கொரோனாவை வெற்றிகரமாக சமாளித்து, மக்களை குணப்படுத்தியதில் அரசு மருத்துவர்களின் பங்களிப்பு மறுக்க முடியாததாகும்! தமிழகத்தில் இது வரை 7,22,000 க்கு மேற்பட்டவர்கள் கொரானாவில் பாதிக்கப்பட்டு,அதில் 6,88,000 பேர் குணமடைந்துள்ளனர் என்றால்,அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்பால் தான் குணமடைந்துள்ளனர் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் உண்மையாகும்! வெறும் பதினெட்டாயிரம் அரசு மருத்துவர்கள் கடும் உழைப்பை ஈந்ததில் தான் இது சாத்தியப்பட்டது. இதில் அரசு மருத்துவர்களோடு பட்ட மேற்படிப்பு மாணவர்களும் சேர்ந்து பாடுபட்டனர். நோயாளிகளை குணப்படுத்தும் போது ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவர்களும் கொரனாவால் தாக்கப்பட்டனர். ...

மாபெரும் இசைக் கலைஞனான எஸ்.பி.பியின் மரணத்திற்குத் தவறான முறையில் தரப்பட்ட அலோபதி மருத்துவச் சிகிச்சையே   காரணம் என்றும், அவர் மருத்துவமனை செல்லாமல் இருந்திருக்கலாம் என்றும் பரவலான மக்கள் கருத்து உள்ளது! ஆனால்,  அலோபதி என்பது அறிவியல்பூர்வமான சிகிச்சை அது பற்றித் தெரியாமல் பேசுவது முற்றிலும் தவறு, அறியாமை ….என்றெல்லாம்  பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டுள்ளன! ஒரு கலைஞனின் மரணம், ஊடகங்களிலும் மக்களின் பார்வையிலும் இன்றைய விவசாய மசோதா முதற்கொண்டு பல முக்கிய சமூக பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது.  மக்கள் மனம் கவர்ந்த கலைஞன் அல்லவா? இழப்பின் வருத்தம் ...