சமீபத்திய  RBI  அறிவிப்புகள்  மக்களிடம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. ஏன் இத்தனை கெடுபிடிகளை வங்கியில் கடன் பெறும் மக்களுக்கு தருகிறார்கள்…! இந்தக் கெடுபிடிகளால் பாதிக்கப்படுவது வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல, வங்கியும் தான். ஆனால், இது கந்து வட்டிக்கார்களும், சேட்டுக் கடைகளுக்கும் ஒரு ஜாக்பாட்டாக மாறலாம்; ரிசர்வ் வங்கியின் முதல் அறிவிப்பு வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள்  வருடம் ஒரு முறை நகைக்கான வட்டியை முழுமையாகச் செலுத்தி கடனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். ஒரே முறையில் அசல் -வட்டி இரண்டும் கட்ட முடியாது நிலை ...

வங்கிகளில் வேலைநிறுத்தம் நடைபெறுவது வழக்கம்தான்; ஆனால் இந்த முறை வித்தியாசமான காரணத்திற்காக நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் உள்ள ஒரு இலட்சம் வங்கிக் கிளைகளில், காலியாக உள்ள ஒன்றரை இலட்சம் பணியிடங்களை நிரப்பக்கோரி அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது என்கிறார் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத் தலைவரான சி.எச். வெங்கடாச்சலம். கேள்வி : தமிழக அரசு வெள்ள நிவாரணத்தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் ! பதில் ...