சர் ஆர்தர் காட்டன் (15-05-1803  முதல் 24-07-1899  வரை!) ‘இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை’ எனப்படும் சர் ஆர்தர் காட்டன் சுமார் 50 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பிற்கு நீர்வளத்தை உருவாக்கி சோறுவளம் பெருக பாடுபட்டவர்! “இந்தியாவின் வறுமையைப் போக்க முக்கிய தீர்வு, நீர் மேலாண்மை திட்டங்களை  செயல்படுத்துவது தான்” என நடைமுறைப்படுத்தியவர். இப்படியும் ஒரு சாதனையாளரா..? உலகத்தின் நாகரீக தொட்டில்கள் என்று ஆற்றங்கரை சமவெளிகளை வரலாறு குறிப்பிடுகிறது. மனிதன் வேளாண் சமூகமாக வாழ ஆரம்பித்த தருணத்தில் மழை நீரை முறைப்படுத்தி சேமித்து பயன்படுத்தியதில் தான் ...

”வைக்கம் போராட்டத்திற்கும் பெரியாருக்கும் பெரிசா ஒன்னும் சம்பந்தமில்லை” என ஆர்.எஸ்.எஸ் தூதர்கள் அடிக்கடி பேசி வந்தனர். உண்மை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் வகையில் வைக்கம் போராட்டத்தின் நூறாம் ஆண்டு நிகழ்வுகள் நடந்து கொண்டுள்ளன! வைக்கத்தில் பெரியாரின் உண்மையான பங்களிப்பு என்ன? ”வைக்கம் போராட்டத்திற்கும், பெரியாருக்கும் பெரிசா ஒன்னும் சம்பந்தமே இல்லை. அதில் கைதான பலரில் பெரியாரும் ஒருவர். அவ்வளவு தான். அக்காலத்திய நாளிதழ் ஆவணங்களில் அனேகமாக எங்குமே ஈ.வே.ராவின் பெயர் காணப்படவில்லை.. டி.கே. மாதவன் போன்றவர்களின் வரலாறுகளிலும், நினைவுகளிலும் கூட ஈ.வெ.ராவின் பெயர் தனியாக ...

மகாத்மா காந்தியை உலகத்திற்கே தெரியும்! காந்தியை நிழல் போல தொடர்ந்த – மகாத்மாவின் சேவைக்கே இந்த மண்ணுலக வாழ்வை அர்பணித்துக் கொண்ட – மகாதேவ தேசாயை பலருக்கு தெரியாது! காந்தி என்ற ஒளிவிளக்கு பிரகாசிக்க, தன்னை திரியாய் ஒப்புக் கொடுத்த மகாதேவின் வாழ்க்கை ஒப்பற்ற தியாக வாழ்க்கையாகும்! இந்த உலகில் 50 ஆண்டுகள் வாழ்ந்து 100 ஆண்டிற்கான சேவை செய்து மறைந்தவர். தன்னை பூஜ்யமாக கரைத்துக் கொண்டவர்.  ஆங்கிலம், மராத்தி, குஜராத்தி, சமஸ்கிருதம். ஹிந்தி, பிரெஞ்ச், வங்காளம் முதலிய மொழிகளைக் கற்று, பல நூல்களைக் ...

பலருக்கும் பல அரசியல் பார்வைகள் உண்டு. தம் நிலைப்பாட்டுக்கு வலிமை சேர்ப்பதற்காக, வரலாற்றை வளைத்தும், திரித்தும் எழுதுவது எவ்வகைக் கோட்பாளர்க்கும் பெருமை சேர்க்கும் செயல் அல்ல. மட்டுமல்ல, இத்தகைய செயல்கள் அவர்களின் அடிப்படை நோக்கங்களின் மீது அய்யத்தைப் படியவைக்கும் அவலத்தை அவர்க்கு ஏற்படுத்தும். தமிழகத்தின் பிரபலமான ஒரு பெண் கவிஞர் – சிறந்த பெண்ணியக் கவிதைகளை, சமூகம் சார்ந்த பிரச்சனைகளை முன்வைத்துச் சிறந்த படைப்புகளை உருவாக்கியிருப்பவர். அந்த அம்மாள், புதிய கண்டுபிடிப்பு என்று நினைத்து, ஓர் அறுதப் பழசான, பிய்ந்து கிழிந்த செய்தியைக் கொண்டுவந்து ...

இரு வேறு சாதிகளுக்கு இடையில் ஏற்பட்ட காதலை அன்றைய சமூகம் எப்படிப் பார்த்தது என்பதற்கு இந்த நிகழ்வே சான்று! கி.பி 1691 ல் இராமநாதபுர சேதுபதி மன்னர் காலச் செப்பேடு ஒரு முக்கிய ஆவணமாகிறது. ‘தமிழ்ச் சமூகத்தில் இப்படியெல்லாம் கூட நடந்திருக்குமா..?’ என அதிர்ச்சியின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கிறது! சேதுபதி அரசர் காலத்தின் அந்த செப்பேட்டில் வேலாந்தரவை என்னும் ஊரைச் சேர்ந்த வலையர் குலத்து இளம் பெண்ணான வீராயிக்கும், இளமநேரி என்ற ஊரைச் சேர்ந்த சேர்வைக்காரர் குலத்தைச் சேர்ந்த வாலிபரான நயினுக்குட்டி என்பவருக்கும் ஏற்பட்ட ...