அன்றும் சரி, இன்றும் சரி விவசாயம் குறித்த உள்ளார்ந்த புரிதல், அக்கறை இரண்டுமே இந்த வேளாண் பட்ஜெட்டை உருவாக்கும் அமைச்சர்களுக்கும் இருப்பதில்லை, அதிகாரிகளுக்கும் இருப்பதில்லை. அதற்கு இவ்வளவு நிதி, இதற்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு என மாய்மாலங்கள் செய்வதைத் தவிர்த்து, அதிகார அழுத்தத்தில் இருந்து வேளாண்மையை ஏன் விடுவிக்க முடிவதில்லை? விவசாயத்திற்கென்று தனியாக பட்ஜெட் என்ற அம்சத்தை முதன் முதலில் கொண்டு வந்தது, திமுக அரசாங்கம் தான்! அந்த வகையில் அப்போதே நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன். ஆனால்,  அந்த அடிப்படை புரிதலும், அக்கறையும் வருவதற்கு ...

செய்திகளுக்கு பின்னால்…! பரந்தூரில் விமான நிலையம் வருவதை எதிர்த்து 1000 -நாட்களுக்கும் மேலாக நீடித்த ஒரு நெடிய, வலி மிகுந்த போராட்டத்தின் சாட்சியாக நின்ற இந்த மண், இன்று விடுதலையின் காற்றை சுவாசிக்கிறது.மண் வளமிக்க இந்த வேளாண் நிலத்தை வேறு வகை பயன்பாட்டுக்கு திருப்பாமல் செய்ய விஜய்யின் தவெக அரசு வேண்டியது என்ன? என்பது குறித்த ஓர் அலசல்; மீட்கப்பட்ட மண்: ஏகனாபுரத்தின் புதிய விடியலும் மாற்றுப் பாதையும்..! “எங்க ஊரைக் காப்பாத்தணும் எங்க சாமி..!” என்று கண்ணீரோடு எல்லையம்மன் சன்னதியில் நின்ற ஏகனாபுரம் ...

”காவிரி நீர் கேட்டு கர்நாடகம் சென்று தமிழக முதல்வர் விஜய் பேசக் கூடாது” என்ற குரல்கள் வலுக்கின்றன. இந்த அவ நம்பிக்கை குரல்களை முதல்வர் விஜய் அலட்சியப்படுத்தி, கண்டிப்பாக கர்நாடகம் செல்ல வேண்டும். ‘சட்டப் போராட்டங்களால் எதையும் சாதிக்க முடியவில்லை’ என்ற படிப்பினையோடு, கடந்த கால பகை அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்து செய்ய வேண்டியது என்ன? காவிரி நீரை நம்பித் தான் தமிழகத்தின் வாழ்வாதாரம் இருக்கிறது. பேசுங்கள்! நேசத்திற்கான கதவுகளை மூடிவிட்டால், நியாயங்கள் கூட எடுபடாது! 50 ஆண்டுகளாக நீதிமன்றங்களை, நடுவர் மன்றங்களை ...

கட்சிகள் அனைத்தும் கார்ப்பரேட்களுக்கான அரசியலையே முன்னெடுக்கின்றனர். உழவர்களின் தேவை என்ன? பிரச்சினைகள் என்ன? தீர்வு என்ன? என்பதை அறிந்தவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். உழவர்களுக்கான அரசியல் அதிகாரம் அவர்களின் எண்ணிக்கைகு ஏற்ப சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம்  பெற வேண்டும்; பெரும்பாலான அரசியல் கட்சிகளின் பொருளியல் கொள்கை என்பது அம்பானி, ஆதானி போன்ற பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான உலகமய தாராளமய தனியார்மய பொருளியல் கொள்கையே. உழவர் உரிமை இயக்கம் முன்வைப்பது உழவர்களுக்கான உழைக்கும் மக்களுக்கான விவசாயப் பொருளியல் கொள்கை! எட்டு வழிச்சாலை, மேல்மா சிப்காட், பரந்தூர் விமான ...

தமிழகமெங்கும் கறிக்கோழி விவசாயிகள் போராடிக் கொண்டுள்ளனர். கோழிக்கறி கிலோ என்ன விலை என நாம் அறிவோம். ஆனால், கோழிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு  தரப்படும் கூலி கிலோவுக்கு ரூ-6.50 பைசா தான்! இவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமைகளாக எப்படி சுரண்டப்படுகிறார்கள் என்பதான அதிர்ச்சி தகவல்கள்; மக்களின் உணவுத் தேவையில்  சிக்கன் எனப்படும் கோழிக்கறிக்கு மிக முக்கியத்துவம் தற்போது ஏற்பட்டுள்ளது. வீட்டு விருந்தாகட்டும் ஹோட்டல் விருந்தாகட்டும் கோழிக்கறி என்பது  பலவித முறைகளில் பரிமாறப்படுகிறது. அத்தகைய கோழிக்கறிக்கான கறிக்கோழி வளர்ப்பு சார்ந்து சுமார் ஐந்து லட்சம் விவசாயிகள் உள்ளனர். ...

தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளில் பல முக்கிய மாற்றங்கள் நடந்துள்ளன. இயற்கை வள அழிப்பு, விவசாய நிலங்கள் அபகரிப்பு, சுற்றுச் சூழலுக்கு கேடு தரும் தொழிற்சாலைகள் அதிகரிப்பு, நீராதாரங்கள் அழிப்பு, நில வளம் பாதிப்பு, விவசாயிகளின் தற்சார்பு வாழ்க்கை தகர்ப்பு..என பல அதிர்ச்சிகள் அரங்கேறி உள்ளன. இதற்கு எதிராக தமிழகம் முழுமையும் தொடர் போராட்டங்கள் வேளாண் குடிகளால் ஆங்காங்கே நாளும், பொழுதும் நிகழ்த்தப்படுவதை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து வருகின்றன. அவற்றை ஆதாரங்களுன் ஆவணப்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். ஒரு நாடு செழிப்பாக இருப்பதற்கு அந்த ...

இந்திய விதை இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் வண்ணம் மத்திய பாஜக அரசு விதைகள் மசோதா 2025 ஐ கொண்டு வந்துள்ளது. ‘விதைக்கு விலை வைப்பதே மடமை’ என்ற கோட்பாடுடைய நம் பாரம்பரியத்தை அழித்து, விதைகளுக்காக கார்ப்பரேட்களிடம் விவசாயிகள் கையேந்துவதை நிர்பந்திப்பதற்கு  ஒரு சட்டமாம்; கட்டாயக் கண்காணிப்பு, சான்றிதழ் மற்றும் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் ..என்றெல்லாம் பம்மாத்து காட்டி, விதைகளை தனியார்மயமாக்க, ஏகபோகமாக்க, கட்டுப்படுத்த விரும்பும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக விதைகள் சட்டம் 2025 கொண்டு வரப்பட உள்ளது. விவசாயிகள் விதைகளை சேமிக்கவோ, அடுத்தவர்களுக்கு தந்து உதவவோ ...

வட கிழக்கு பருவமழை தமிழக விவசாயிகளை இந்த ஆண்டு வாட்டி வதைப்பதாக அமைந்துவிட்டது. முன்னேற்பாடு நடவடிக்கைகளில் எப்போதும் பின் தங்கி இருப்பதில் சாதனை படைப்பவர்களான  நம் ஆட்சியாளர்கள் மழைக்காலங்களில் மீட்பர்களாகிவிடுகின்றனர். ஆயினும் விவசாயிகள் எதிர்கொள்ளும் இழப்புகள், சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல; எந்த ஒரு நல்லாட்சிக்குமான அளவுகோல் ஏரி, குளங்களை கண் போல பாதுகாத்து சேதாரமில்லாமல் நீரை தேக்கி வைப்பதும், அறுவடையான நெல்லை பாதுகாப்பாக மழையில் அழிந்து விடாமல் பாதுகாப்பதும் தான். அந்த வகையில் பார்த்தால் நமது ஆட்சியாளர்கள் மிகப் பெரிய தொடர் தோல்வியைத் தான் ...

சிப்காட்டிற்கு நிலம் தரமறுத்த விவசாயி கன்னியப்பன் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தையே திகுதிகுக்க வைத்துள்ளது. தொழில் அதிபர்களுக்கு நிலம் தருவதற்கு மறுத்தால் கொலையும் செய்யும் அரசாங்கம் என்பதற்கு சாட்சியாக இந்த சம்பவத்தை பார்க்கிறோம் என்கிறார், உழவர் உரிமை இயக்கத்தின் அருள் ஆறுமுகம்; இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் இருக்கிறது. விவசாயமே நமது நாட்டின் உயிர் நாடியாக உள்ளது என்றார், மகாத்மா காந்தி. ஆனால், தொழிற்சாலைகளை  அதிகரிக்க, விவசாயத்தை வீழ்த்த எந்த எல்லைக்கும் செல்வோம் என்பதற்கு ஏற்ப இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ஏற்கனவே ...

இந்தியாவின் மக்கள் தொகையை குறைப்பதற்கான சதித் திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருக்குமோ.. என்று எண்ணத் தோன்றுகிறது. விஷத்தையே அமிர்தமென்றும், பசுமை அழிப்பையே பசுமை புரட்சி என்றும், மரபணு மாற்றுப் பயிர்களே மானுடத்தின் மீட்பு என்றும் விளம்பரங்கள் செய்யும் அரசுகள் குறித்த விழிப்புணர்வு அலசல்; மரபணு மாற்றப்பட்ட டி.ஆர்.எஸ் தன் (கமலா), பூசா டிஎஸ்டி ரைஸ் 1 என்கிற இரண்டு நெல் ரகங்களை வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு. இதற்கு சொல்லப்பட்ட காரணங்கள் மிக அற்பமானவை என்பதால் தான், நமக்கு இப்படித் தோன்றுகிறது. # இது கூடுதலாக ...