அரசின் வசம் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்கள், சொத்துக்களை கண்டறிந்து தனியாருக்கு தாரை வார்க்க பாஜக அரசு என்.எல்.எம்.சி என்ற புதிய அமைப்பை தோற்றுவித்து உள்ளது! இனி இந்தியா என்பது மக்களுக்கானதில்லை! சில தனி முதலாளிகளின் சொத்து என்பதே பாஜவின் செயல் திட்டமான என்.எல்.எம்.சி! ஆட்சியில் அமர்ந்தது முதல் பாஜக அரசு நம் முன்னோர்கள் பாடுபட்டு உருவாக்கிய அரசின் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை செய்து வருவது நம் எல்லோருக்கும் தெரியும். அது போல தற்போது அரசிடம் பயன்படுத்தப்படாமல் உள்ள உபரி ...

ஆருத்ரா கோல்டு, ஐ.எப்.எஸ்..போன்ற மோசடி நிறுவன வரிசையில் ஹிஜாவு  அசோசியேட்டும் இணைந்துள்ளது. இந்த மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள்  சுமார் 40 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆட்சியாளர்களுக்கும், காவல்துறைக்கும் தெரியாமலா இவ்வளவு மோசடிகள் அரங்கேறுகின்றன..? காலம்தோறும் இது போன்ற மோசடி நிறுவனங்கள் முளைத்து வந்து வந்து நம்ப முடியாத அளவு வட்டிப் பணம் தருவதாக விளம்பரபப்டுத்தி வசூல் வேட்டை நடத்துவதும்,பின்னர் வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது. ஒவ்வொரு முறையும் ஏமாற்றும் நிறுவனத்தின் பெயர் மாறுகிறது. ஏமாற்றும் முறை மாறுகிறது! ...

வாவ்! கார்ப்பரேட்களுக்கு வரிச் சலுகைகள் அள்ளி வழங்கப்படுவெதென்ன? எளிய மக்கள் மீதான மறைமுக வரிச்சுமை பற்றி கப்சிப்! பல கோடி தொழிலாளர்களின் அமைப்பு சாரா துறைகளுக்கு அரோகரா! விவசாயத்திற்கும், கல்விக்கும், மருத்துவத்திற்கும் நிதியே இல்லை! ஆக, பட்ஜெட்டின் ஒவ்வொரு அம்சமும் இந்த ஆட்சி யாருக்கானது என்பதை காட்டுகிறது! 2024 -ல் தேர்தலில் மக்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நரேந்திர மோடி அரசு தனது “கடைசி” பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது! உலக பொருளாதாரமே , உக்ரைன் போரினாலும், உலக நாடுகள் இருவேறு அணிகளாக பிரிந்து ...

கைவிடப்பட்ட சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமாம்! இத் திட்டத்தை முன்பு அதிமுகவும், பாஜகவும் கைகோர்த்து எதிர்த்துள்ளன! இந்த திட்டம் மன்மோகன் சிங் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், எதனால் கைவிடப்பட்டது? என்ன நடந்தது? மீண்டும் இதை செயல்படுத்த வாய்ப்புள்ளதா?  பத்தாண்டுகளுக்கு முன்பு “சேது சமுத்திர திட்ட பணிகளை மீண்டும் தொடர்ந்தாக வேண்டும்” என தி.மு.க எம்.பிகள் வலியுறுத்த, அதை எதிர்த்து அ.தி.மு.க, பா.ஜ.க எம்.பிகள் இராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி பாராளுமன்றமே ஸ்தம்பித்து, அவையை ஒத்தி வைக்க வேண்டியதாயிற்று என்பதை ...

அதிரடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கி வாசலில் வரிசையில் நின்றதில் மயங்கி விழுந்தும், தற்கொலை செய்தும் 150 பேர் இறந்தனர்! எத்தனையோ கோடி பேர் எதிர்காலத்தை தொலைத்தனர். சுதந்திரத்திற்கு பிறகான இந்தியா சந்தித்த சொல்லொண்ணா துயரம் இது! இதை உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கிறதா? ‘நோட் பந்தி’ என்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்ச்சியும், அவலமும் நாடறிந்த ரகசியம் . அது சாமானிய மக்களுக்கு இழைத்த கொடுமையையும், ஏராளமான சிறு, குறு தொழில்களை முடக்கியதும், மறுப்பார் யாரும் இல்லை. அன்று பட்ட அடியிலிருந்து ...

மத்திய அரசு டிஜிட்டல் கரன்சி வெளியிட்டுள்ளது.  இதனால் ஏற்படப் போகும் தாக்கங்கள், மாற்றங்கள் என்ன?  க்ரிட்டோ கரன்சி யை வாங்க வைக்க  பல முயற்சிகள் நடக்கின்றன! க்ரிப்டோ கரன்சியை வாங்கலாமா?  தாறுமாறாக நடக்கும் க்ரிப்டோ கரன்சி மோசடிகளுக்கு என்ன தீர்வு?  க்ரிப்டோ கரன்சியை இந்திய அரசே வெளியிடப் போகிறது என்று பலர் நினைத்துக் கொண்டு இருந்தனர். அதன் முன்னோடியாக தான் முன்கூட்டியே க்ரிப்டோ வர்த்தகத்திற்கு வரி விதிக்கப்பட்டுள்ளது என்றும் கிரிப்டோ வர்த்தகத்தில் ஈடுபட்ட வந்துள்ளவர்கள் பேசி வந்தனர். இந்தக் கட்டுரைக்குள் நுழைவதற்கு முன்பு க்ரிப்டோ ...

இந்திய ரூபாயின் மதிப்பு உலக சந்தையில் குறைந்து அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது தொடரும் பட்சத்தில் நினைத்துப் பார்க்க முடியாத பொருளாதார வீழ்ச்சியை இந்தியா சந்திக்கும்! சிறு, குறுந்தொழில்கள் செய்வோர், மாதந்திர சம்பளத்தை நம்பி இருப்போர் நிலைமை கவலைக்கிடமாகும்! நமக்கு வாய்த்த நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், “இந்திய ரூபாய் வலுவிழக்கவில்லை, அமெரிக்க டாலர்  வலுப்பெற்றுள்ளது அவ்வளவே ” என திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இத்தகைய பதில்களை கண்டு நகைப்பதா அல்லது சினங்கொள்வதா என பொருளாதார வல்லுநர்களும் , விவரம் அறிந்தவர்களும் திகைத்து ...

லாபம் தரும் வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்க்கத் திட்டமிடும் பாஜக அரசு! தனியார்மயம் என்பது சாதாரண மக்களுக்கு இனி ரயில் பயணத்தை எட்டாக்கனியாக்கிவிடும்! பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும்! தட்சிண ரயில்வே பென்சனர் சங்கத் தலைவர்  ஆர்.இளங்கோவன் நேர்காணல்: இரயில்வேயை தனியாருக்கு கொடுத்தால் மக்களுக்கு என்ன இழப்பு? நட்டத்தில் இயங்கி வருகிறது என்பதால் தனியாருக்கு தருகிறார்களா? தாம்பரத்திலிருந்து கடற்கரை வரை செல்ல பத்து ரூபாய்தான். இதிலும்  மாதாந்திர பயணச்சீட்டிற்கு 150 ரூபாய்தான் . அதாவது  25% தான் மாதாந்திர பயணச்சீட்டிற்கான கட்டணமாக வசூலிக்கிறார்கள். பயணிகளில் 64% பேர் ...

ஆகா, உடனே பணம் கிடைக்கிறதே என லோன் ஆப் மூலமாக கடன் வாங்கியவர்கள் இன்று நிம்மதியைத் தொலைத்து கதறுகிறாங்க பைத்தியம் புடிச்ச மாதிரி! இன்னும் சில பேர் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்! கண்ணுக்கு தெரியாதவர்களிடம் இருந்து பெறும் கடன்கள் நம்மையே காவு கேட்கும்! கடந்த ஒரு மாதத்தில் என் நெருங்கிய நண்பர்கள் இருவருக்கு நேர்ந்த சம்பவங்கள் யாரையும் உலுக்கி எடுத்துவிடும்! இரண்டு சம்பவங்களையும் நேரிடையாக சந்திக்கும் சூழல் எனக்கு உருவானது. கடன் வாங்குவது பொதுவாக எளிதான காரியம் இல்லை. வங்கி, நிதி நிறுவனங்களில் பல கட்ட ...

பொருளாதாரத்தில் இந்தியா வளர்ச்சி பாதையில் பயணப்படுவதாக பாஜக அரசு பொய்யான புள்ளி விபரங்களைத் தந்து கொண்டுள்ளது! ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது! உண்மையில், அதிகமாக கடன்பட்டு, இந்தியா வீழ்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருப்பதை இந்தக் கட்டுரை தோலுரிக்கிறது! இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 13, 2022 அன்று, ”அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் உற்பத்தித் துறையில் முதலீடு செய்வதைத் தடுப்பது என்ன?” என்று தொழில்துறையினரை கேள்வி கேட்டார்.  இது, முதலீடுகளை கவர்வதில் இந்தியா தோல்வி அடைந்து விட்டது என்ற ஒப்புதல் வாக்குமூலமாகும்! முதலீட்டாளர்களுக்கு ...