எதனால் வங்கிகளில் போலி வகைகளை வைத்து பணம் பெற்று ஏமாற்றும் செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன? எப்படி தடுப்பது? ஒவ்வொரு நிமிடமும் கவனமாக இருக்கவேண்டிய வேலை  வங்கிப் பணியாகும். ஒரு நிமிடக் கவன குறைவும் பெரிய பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். கவன குறைவால் உயிர் சேதம் வங்கி பணியில் ஏற்படாது என்றாலும், கோடிக்கணக்கான பணம் ஏமாற, ஏமாற்ற வழி உண்டு. சமீபமாக கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து பல கோடி மோசடி செய்தது வெளிவந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள கூட்டுறுவு வங்கியில் 2 கோடி ...

சம்பாதிக்க கற்றுக் கொள்வதற்குள் கடன் வாங்க கற்றுக் கொடுக்கும் வங்கிகள்! தனி நபர் கடன்கள்,கிரடிட் கார்டுகள், Lazypay.. இந்த வலைப் பின்னலுக்கு பின்னால் இருக்கும் சூழ்ச்சிகள் என்ன..? கண்ணை மூடிக் கொண்டு கடன் வாங்கியவர்களின் கதி என்னவாகிறது..? இந்தியாவில் பெரும்பாலான மக்கள், அடி நிலை, நடுத்தர நிலை மக்களாகும். இவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் பணத் தட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்கும்.  இவர்களிடம் வங்கிகளே நாங்கள் தனிநபர் கடன் கொடுக்கிறோம், அதற்கு எந்த வித அடமானமும் தேவை இல்லை. உங்கள் சம்பள விவரம், வங்கி ஸ்டேட்மென்ட் ...

திடீரென்று அமேசான் நிறுவனத்தின் மீது ஆர்.எஸ்.எஸ் பாய்கிறதே..? ஏன் இந்த பாய்ச்சல்..? இதன் பின்னணி என்ன..? அமேசான் இந்தியாவில் மிக வெற்றிகரமாக இயங்கும் பிரதான நிறுவனமாக உள்ளது! இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளிலும் அமேசான் தான் முதலிடத்தில் உள்ளது! தற்போது அமேசான் முதல் முறையாக ஈகாமர்ஸ் மற்றும் ரீடைல் வர்த்தகத்தைத் தாண்டி வெல்த் மேனேஜ்மென்ட் துறையில் முதலீடு செய்து வருகிறது. அமேசான் நிறுவனம் ஸ்மால்கேஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 40 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டுச் சுற்றில் முதலீடு செய்துள்ளது!அமேசான் இந்தியாவில் நேரடியாக ஒரு ...

தங்கத்தின் தரத்தை உறுதிபடுத்தும் நல்ல முயற்சியாக தெரிந்தாலும், நடைமுறையில் படு சிக்கலான சட்டமே இது! ஹால்மார்க் முத்திரை இருப்பதாலேயே தரம் உறுதியாகிவிடாது! இதன் நடைமுறைபடுத்தும் வழிமுறைகளைப் பார்க்கும் போது சிறிய நகை வியாபாரிகளை இந்த தொழிலில் இருந்து அப்புறப்படுத்தும் சூழ்ச்சியா..? என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. என்ன செய்யலாம் அரசு? உலகத்திலேயே அதிகமாக தங்க நகைகளை பயன்படுத்தும் நாடு இந்தியா! அதிலும் தமிழகம் முதலிடம்! நகை தயாரிப்பாளர்களில் நேர்மையானவர்கள் மிகக் குறைவு! எத்தனை கேரட் தங்கம் என்பதில் தான் அதன் தரம் இருக்கிறது! ...

முதுகெலும்புள்ள – சுய அறிவுள்ள –  ஒரு நிதி அமைச்சர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளார் என நினைத்து சந்தோஷப்பட்டேன். பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் இந்த சுயமரியாதையையும், சுய அடையாளத்தையும் மீட்டெடுக்கும் நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்கு முதல் நன்றியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியப்படுத்தி விடுகிறேன். ஏனென்றால் ஒரு பொலிடிகல் வில் பவர் இல்லாமல் இந்த நிதி நிலை அறிக்கைக்கு முதல்வர் ஒத்துழைப்பும், உறு துணையும் தந்திருக்க முடியாது! நிதிநிலை அறிக்கை குறித்து விரிவாக வியாக்கியானம் செய்ய விரும்பவில்லை! முக்கிய அம்சங்களை மட்டும் கவனப்படுத்துகிறேன். ஒரு மாநில அரசு சிறபாக செயல்படுவதற்கு ...

வாகனம் எங்களுடையது. அதன் மெயிண்டன்ஸும் எங்களுடையது, உழைப்பும் எங்களுடையது. ஆனால், பலன்களோ ( ஓலா, உபர்) அவர்களுடையது! பாதிப்போ எங்களுடையது. இதை எத்தனை நாளைக்கு வேடிக்கை பார்க்க போகின்றன மத்திய மாநில அரசுகள்? என்று கேட்கும் – விரக்தியின் விளிம்பில் இருக்கும்  – வாகன ஓட்டிகள் பக்கம் அரசின் கவனம் திரும்புமா…? ஓலா உபர் நிறுவனங்களின் பகாசூரக் கொள்ளையை தெரிந்தும் தெரியாதது மாதிரி வேடிக்கை பார்க்கும் அரசின் அலட்சியத்தால் ஆயிரக்கணக்காக வாகன ஓட்டிகள் வீதி இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது தான் அண்ணா ...

வழக்கத்திற்கும் அதிகமாகவே இந்த சட்டமன்ற கூட்டத் தொடர் குறித்த விமர்சனங்கள் பொது வெளியில் விவாதிக்கப்பட்டு வருகின்றன! திமுக அரசின் மீதான மக்களின் எதிர்பார்ப்புகளும், நம்பிக்கைகளும் அதிகரித்துள்ளதன் விளைவாகவே இதை பார்க்க முடிகிறது. இன்றைய கவர்னர் உரையில் வரவேற்கதக்க முதல் அம்சம் ஒரு திராவிட இயக்க அரசாங்கத்திற்கு இசைவாக கவர்னர் பேசியுள்ளார் என்பதே! எனினும், இது சந்தர்ப்ப சூழலுக்காக அவரது உதடு உரைக்கும் வார்த்தைகளே  என்ற புரிதல் இல்லாமல் நாம் புளகாங்கிதமடைந்துவிடக் கூடாது! நீட் தேர்வு ரத்து முயற்சிகள், உழவர் சந்தை, விவசாயத்திற்கு தனி பட்ஜெட், ...

அத்தியாவசிய உணவுப் பொருள் பால்! ஆவின் பாலுக்கு தமிழ் நாட்டில் நல்ல மவுசு உள்ளது! ஆனால், அதில் ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் அரசியல் தலையீடுகளும், அபார கொள்ளைகளும் நடக்கின்றன! மாடு வளர்த்து பால் தருபவனும் பலன் பெறுவதில்லை! விநியோகிப்பவனும் பலடைவதில்லை! இடைத்தரகர்கள், காண்டிராக்டர்கள் காட்டில் தான் மழை! எப்படி நடக்கின்றன..இந்த முறைகேடுகள்..! புரதச்சத்து அதிகம் கிடைக்கும் உணவுப்பொருள் பால்.பால் உற்பத்தியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இதன் செயல்பாடு குறித்து தமிழ்நாடு பால்முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி நம்மிடையே பேசுகிறார். உலகப் ...

ஆம், கொரோனா நோயை கட்டுப்படுத்தத் தான் வேண்டும். அதற்கு வணிகர்கள் ஒத்துழைப்போம்! ஆனால், அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் சமூகபொருளாதாரத்தையே முடக்கிவிடக் கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தான் செயல்பட வேண்டும் போன்ற நெருக்கடிகள் மக்களுக்கும்,வணிகர்களுக்கும் பதற்றத்தை ஏற்படுத்துமல்லவா…? கூட்டத்தை அதிகமாக்குமல்லவா…? தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற,மு க ஸ்டாலினிடம் சிறு வியாபாரிகள் கோரிக்கை! இன்று மே 5ஆம் நாள். வணிகர் தினம். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் வணிகர் தின கொண்டாட்டங்கள் இல்லை. தமிழகம் முழுவதும் மாநாடுகள், கருத்தரங்குகள் என்று வணிகர்கள் தங்கள் ஒற்றுமையை ...

பொதுத்துறை நிறுவனங்களை பொலிகடாவாக்கி வரும் மத்திய பாஜக அரசு, அவற்றுக்கு இறுதி கட்ட மரண அடி கொடுக்க, மல்லிகா சீனிவாசனை பொதுத் துறை நிறுவன வாரியத் தலைவராக நியமித்துள்ளது! டி.வி.எஸ்.சுந்தரம் அய்யங்கார் குடும்பத்தின் மல்லிகா, இந்தியாவின் மிகப் பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனத்தின் (TAFE) தலைவராக உள்ளார். மல்லிகாவை பொதுத் துறை வாரியங்களின் தலைவராக நியமித்ததன் மூலம் பல லட்சம் கோடி முதலீடுகள், 12.34 லட்சம் தொழிலாளர்கள் உள்ள கொண்ட – சேவையை லட்சியமாக – இந்திய பொதுத் துறை நிறுவனங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது ...