ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கும் சூழ்ச்சி போல, ‘கர்ப்பபை புற்று நோய்’ என பயமுறுத்தி, 9 வயதிலிருந்து 15 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசித் திட்டமாம்! இந்த HPV தடுப்பூசியால் உயிரிழப்புகள், பக்க விளைவுகள் உறுதிபட்ட பிறகும், வலிந்து திணிக்கும் மர்மம் என்ன? யார், யார் பலனடைய..? Human Papilloma என்ற Virus-ஆல் ஏற்படுவதே கர்ப்பப்பை வாய் புற்று நோய் எனப்படுகிறது. பொதுவாக பலருடன் பாலியல் உறவு கொள்வோருக்கு முன் எச்சரிக்கையாக இந்த தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பப்பை புற்று நோய் என்பது கருப்பை வாயை ...
கர்ப்பப்பை வாய் புற்று நோயாம்! மெத்த படித்தவர்களும், மருத்துவர்களுமே சூதாக நடந்து கொண்டால் எளிய மக்களின் நிலை என்னாவது..? தற்போது சிறுமிகள், இளம் பெண்களுக்கு நிர்பந்தப்படுத்தி போடப்படும் ஊசிக்கும் தடுப்பூசியின் உண்மைத் தன்மை என்ன..? இந்தத் தடுப்பூசியானது நோயை தடுக்கவா.. பரப்பவா..? 2024 பிப்ரவரி 1ம் தேதி மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பல திட்டங்களில் ஒன்று HPV தடுப்பூசி- கர்ப்பப்பை வாய் புற்று நோய் தடுப்பூசி, 9-14 வயதுள்ள இந்திய பெண் குழந்தைகளுக்கும் போடப்படும் என்றார். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical ...
குழந்தைகள் காரணம் தெரியாமல் வீரிட்டு அழும். வயிற்று வலியால் துடிக்கும். வாந்தி எடுக்கும். சரியாகத் தூங்காமல் பல்லைக் கடிக்கும். பெரியவர்களுக்குமே இந்த பிரச்சினைகள் வரும். எப்படி இந்த குடற் புழு, கீரிப்பூச்சிகள் வயிற்றில் வருகின்றன? இதை தவிர்க்கவும், வந்தால் வெளியேற்றவும் செய்ய வேண்டியவை என்ன? குடலில் தொற்றி உள்ள புழுக்கள் அல்லது கீரி பூச்சிகளால் குழந்தைகளுக்கு பெரிய அளவில் உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றது. குடல்புழுக்களில் உருண்டை புழு, கொக்கி புழு, நூல் புழு, சாட்டை புழு, நாடா புழு எனப் பல வகைகள் ...
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த சித்த மருத்துவ மூலிகை இது! இருமல், சளி, மூக்கடைப்பு, தொண்டை வலி, அலர்ஜி, ஆஸ்துமா, டி.பி எனும் காச நோய்.. என எல்லா வித சளி சம்பந்தமான நோய்களுக்கும் இதுவே முதலுதவி மூலிகையாகும்! ஆடு தொடாத இலை ஆடாதொடை எனப்பட்டது கிராமங்களில் வேலியோரமாக நட்டு பெரும்பாலும் வளர்க்கப்படுகிறது. இதன் இலை மாவிலை போன்று நீண்டது, அடர்த்தியாக புதச்செடியாக வளரும். நகர்புறங்களில் கூட சாலையோரம் பார்க்கலாம். அதிக நடமாட்டமில்லாத தெரு ஓரங்களில் ...
நோய்கள் வராமல் ஆரோக்கியமாய் இருக்க நினைப்பவர்களும், வந்த நோயை விரட்ட நினைப்பவர்களும், முதுமையை வெல்லத் துடிப்பவர்களும் அதிக காசு செலவில்லாமல் உடல் நலம் பேண விரும்புபவர்களும் நெல்லிக் காயில் என்னென்னவெல்லாம் நன்மைகள் எனத் தெரிந்து கொள்ளுங்க.! தமிழ் சங்கப் பாடல்கள் பலவற்றில் அதிகம் பேசப்பட்ட கனிகளில் ஒன்று நெல்லிக்கனி. அதியமான் நெடுமான் அஞ்சி என்ற அரசன் தனக்கு கிடைத்த சிறப்புமிக்க முதுமையை தள்ளி வைக்கும் அரிய வகை நெல்லிக்கனியை ‘ஞானப்பெண்ணான’ ஔவைக்கு வழங்கி மகிழ்ந்தான். அதனைப் பெற்று அதன் சிறப்பையும், மன்னனையும் வாழ்த்தினார் ஒளவை ...
மரபான தொல்குடிகள் அனைத்திலும் வயது முதிர்ந்த பெண்களாலேயே பாரம்பரிய மருத்துவ அறிவு உட்பட தொல்கலாச்சாரங்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன. அந்த வகையில் தமிழ் பெண்களின் மருத்துவ அறிவை ”பாட்டி” வைத்தியம் என்று அழைப்பதுண்டு. சூதக வலி எனும் மாதவிடாய் பிரச்சனையை தீர்க்கும் குன்ம குடோரி மெழுகு அபாரம்! அடிப்படையில் தமிழர் மருத்துவ அறிவை மூன்று தொகுதிகளாக பிரிக்கலாம். பாட்டி வைத்தியம், வைத்தியர் மருத்துவம், சித்தர் மருத்துவம் என்று. 1.பாட்டி வைத்தியம் -என்பது அனுபவம் வாய்ந்த மூத்த பெண்களால் பெண்களுக்கு உள்ளாக அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும் ...
சுற்றுச் சூழலும், சமூகச் சூழலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன! தலை வலி, உடல் வலி, மூட்டு வழி, மூச்சுத் திணறல் போன்ற பல வகை பாதிப்புகளுக்குமான அரியதொரு நிவாரணி தான் மின்சாரத் தைலம்! இதை பெரிய செலவில்லாமல் நாமே மிக சுலபமாக தயாரித்துக் கொள்ளலாம். சித்த மருத்துவத்தில் உடல் வலியை நீக்கக்கூடிய, மேலே தடவ கூடிய வெளி பூச்சு மருந்துகள் நிறைய உள்ளன. அதில் முக்கியமான தலைவலி, உடல் வலி, மூட்டு வலி ,ஜலதோஷம் , ஆஸ்துமா, மூச்சுத் திணறல், ...
தமிழ் மக்களின் நெடுநாளைய விருப்பம், பல்லாண்டு கோரிக்கை, சித்த மருத்துவ பல்கலைக் கழகம்! ஆளுநர் மட்டுமா, இதற்கு முட்டுக்கட்டை? எத்தனை எதிர்ப்புகள்..! ஆயுர்வேத கல்விக்கு பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கும் மத்திய அரசு, சித்த மருத்துவத்திற்கு ஏன் தடைகளுக்கு மேல் தடை போடுகிறது..? சமீபத்தில் சென்னையில் (ஜுலை 12) தமிழகத்தின் புகழ்பெற்ற சித்த மருத்துவர்கள் ‘சித்த மருத்துவ பல்கலைக்கழக வேண்டுகைக் குழு’ என்ற பேனரில் ஒன்று கூடி, சித்த மருத்துவ பல்கலைக் கழகம் ஏற்படுத்துவதில் உள்ள தாமதத்தை விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் ...
சோரியாசிஸ் எனப்படும் தோல் நோய் தற்போது பலருக்கும் வருகிறது.தோலானது செதில் செதிலாக உதிர்ந்து கொட்டும். தோல் வறட்சி,வெடிப்பு, அரிப்பு, சிவந்து காணப்படும். மரபின் மாறுபாடு, தொடர் மன அழுத்தம், முறையற்ற உணவு பழக்கங்கள் காரணமாக வரும், இந்நோயை சித்த மருத்துவத்தில் சிரமின்றி குணப்படுத்தலாம். காளாஞ்சகப்படை என்ற சோரியாசிஸ் பெரும்பாலும் முழங்கை முழங்கால் வயிறு, முதுகு தலையில், காது மடல், போன்ற பகுதியில் காணப்படும். சில வகைகளில் தோல் மடிப்பு உள்ள இடங்களில் மார்பு அடிப்பகுதி, பிட்டம், இடுப்பு மடிப்பு போன்ற பகுதிகளிலும் காணப்படுகிறது. வெகு ...
அகத்தியரின் பெயரில் ஒரு மிகச்சிறந்த சித்த மருந்து ஒன்றுள்ளது. இது அடிப்படையான சித்த மருந்துகளின் வரிசையில் முதலானதாகும்! ஒரு சித்த மருத்துவர் எல்லா வகை நோய்களிலும் முதலில் பயன்படுத்தக் கூடியதான இதன் பெயர் “அகஸ்தியர் குழம்பு”. நோயற்ற வாழ்வை விரும்புவோருக்கு இது முக்கியமானது! குழம்பு என்ற சொல், பொதுவாக அரை திரவ நிலையில் (கூழ்ம நிலை) உள்ள பொருளைக் குறிக்கிறது, [ குழைந்த சோறு போன்ற, ]. சித்த மருத்துவத்தில் பல மூலிகை சாறுகளை, மருந்து பொருட்களை கூட்டி நெருப்பில் சுண்ட காய்ச்சி எடுத்துக் ...