இந்து என்பது ஆதிக்கத்திற்கான மந்திரம்! அரசியல் பிழைப்பாளர்களின் தந்திரம்! இன்னும் சிலருக்கு வயிறு வளர்க்கும் உபாயம்! இதை நாம் அம்பலப்படுத்தினால் வருகிறது கோபம்! எழுகிறது வன்மம்! எல்லா மதங்களையும் தின்று செறித்ததே இந்து மதம்? ராஜராஜ சோழனை யாராவது இந்து எனச் சொல்லி இருந்தால் தலையை சீவீ இருப்பான்! மூச்சுக்கு முன்னூறு முறை இந்து, இந்து எனச் சொல்பவர்கள், இந்து மதம் தான் பழமையானது என பீற்றிக் கொள்பவர்கள் இதற்கு மனசாட்சியைத் தொட்டு பதில் சொல்லட்டும்! சனாதனிகளின் மூன்று பிரதான நீதி நூல்கள் உபநிடதம், ...

பார்ப்பதற்கு சாது! அருள் சிந்தும் மலர்முகம்! கருணையிலோ கடல்! ஆனால், பாடும் கவிதையில் சூறாவளி! அநீதியை எதிர்ப்பதில், மூட பழக்கவழக்கங்களை, சனாதனத்தை எதிர்ப்பதில் தீப்பந்தம்! பெரியாரின் குரு! சமதர்ம சித்தாந்தத்தின் கரு! ஐயகோ, கொடுமை! காந்தியைப் போலவே இவரையும் நாம் காக்கத் தவறினோமே. ஆதிகாலத்தில் சமணம், சார்வாகம், ஆஜீவகம் போன்ற மரபினர் வேதங்கள், சடங்குகளை எதிர்த்து நாத்திகம் பேசினர். அவர்களில் உத்தாலகர், விருஷப தேவர், பிரகஸ்பதி, அஜிதகேச கம்பளன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்! ஆனால், வள்ளலார் நாத்திகவாதியல்ல, உருவ வழிபாடுகள், சமயச் சடங்குகளை தவிர்த்து, தனக்குள் ...

தமிழ்நாட்டில் கோவில் குட முழுக்குகளை சமஸ்கிருதத்துடன் தமிழ் மந்திரங்களும் சேர்ந்து நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் சென்ற ஆண்டு தீர்ப்பளித்தும் இன்று வரை திமுக அரசால் ஏனோ நடைமுறைப்படுத்த முடியவில்லை! தமிழக அரசு தொடர்ந்து சமஸ்கிருதத்தில் மட்டுமே நடத்துவதின் பின்னணி என்ன? 2020 ஆம் ஆண்டு தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நடந்த போது சமஸ்கிருதத்துடன் தமிழையும் சேர்த்து நடத்த தெய்வத் தமிழ் பேரவை, இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் போன்ற அமைப்புகள் வலிமையாக வலியுறுத்தி ஒரளவு வெற்றியும் கிடைத்தது. பிறகு, ‘கரூர் பசுபதி ...

காளியம்மன் குறித்த லீனா மணிமேகலை வெளியிட்ட போஸ்டர் குறித்து இந்து சனாதனிகள் கொந்தளிக்கின்றனர். அவரவர் விருப்பப்படி கடவுளை கற்பிதம் செய்து கொள்ளும் வழிமுறை நமது பாரம்பரியத்தில் காலம் காலமாக உள்ள ஒன்று தான்! சனாதனிகள் வைத்ததே சட்டமாகிவிடுமா? காளி புகை பிடிப்பதைப் போலவும் பாலியல் சுதந்திரத்தை வலியுறுத்தும் கொடி ஒன்றை பிடித்திருப்பதுமான உள்ள காளி தேவியின் படம் அது! இது குறித்து தான் சனாதனவாதிகள் கொந்தளிக்கின்றனர். ”காளிதேவியை இழிவுபடுத்திவிட்டாய் விட்டேனா பார் உன்னை!” ”தலையை வெட்டுவேன், கண்டந்துண்டமாகக் கொலை செய்வேன்” என ஆளாளுக்கு பேசியுள்ளனர். ...

சமூக நீதி விஷயத்தில் சமீப காலமாக தமிழக அரசு தடுமாற்றம் கண்டு வருகிறது.இந்தச் சூழலில் “கொளஞ்சியப்பர் திருக்கோவிலில் பயிற்சி முடித்த அர்ச்சகரை பணி அமர்த்துக” என உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் இடையீட்டு மனு செய்துள்ளதானது கவனத்திற்கு உரியதாகும்! ” நீண்டகாலமாக நிலவிய பழக்கம் என்பதற்காக தேவதாசி முறையை ஏற்போமா ? பலதார மணத்தை ஏற்க முடியுமா ? கோவில், தெரு முதலிய பொது இடங்களில் தலித்துகள் நடமாடக் கூடாது என்று சொல்ல முடியுமா ? ” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் ...

கடவுள் தான் டிரேட்மார்க், பக்தி தான் மூலதனம், கோவில்கள் தான் அள்ளக் குறையாத சுரங்கம் என்று செயல்படுவதற்காகவே அரசியல் அதிகாரத்திற்கு ஏங்குகிறது இந்தக் கூட்டம். அத்துமீறி அநீதிகளை செய்பவனே அங்கு அடுத்த கதாநாயகன்! களவாணி கார்த்திக்கை களத்தில் இறக்கியதே ஒரு திட்டமிட்ட சதி தான்! இது ஒரு பகல் கொள்ளை! கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்! ஊருக்கோ கோயிலுக்கோ எந்த சம்பந்தமும் இல்லாமல் எங்கோ இருந்து வந்த ஒருத்தன் வசூல் வேட்டை நடத்தி பணத்தை அள்ளிக்கிட்டுப் போவான். அதை பார்த்துட்டு சும்மா இருக்கணும் மக்களும்,அரசாங்கமும்! மோசடியாளனை கைது ...

ஆன்மீக மடங்கள் என்றால், அவற்றுக்கு ஏன் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள்? நூற்றுக் கணக்கான கட்டிடங்கள்! கணக்கில்லா சொத்துக்கள்? இவர்கள் ஒழுக்க சீலர்களா?  எத்தனையெத்தனை சிவில் மற்றும் கிரிமினல் புகார்கள் இந்த ஆதீனங்கள் மீது உள்ளன? இந்த மடங்களுக்கு நில உச்சவரம்பு சட்டத்தை அமல்படுத்தினால் என்ன? இந்த சமூகம் சுதந்திரத்திற்கு பிறகு எவ்வளவோ மாற்றங்கள் கண்டன! மன்னராட்சி முடிவுக்கு வந்தது! ஜமீந்தாரி முறைகள் முடிவுக்கு வந்தன! நில உச்சவரம்பு கொண்டு வரப்பட்டன! ஆனால், மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் ஆன்மீக மடங்களுக்கும், கோவில்களுக்கும் ...

‘இந்து விரோத திமுக ஆட்சி ஒழிக! பிராமண துவேஷ திமுக ஆட்சி ஒழிக!’ என அரசியல் ஆயுதத்தை பாஜகவினர் கையில் எடுத்தனர்! ஆனால், ‘அயோக்கியர்களின் பிடியில் அயோத்தியா மண்டபமா?’ என்பதாக ஜெயலலிதா ஆட்சியில் தான், இது, அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது! நீதிமன்றமும் ஏற்றது! இதன் பின்னணி என்ன? திமுக அரசுக்கு எதிராக சுமார் ஐம்பது பேர் கூடி அயோத்திய மண்டப வாயிலில் கத்தினார்கள்! பாஜக அண்ணாமலை ஆர்பரித்தார்! பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தனோ, ”சென்னையிலேயே இந்த ஒரு பகுதியில் தான் வார்டு ...

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் மென்மையான இந்துத்துவ போக்குள்ளவர். அடிப்படையில் ராமபக்தர்! கோவில், பக்தி ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். ”அவர் பாஜகவின் பீ டீம்! காங்கிரஸுக்கு மாற்றாக பாஜக அவரை வளர்த்தெடுக்கிறது. ஆகவே, ஒரு வகையில் ஆபத்தானவர்” என்ற குற்றச்சாட்டுகள் உண்மையா..? சமீப காலமாக அரவிந்த் கேஜ்ரிவால் குறித்தும், ஆம் ஆத்மி ஆட்சியின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையான விமர்சனங்கள், வைக்கப்படுகின்றன! அவர் பாஜகவின் மறைமுக கூட்டாளி என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்படுகிறது! இது குறித்து இந்த கட்டுரையில் நாம் விரிவாக அலசவுள்ளோம். அரவிந்த் ...

பல்லாண்டு போராட்டங்கள்! இன்னும், சிதம்பரம் கோவில் சிற்றம்பலத்தில் தேவாரம் பாட முடியவில்லை. 300 தீட்சிதர்களால் எட்டுகோடி தமிழர்களை எதிர்க்க முடிகிறது! தலித் பெண் தாக்கப்பட்டது மட்டுமல்ல, இது வரை 25  சம்பவங்களில் எப்.ஐ.ஆர் பதிந்து இருந்தாலும், எந்த அரசும் தீட்சிதர்களை கைது செய்ய முடிந்ததில்லை ஏன்? சட்டத்திற்கு கட்டுப்பட மாட்டார்கள், நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்க மாட்டார்கள், அராஜகம், அடாவடித்தனம் அவர்களின் இயல்பு! பணம், செல்வாக்குள்ளவர்களுக்கு தனி மரியாதை தந்து லட்சக்கணக்கில் தட்சணை பெறுவார்கள்! எளியோர்களை ஏறெடுத்தும் பார்க்காமல் மணிக்கணக்கில் காத்திருக்கச் செய்வார்கள்! யாரும் கேள்வி ...