்தலில் மக்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நரேந்திர மோடி அரசு தனது “கடைசி” பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது! உலக பொருளாதாரமே , உக்ரைன் போரினாலும், உலக நாடுகள் இருவேறு அணிகளாக பிரிந்து ...

கைவிடப்பட்ட சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமாம்! இத் திட்டத்தை முன்பு அதிமுகவும், பாஜகவும் கைகோர்த்து எதிர்த்துள்ளன! இந்த திட்டம் மன்மோகன் சிங் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், எதனால் கைவிடப்பட்டது? என்ன நடந்தது? மீண்டும் இதை செயல்படுத்த வாய்ப்புள்ளதா?  பத்தாண்டுகளுக்கு முன்பு “சேது சமுத்திர திட்ட பணிகளை மீண்டும் தொடர்ந்தாக வேண்டும்” என தி.மு.க எம்.பிகள் வலியுறுத்த, அதை எதிர்த்து அ.தி.மு.க, பா.ஜ.க எம்.பிகள் இராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி பாராளுமன்றமே ஸ்தம்பித்து, அவையை ஒத்தி வைக்க வேண்டியதாயிற்று என்பதை ...

அதிரடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கி வாசலில் வரிசையில் நின்றதில் மயங்கி விழுந்தும், தற்கொலை செய்தும் 150 பேர் இறந்தனர்! எத்தனையோ கோடி பேர் எதிர்காலத்தை தொலைத்தனர். சுதந்திரத்திற்கு பிறகான இந்தியா சந்தித்த சொல்லொண்ணா துயரம் இது! இதை உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கிறதா? ‘நோட் பந்தி’ என்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்ச்சியும், அவலமும் நாடறிந்த ரகசியம் . அது சாமானிய மக்களுக்கு இழைத்த கொடுமையையும், ஏராளமான சிறு, குறு தொழில்களை முடக்கியதும், மறுப்பார் யாரும் இல்லை. அன்று பட்ட அடியிலிருந்து ...

மத்திய அரசு டிஜிட்டல் கரன்சி வெளியிட்டுள்ளது.  இதனால் ஏற்படப் போகும் தாக்கங்கள், மாற்றங்கள் என்ன?  க்ரிட்டோ கரன்சி யை வாங்க வைக்க  பல முயற்சிகள் நடக்கின்றன! க்ரிப்டோ கரன்சியை வாங்கலாமா?  தாறுமாறாக நடக்கும் க்ரிப்டோ கரன்சி மோசடிகளுக்கு என்ன தீர்வு?  க்ரிப்டோ கரன்சியை இந்திய அரசே வெளியிடப் போகிறது என்று பலர் நினைத்துக் கொண்டு இருந்தனர். அதன் முன்னோடியாக தான் முன்கூட்டியே க்ரிப்டோ வர்த்தகத்திற்கு வரி விதிக்கப்பட்டுள்ளது என்றும் கிரிப்டோ வர்த்தகத்தில் ஈடுபட்ட வந்துள்ளவர்கள் பேசி வந்தனர். இந்தக் கட்டுரைக்குள் நுழைவதற்கு முன்பு க்ரிப்டோ ...

இந்திய ரூபாயின் மதிப்பு உலக சந்தையில் குறைந்து அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது தொடரும் பட்சத்தில் நினைத்துப் பார்க்க முடியாத பொருளாதார வீழ்ச்சியை இந்தியா சந்திக்கும்! சிறு, குறுந்தொழில்கள் செய்வோர், மாதந்திர சம்பளத்தை நம்பி இருப்போர் நிலைமை கவலைக்கிடமாகும்! நமக்கு வாய்த்த நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், “இந்திய ரூபாய் வலுவிழக்கவில்லை, அமெரிக்க டாலர்  வலுப்பெற்றுள்ளது அவ்வளவே ” என திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இத்தகைய பதில்களை கண்டு நகைப்பதா அல்லது சினங்கொள்வதா என பொருளாதார வல்லுநர்களும் , விவரம் அறிந்தவர்களும் திகைத்து ...