ஒவ்வொரு ஆண்டும் மிகப் பெரிய வி.வி.ஐப்பிக்களின் வருகையோடு ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி விழா அரங்கேறுகிறது! ஒரு ஆன்மீக மையம் பிரதமர், குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் என ஆகப் பெரிய அதிகார மையங்களை இதற்கு தொடர்ந்து அழைப்பது ஏன்? அதிகார மையங்களிடம் இருந்து விலகி நிற்றல் அல்லவா ஆன்மீகத்தின் இயல்பாக இருக்க முடியும். காரணம், மிக எளிமையானது! தன்னுடைய சட்ட விரோத, சமூக விரோத செயல்பாடுகள் மீது அரசு அமைப்புகள் எதுவும் ...
திடீரென்று அகத்தியரைத் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர்! அகத்தியர் விழாக்கள், கருத்தரங்குகள், கொண்டாட்டங்கள், வழிபாடுகள் என பல விதங்களில் மத்திய பாஜக அரசாங்கத்தால் அகத்தியர் தற்போது முன்னெடுக்கபடுவதன் பின்னணி என்ன? இதில் அரசியல் நோக்கங்கள் உள்ளனவா? அகத்தியருக்கான விழா கொண்டாட்டத்தை முதலில் சுதா சேஷ் ய்யன் துணைத் தலைவராக உள்ள செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி வைத்தது. அவர்கள் பற்பல பார்ப்பன எழுத்தாளர்களையும், அவர்களையொத்த சிந்தனை போக்குகள்ளவர்களையும் அழைத்து அகத்த்தியர் தான் இந்த தமிழ்ச் சமூகத்தின் அகம், புறம் இரண்டிற்குமே அடிநாதமானவர் என்று விதந்தோத வைத்தனர்! ...
சர்ச்சைக்குரியவராகவே எப்போதும் இருந்துள்ளார் மம்தா குல்கர்னி! விளைவுகளை பொருட்படுத்தாமல் மிகவும் வெளிப்படையாக பேசக் கூடியவர். நிர்வாண போட்டோவுக்காக விமர்சிக்கப்பட்டவர். கும்பமேளாவில் துறவறம் மேற்கொண்ட மம்தா கடும் எதிர்ப்பு காரணமாக அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதற்கான காரணம் என்ன..? தமிழில் 1991-ம் ஆண்டு வெளிவந்த நண்பர்கள் என்ற படத்தில்தான் இவர் அறிமுகமானார். இந்தப் படத்தை நடிகர் விஜய் தயாரிக்க, அவரது தாய் ஷோபா சந்திரசேகர் இயக்கியிருந்தார்.அதன் பிறகு இந்தி, மலையாளம், கன்னடம், வங்காள மொழிப் படங்கள் என 40 க்கு மேற்பட்ட படங்களில் 10 ...
திருப்பரங்குன்றம் மலை தற்போது ‘திகு திகு’ அரசியலாக மாற்றப்பட்டு வருகிறது! அறுபடை கோவில்களில் முதல் படையான இந்த முருகன் கோவிலை வைத்து இந்து மத உணர்வாளர்கள் படை திரட்டி வருகிறார்கள்! ”புனித மலை மீது புலால் உணவா..?” என்றும், ”இது புதில்லையே பல்லாண்டு பழக்கம் தானே” என்றும் வாதங்கள்..! தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலை நகரான மதுரை கலவரச் சூழலில் உள்ளது. இது வரை இல்லாத வகையில் மதுரை மாநகரில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் 144 தடை உத்தரவு என்றும், நாளையுமாக ( பிப்ரவரி -3,4) ...
ராய்டர் நிறுவன தகவல்படி 40 பேர் சாவு. நூற்றுக்கணக்கானோர் படுகாயம். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமாம். காணாமல் போனவர்கள் எண்ணிக்கை தெரியவில்லையாம். ஒரே நேரத்தில் எட்டு கோடி பேர்களை குவியவிட்டால் எப்படி சமாளிக்க முடியும்..? எப்படி நடந்தது? எங்கே பிழை ஏற்பட்டது? உலகின் மிகப் பெரிய ஆன்மீக பெருவிழாவான மகா கும்பமேளா சுமார் 40 கீமீ பரப்பளவில் நடைபெறுகிறது. அதிலும், அந்த திருவேணி சங்கமம் எனப்படும் கங்கை, யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி ஆகியவை சங்கமிக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குளித்து விட ...
சில பிரபல கோவில்களில் ஆண்கள் சட்டை இல்லாமல் திறந்த மார்புடன் வர நிர்பந்தம் தரப்படுகிறது. இன்றைய தலைமுறையினர் பலர் இதில் மாற்றம் வேண்டுகின்றனர். ”இதில் மாற்றம் அவசியம் தான்” என நாராயணகுரு சச்சிதானந்தாவும், அய்யா வைகுண்டர் கோவில் பிரஜாபதியும் ஆதரிக்கின்றனர். என்ன செய்யலாம் ஒரு விவாதம்; நாராயணகுரு நிறுவிய சிவகிரி மடத்தின் தலைவரான ஆன்மீகவாதியான சுவாமி சச்சிதானந்தாவே சட்டையைக் கழற்றும் விதமான ஆடை கட்டுப்பாடுகளை கைவிடலாம் எனக் கூறி இருப்பது பலத்த வரவேற்பை பெற்று, கேரள அரசு இது குறித்து ஆன்மீக பெரியோர்களிடம் ஆலோசித்து ...
உத்திரபிரதேசம், பிரயாக்ராஜ் என்ற இடத்தில் பல கோடி மக்கள் திரளும் மகா கும்பமேளா நடந்து கொண்டுள்ளது. இந்து மத நம்பிக்கை சார்ந்து 45 நாட்கள் நடக்கும் இந்த உலகப் பிரசித்தி பெற்ற நிகழ்வின் பல்வேறு பரிமாணங்கள் வியப்பளிக்கக் கூடியவை; சுவாரஷ்யமானவை, பன்மைத்துவம் கொண்டவை; மகா கும்பமேளா இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் உலக அளவிலான மிக முக்கிய திருவிழாவாக கருதப்படுகிறது.. இது பலதரப்பட்ட கலாச்சாரப் பின்னணி மற்றும் நம்பிக்கையில் உள்ளவர்களை ஒன்றிணைக்கிறது, ஒன்று சேருதல், மோட்சத்தை விழைதல், புனித நீராடல் மூலம் பாவங்களை ...
கோவில் சொத்தை செல்வாக்கான தனி நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும், டிவிஎஸ், தினமலர், சிவசைலம், ராம்கோ சிமெண்ட், திருவாவடுதுறை ஆதீனம் போன்றவர்கள் இரண்டு லட்சம் ஏக்கரை எப்படி ஆட்டையை போட்டனர்? அந்த காலத்தில் தர்ம சிந்தனையுள்ள நல்லோர்கள் தங்கள் சொத்தின் ஒரு பகுதியை கோவிலுக்கு தருவது ஒரு வழக்கமாக கடைபிடிக்கப்பட்டது. அந்த வகையில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தமிழ் நாட்டில் கோவில்களுக்கு தானமாக தரப்பட்டுள்ளது. அவற்றை அந்தக் கோவிலில் உள்ள அர்ச்சகர்களும், உள்ளூர் முக்கியஸ்தர்களும் அபகரித்து ...
தமிழ்க் கடவுள் என நாமெல்லாம் பெருமைப்படும் முருகனுக்கு மாநாடு. இதில் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சி இயல்பாக ஏற்பட்டது. ஆனால், நடந்தவையும், நடக்கப் போகிறவையும் முருகனை தொடக்கமாக வைத்து விநாயகர், ராமர், கிருஷ்ணர்… என்று பற்றிப் படர்ந்து மொத்த தமிழ் சமூகத்தையும் வேறு திசைக்கு அழைத்துச் செல்கிறதோ..? ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ என்ற தலைப்பிலேயே சனாதனம் பளிச்செனத் தெரிகிறது. அதென்ன அனைத்து உலகம்? இருப்பது ஒரு உலகம் தானே. ஈரேழு உலகங்களை கற்பிக்கும் புராணங்களின் புனைவுப் பார்வையிலேயே தலைப்பும் உள்ளது. ‘பன்னாட்டு முருகன் மாநாடு’ ...
இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்து பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இன்னும் கூட ஆட்சியாளர்கள் இயல்பு நிலைக்கு வராமல் சதா சர்வ காலமும் சிறுபான்மையினரை எப்படியெப்படி எல்லாம் ஒடுக்கலாம் என ரூம் போட்டு சிந்தித்து சட்டங்கள் போட்ட வண்ணம் உள்ளனர். உ.பியின் முதல்வர் யோகியோ இதில் உச்சம்; உத்திரபிரதேசத்தில் சிறுபான்மையினர் என்றாலே சீற்றப் பார்வையுடன் கூடிய அரசு நிர்வாகத்தை தொடர்ந்து நடத்தி வரும் யோகி ஆதித்திய நாத் அவர்களுக்கு இன்னும் சிறுபான்மையினர் குறித்த வெறுப்பும், அச்சமும் அகன்றபாடில்லை. சமீபத்தில் கான்வார் யாத்திரை செல்லும் வழியில் அமைந்துள்ள கடைகளின் ...