சில்லறை வணிகத்தில் 90 சதவீதத்துக்கு மேலான பங்கை வகித்த வணிகர்களின் நிலை பாஜக ஆட்சியில் படு மோசமாகியுள்ளது. பண மதிப்பு, ஜி.எஸ்.டியால் 30 சதவீதத்துக்கும் மேலான சிறு, குறு வணிக அமைப்புகள் மூடப்பட்டன! தூக்குக் கயிற்றில் தொங்கியவர்களில் 36% தெரு வியாபாரிகள்!, 37%  சிறு வர்த்தகர்கள்! சில்லறை வணிகத்தில் அங்கம் வகிக்கும் சிறுகுறு வணிகர்கள் பாஜக அரசின் அராஜக அடக்குமுறையால் மீளமுடியாத பாதிப்பில் உள்ளனர்.  தன் சகாக்களின் கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்க மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு வணிகர்கள் ...

அதிகாரிகள் கையில் முழு அதிகாரம் தந்தால் என்னமாக ஆட்டம் போடுவார்கள் என்பதற்கு பறக்கும் படை என்ற பெயரில் சாதாரண மக்களிடமும், எளிய வியாபாரிகளிடமும் இவர்கள் நாள்தோறும் காட்டும் அணுகுமுறைகளே சாட்சியமாகும். அரசியல்வாதிகளை சுதந்திரமாக பணம் எடுத்து செல்லவிட்டு மக்களை தான் பிடிக்கிறார்கள்..! தமிழ்நாட்டில் உள்ள 40 நாடாளுமன்ற  தொகுதிகளுக்கும் 3 குழுக்கள் வீதம் 702 தேர்தல் பறக்கும் படை குழுக்கள் மற்றும் 702 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தக் குழுக்கள் எட்டு மணி நேரம் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் 24 ...