காலனி ஆதிக்கத்தின் எச்சமான கிரிக்கெட் இந்திய சமூகத்தில் எவ்வாறு வேரூன்றியது? ஆதிக்க சமூகத்தின் அடையாளமாக எப்படி மாறியது..? ஒரு சாதியினரின் ஆதிக்கம் எப்படி கொடி கட்டிப் பறந்தது..? இன்று எப்படி அது உடைபட்டு வருகிறது! கார்ப்பரேட் கலாச்சாரத்தின் தூதுவனாக மாறிப் போன வரலாறு குறித்த ஒரு அலசல்; மழை விட்டும் தூவானம் நிற்காததைப் போல உலகக்கோப்பை கிரிகட்டைப் பற்றிய அதிர்வுகள் சமூக தளத்தில் தொடர்கின்றன! அத்துணை தூரம்  கிரிக்கெட்  கலாச்சார மரபாக நம்மிடையே  ஊறிப் போய்விட்டது . 1947 –ல் விடுதலை பெற்றுவிட்டோம் ஆனால், ஆங்கிலேயர்கள் ...

படு எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்ட உலக கோப்பையில் இந்திய அணி தோல்வி பெற்றதற்கு என்ன காரணம்? இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வெற்றி, தோல்விகளில் அதிக உணர்ச்சிவசப்படுவது எதனால்? கம்மின்ஸ் திமிரானவரா? உலக கோப்பை விளையாட்டு நிகழ்வை அணுவணுவாக ரசித்து  விமர்சிக்கிறார், அ.சுகுமாரன்! ‘’மைதானத்தில்   இருக்கும் 1 லட்சத்து 30 ஆயிரம் இந்திய ரசிகர்களை மௌனமாக்க விரும்புகிறேன்’’ என்று போட்டிக்கு முன்பு பேட்டியில்  கூறிய ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் இப்போது ஆஸ்திரேலிய ஊடகங்களில் அதிகம் பாராட்டப்பட்டு வருகிறார். அவர் சொன்னது போலவே ஆஸ்திரேலியா போட்டியில் வென்று இந்திய ...

இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்டவர் கபில்தேவ். மிகுந்த நேர்மையாளர். சமரசமற்றவர். இதனால் அவர் இழந்தது அதிகம். மனதில் பட்டதை  உடனே வெளிப்படுத்துபவர். கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் குறித்தும், கிரிக்கெட் வாரியம் குறித்தும் கபில்தேவின் விமர்சனம் கவனம் பெற்றுள்ளது. தற்போது நமது சொந்த மண்ணிலும் நடைபெறப் போகும் உலக கோப்பை கிரிக்கெட்  போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?  2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி இரண்டு முறையும் அரையிறுதியில் தோல்வியை தழுவியது. இதேபோன்று 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த ...

இந்திய மல்யுத்த வீரர்கள் அமைப்பின் தலைவரும், பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் ஷரன் சிங் விளையாட்டுத் துறையில் ஒரு வில்லாதி வில்லனாக நீண்ட காலம் வலம் வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது! ”அவரது பதவிக்கும், பவருக்கும் அஞ்சமாட்டோம்..’’ என பொங்கி எழுந்துள்ளனர் பெண் வீராங்கனைகள்! உலகப் புகழ் ஒலிம்பிக் போட்டிகளிலும், சர்வதேச போட்டிகளிலும் பங்கு பெற்று வெற்றி வாகை சூடி, பதக்கங்களை வென்ற  இந்திய மல்யுத்த வீராங்கனைகள் வினீத் போகாட், பஜ்ரங் பூனியா, அன்ஷூ மாலிக் மற்றும் மல்யுத்த வீர்ர் ரவி தாகியா ஆகியோர் கடந்த ஒரு ...

உலகக் கோப்பையை வென்ற அர்ஜெண்டினாவின் மக்கள் தொகை 4.5 கோடி! இரண்டாவது இடமான பிரான்ஸின் மக்கள் தொகை 6.5 கோடி! 140 கோடி மக்கள் கொண்ட இந்தியாவால், உலக கால்பந்து போட்டியின் தர வரிசையில் கூட முன்னுக்கு வரமுடியவில்லை! கால்பந்தாட்டத்தில் இந்தியா தடம் பதிக்காதற்கான காரணம் என்ன? உலக கால்பந்து நாயகன் மெஸ்ஸியை இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். நம் நாட்டு ஊடகங்களும் ஒன்று விடாமல் மெஸ்சியின் சாதனைகளைச்  சொல்லி  அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றன. ...

அத்லடிக்கில் நூற்றுக்கணக்கான மெடல்களை அள்ளிக் குவித்தவரும், கோல்டு மெடல் வென்ற சாதனையாளருமான தமிழ் பெண் ஜெயந்தி, பாஜக எம்.பியான பி.டி. உஷாவின் கேரள விளையாட்டுப் பள்ளியில்  மர்ம மரணம் அடைந்துள்ளார்! கோவையைச் சேர்ந்த இந்த இளம் பெண்ணின் உயிரை பறித்தது யார்? கேரளத்தில் பி.டி.உஷா நடத்தும் கோழிக்கோடு விளையாட்டு பயிற்சிப் பள்ளியில் 27 வயது இளம் ஆசிரியை இரவில் தூங்கப் போய் அதிகாலையில் பிணமாய் தொங்கிய சம்பவம் நடந்துள்ளது. ஆசிரியை தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதும், பள்ளியின் உரிமையாளர் பாஜக எம்பி, உலகப்புகழ் பெற்ற ஒலிம்பிக் ...

நடக்கப் போகும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 15 லட்சமாம்! பி.சி.சி.ஐ தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் ஆதரவாலும், பிராமணர்கள் வாக்கு வங்கியை வாங்கித் தர உத்தரவாதம் தந்துள்ள சீனிவாசன் ஆதரவாலும், பொன்முடி மகன் அசோக் சிகாமணி களம் இறக்கப்பட்டு உள்ளார்! பிராமணர்கள் மட்டுமே கோலோச்சிய இடத்தில் இந்த முறை பொன்முடியின் மகன் அசோக் சிகாமணியை தலைவருக்கு களம் இறக்கியுள்ளார் தமிழக மற்றும் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தில் பல ஆண்டுகள் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த சீனிவாசன்! இவர் தலைவரானது முதல் பல ...

எதை ஒன்றை சாதிக்க வேண்டும் என்றாலும், குடும்ப பின்புலமோ,பொருளாதாரப் பின்புலமோ தேவை என்பது இந்தியாவில் எழுதப்படாத நியதியாக உள்ளது. மிக வசதி படைத்தவர்கள் மட்டுமே பங்கு பெற முடிந்த பைக்ரேஸில் ஒரு கூலி தொழிலாளியும் சாதிக்க நினைத்தால் அது சவால் தானே? சென்னை-மந்தைவெளி  ஏ.எம்.கார்டன் குடிசை மாற்று வாரிய பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். அப்பா தையல்காரர், அம்மா வீடுகளில் வேலை செய்பவர். சிறுவயது முதல் பைக் தான் உயிர். படிப்பு ப்ளஸ் டூ தான்! மெக்கானிக் செட்டில் வேலை. அங்கு வரும் கஸ்டமர் ஒருவர் ...

துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியதற்காக, ஸ்ரீநகரில் உள்ள மருத்துவ மாணவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழும், (UAPA), 505 இந்தியன் பீனல் கோட் சட்டப்படியும் போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தக் கூடிய ஒரு சட்டத்தை கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய இளம் மாணவர்கள் மீது போட்டுள்ளனர். இன்று, நேற்றல்ல, எனக்கு விபரம் தெரிந்தது முதல் நான் கிரிகெட்டில் பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் ...

கேட்க காதுகள் கூசுகின்றன! மனம் அதிர்கிறது. அவ்வளவு மரியாதை குறைவான வார்த்தைகள்! இத்தனைக்கும் இவரே ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தவர் தான்! தன் இளைய சகாக்களைக் குறித்து இவ்வளவு தரக்குறைவாக பேசும் இவரை தடுக்க யாருமே இல்லையா..? வசீகரமான தமிழ் மொழியை வெறும் வசவு மொழியாக்கி வரம்பு மீறி பேசிக்  கொண்டிருக்கும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்திற்கு தீர்வே இல்லையா..? சமீபத்தில் ஐபிஎல் போட்டிகள் வளைகுடா நாட்டின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் அதனை நேரலையில் நாம் பார்த்தோம். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வாகை சூடியது. இந்த கொரோனா 19 தொற்றுப் பரவல் காலத்தில் எந்தவிதமான பெரிய தொந்தரவும் இல்லாமல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகம் நடத்தி முடித்தது. அதற்கு முதலில் ஒரு பாராட்டு தெரிவிக்க வேண்டும். இப்போது நான் தலைப்புக்குள் வருகிறேன். ஒவ்வொரு நாளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் நேரலையில் ஐபிஎல் போட்டிகளை நாம் பார்த்தோம். சடகோபன், பத்ரிநாத், ஆர், ஜெ. பாலாஜி ஆகியோர் சிறப்பாக வருணனை செய்தார்கள். தேவையான நேரத்தில் தகுந்த புள்ளி விவரங்களைத் தந்து ஆட்டத்தின் கோணங்களை நன்றாகவே விளக்கினார்கள். ஆர்.கே, பாவனா,   அபினவ் முகுந்த், எஸ்.ரமேஷ், நானியும் சிறப்பாகவே தங்கள் பணியை சிறப்பாக செய்தார்கள். ...