அறம் நிலைக்கச் செய்வதற்கான ஒரு துறையை இந்துத்துவ போட்டி அரசியலுக்கான கருவியாக்கப் பார்க்கிறதா திமுக அரசு..? அறநிலையத்துறை கல்லூரிகளில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை என்றால், சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் வேலை பார்க்கும் இந்துக்கள் நிலை என்னாவது..? மத்திய அரசு நிர்பந்திக்கிறதா? மாநில அரசின் மனநிலை மாறிக் கொண்டிருக்கிறதா..? அறநிலையத் துறை வரலாற்றில் இவரைப் போன்ற செயல் திறனுள்ள இன்னொருவரில்லை எனச் சொல்லத் தக்க வகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த ஆட்சியாளர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள், கடவுளை வெறுப்பவர்கள் என்று ...

இந்த அரசாங்கத்திற்கு இந்துக்கள் மீது கோபம் இருக்கிறது, துவேஷம் இருக்கிறது. அதனால், வெள்ளி,சனி, ஞாயிறு கோயில்களை பூட்டி வைக்கின்றனர் என்று நிச்சயமாக குற்றம் சாட்ட வாய்ப்பில்லை. தேர்தல் அறிக்கையிலும் சரி, பதவி ஏற்பிற்கு பின்பும் சரி இந்து அற நிலையத் துறைக்குத் தான் இந்த ஆட்சியாளர்கள் அதி முக்கியத்தும் கொடுத்து செயல்பட்டு வருகின்றனர்! எனில், கோயில்களை திறக்க எது உண்மையான தடை? இதன் பின்னணியில் இருப்பது யார் என பார்க்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துகளை மீட்க சமரசமின்றி அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான அற ...

ஆட்சிக்கு வந்ததும், ”அர்ச்சகர், ஓதுவார்கள் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்” என அறிவித்தது திமுக அரசு! அவ்வளவு தான்! பரம்பரை, பரம்பரையாக மட்டுமே இது வரை அர்ச்சகர் நியமனங்களை செயல்படுத்தும் கூட்டம் ”இது ஆகமவிதிகளுக்கு எதிரானது” என்று கோர்ட்டுக்கு சென்றுவிட்டது! ஆகமவிதி என்பது இறைவனை வழிபடும் பக்தி முறைகள் சம்பந்தமானதா..? அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் பிழைப்பு தொடர்பானதா..? ஆகமவிதிகள் என்று சொல்லப்படுவது வழிபாட்டுத் தலங்களின் அமைப்பு பற்றியதாகும். கருவறையின் அமைப்பு, வழிபடும் சிலையின் வடிவமைப்பு, எந்தெந்த திசையில் என்னென்ன இருக்க வேண்டும். எப்படி வழிபாடு ...

ஜார்ஜ் பொன்னையா மாதிரியாக ஒரு நாலு பேரு இருந்தால் போதும் தமிழ்நாட்டில் இந்துமதவெறி இயக்கங்களும், பாஜகவும் ஒகோன்னு வளர்ந்திடும்! அந்த மதவாத தீக்கு நெய்யை வாளி நிறைய வாரி,வாரி ஊத்தி இருக்கிறார் பாதிரியார். இப்படி எவனாவது பேச மாட்டமாட்டானான்னு தானே இந்துத்துவ அறிவு ஜீவிகளும் காத்திருந்தாங்க..! இந்த மாதிரி சம்பவங்களை மிக நுட்மாக ஊதி, ஊதி  இந்துக்களை அணிதிரட்ட அவங்களை போன்றவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துவிட்டது. அவங்களும் ஜமாய்க்கிறாங்க..! சோஷியல் மீடியாவெங்கும் பாதிரியார் விதைத்த வெறுப்பு பன்மடங்கு விஸ்வரூபமெடுத்து வியாபித்துள்ளது! இந்த விவகாரத்தில் கன்னியாகும்ரி ...

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரால் ஆன்மீக வேஷம் போட்டு சின்னஞ் சிறுமிகளிடம் பாலியல் வன்மத்தில் ஈடுபட முடிகிறதென்றால், அது அந்த தனிமனிதனிடம் இருக்கும் குறைபாடு மட்டுமல்ல. இந்த சமூகமும் ஒரு குற்றவாளிதான்! கண்மூடித்தனமான பக்தியால் ஒருவரை கடவுளுக்கு நிகராக நம்புவது என்பது நமது கலாச்சாரத்திலேயே தொன்றுதொட்டு திட்டமிட்டு மக்களுக்கு காலாகாலமாக கற்பிக்கப்பட்டு வந்துள்ளது! அறுபத்திமூன்று நாயன்மார்களில் சிறுத் தொண்டர் நாயனார் என்பவரின் கதை என்பது என்ன..? பிள்ளைக்கறி வேண்டிய ஒரு நரசாமியாருக்கு அதாவது சிவனடியாருக்கு சிவபக்தர்களான கணவனும், மனைவியும் தங்கள் ஐந்து வயது ...

”மோடிக்கு அடுத்தபடியாக தமிழ் நாட்டில் அதிக மக்களால் கடுமையாக வெறுக்கப்படுபவராக ஜக்கி வாசுதேவ்  தற்போது பார்க்கப்படுகிறார்.’’ என்று ஒரு கருத்தை இன்று இளம் பத்திரிகையாளர் ஒருவர் சொன்னார். எனக்கு திடுக்கென்றது. அவர் கருத்தை மற்ற சிலரும் ஆமோதித்தனர். இந்த சம்பவம் இன்று ஜக்கிக்கு எதிரான தெய்வத் தமிழ் பேரவை நடத்திய பிரஸ் மீட் முடிந்ததும் நிருபர்கள் மத்தியில் விவாதப் பொருளானது. யோகா, பிரணாயாமம் என்று அவர் இயங்கிய காலங்களில் அவர் மீது மக்களுக்கு பெரும் ஈர்ப்பு ஒரு கட்டத்தில் உருவானது. ஆனால், மிக பிரம்மாண்டமாக ...

ஆன்மீகம், யோக மார்க்கம் எனப் பேசி தன்னை முற்றும் துறந்த துறவியாக ஞான மார்க்கத்திற்கானவராக அடையாளப்படுத்தி வந்த ஜக்கி வாசுதேவும், ஈஷா யோகா அமைப்பினரும், இது வரை எந்த தேர்தல்களிலும் இல்லாத வகையில் நேரடியாக அரசியல் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர்! தன்னுடைய ஓட்டு இந்த முறை யாருக்கானது என ஒரு பக்தரின் கேள்விக்கு விடை சொல்வது போல ஜக்கி, அவரது அரசியல் ஆதரவு பாஜக கூட்டணிக்கானது என்பதை தெளிவுபடுத்தி விட்டார்! தன்னுடைய ஐந்து அம்ச கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கும் கட்சிக்கே, தனது வாக்கு ...

திமுக ஒரு இந்துமத விரோத கட்சி! திமுக இந்துக் கடவுளர்களை கேவலப்படுத்தும் கட்சி! திமுக ஆட்சிக்கு வந்தால், இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை! நம் கடவுளர்களை இழிவுபடுத்துபவர்களுக்கா  உங்கள் ஓட்டு…? இப்படியான குற்றச்சாட்டுகள் மிக வலிமையாக பரப்புரை செய்யப்பட்டு வருகின்றன…! இதை பலர் உண்மை என்று நம்புகின்றனர். அப்படி நம்புபவர்களில் சிலர், பாஜக மற்றும் அதிமுக ஆட்சியின் குறைகள் குறித்து எழுதும் போது ஆக்ரோசமாக என்னிடம், ’’அப்படினா.. நீங்க அந்த இந்து விரோத கட்சியை ஆதரிக்கிறீர்களா..? நீங்க உண்மையான இந்துவாக இருந்தால் திமுகவை எதிர்க்க வேண்டும் ’’ ...

என்னாச்சு இந்த யோகா குருவிற்கு…? அரசாங்கத்திற்கு எதிரான ஒரு போராட்டக்களமாக ( மார்ச்-26) தமிழகத்தின் பிரபல கோவில்களை மாற்றிவிட்டார் ஜக்கி! ‘’அரசாங்கமே கோவிலில் இருந்து வெளியேறு’’ என்று ஜக்கியின் ஆட்கள் கோஷம் எழுப்பியும், பேசியும் பக்தர்களிடம் பிரச்சாரம் செய்தனர். இவர்களுக்கெல்லாம் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது! ஆன்மீக, யோகா அமைப்பாக இருந்த ஈஷாவில் ஏற்பட்ட இந்த திடீர்மாற்றத்தின் பின்னணி என்ன? தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுமையும் லட்சக்கணக்கனக்கான மக்களுக்கு யோகா, மூச்சுப் பயிற்சி என்ற பிரணாயாமம் ஆகியவற்றை கொண்டு சேர்த்ததில் கடந்த கால் நூற்றாண்டாக பிரமிக்கதக்க ...

இந்தியாவின் மாபெரும் நிகழ்வான ஹரித்துவார் கும்பமேளா ஏப்ரல் ஒன்று தொடங்கி முப்பது நாட்கள் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக தற்போதே உத்திரகாந்த் மாநிலத்தின் ஹரித்துவாரில் 32 லட்சம் பேர் வந்து குழுமியுள்ளனர். இந்த 30 நாட்கள் நிகழ்வில் 12 முதல் 15 கோடி வரைக்குமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 12 வருடங்களுக்கு மட்டுமே நடக்கும் கும்பமேளா என்பதால் மக்களின் எதிர்பார்ப்பும், ஆர்வமும் எல்லை மீறியதாகவே இருக்கும் என நம்பப்படுகிறது! இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது என ...