அதிவேகமெடுக்கும் தொழில் மயம், நகர்மயம்! அதற்காக விழுங்கப்படும் லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள்! வீழ்த்தப்படும் விவசாயம், அழிக்கப்படும் நீராதாரங்கள்..! அகதிகளாக்கப்படும் விவசாயிகள்..! முன் எப்போதும் இல்லாத வகையில் அழிவுப் பாதையில் பயணிக்கும் தமிழகம் குறித்த துல்லியமான அதிர்ச்சி ரிப்போர்ட்! திமுக அரசு பதவி ஏற்ற இரண்டரை ஆண்டுகளுக்கு உள்ளாக பரந்தூரில் தொடங்கி பழவேற்காடு, கடலூர், கிருஷ்ணகிரியின் உத்தனப்பள்ளி, நாகமங்களம், அயர்னப்பள்ளி, செய்யாறு மேல்மா, வாசுதேவ நல்லூர், கடைய நல்லூர் கெலமங்களம்.. என ஒவ்வொரு நாளும் நிலப் பறிப்பு என்பது நாளும், பொழுதுமாக அரங்கேறி வருகிறது. ...
திமுக ஆட்சியில் இரண்டரை ஆண்டுகளில் இரண்டு டஜனுக்கும் மேற்ப்பட்ட இடங்களில் பல்லாயிரம் ஏக்கர்களில் விவசாய நிலப் பறிப்புகள் நடந்துள்ளன! நாளும், பொழுதுமாக விவசாய நிலங்களை பறித்த வண்ணமுள்ள தமிழக அரசின் உண்மையான நோக்கம் என்ன..? விவசாயிகள் மீதான குண்டர் சட்ட வாபஸிலும் ஒரு நாடகமா? “விவசாயிகள் மீது போட்ட குண்டர் சட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டோம்” என்கிறார் முதல்வர்! ஆனால், திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் விவசாயிகள் ஜாமின் மனுவையே நிராகரிக்க சொல்லி அரசு வழக்கறிஞர் நீதிபதியிடம் கோர்ட்டில், “குண்டர் சட்டம் விவசாயிகள் மீது ரத்து என ...
செய்யாறு மேல்மா பகுதியில் வளம் கொழிக்கும் 3,200 ஏக்கர் விவசாய நிலத்தில் தமிழக அரசு சிப்காட் அமைக்க முயற்சிப்பதை எதிர்த்து 107 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள் இன்று சென்னைக்கு வந்து ஆக்ரோஷமாக போராடினர்…! அரசு தற்கொலைக்கு தூண்டுவதாக கொந்தளிப்பு; முப்போக நிலத்தை எடுத்து மூர்க்கமாக சிப்காட் அமைக்க முயற்சிப்பதை எதிர்த்து, பகுதி மக்கள் ”விவசாய நிலத்தை ஏன் அழிக்கிறீர்கள். எங்கள் வாழ்வாதாரம் அனைத்தும் இந்த நிலத்தை நம்பியே உள்ளது” என்று அரசுக்கு எதிராக காத்திருப்பு போராட்டம் செய்து வருகிறார்கள். 107 நாட்கள் ...
பொய்களையே மெய்யாக்கி, அயோக்கியர்களையே புனிதர்களாக்கி, மக்களை எப்போதுமே மாயையில் ஆழ்த்தி பழக்கப்பட்ட சமூகத்தில், இந்திய விவசாயத்தை இருட்டில் தள்ளிய, லட்சோப லட்சம் விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிய எம்.எஸ்.சுவாமிநாதன் ஆளும் வர்க்கங்களால் கொண்டாடப்படலாம்! ஆனால், உண்மை இது தான்; உப்புக் கல்லை வைரமென்று சொன்னால் – அதை ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் – நீ கதறி என்ன? பதறி என்ன தோழா..? ஒன்னுமே நடக்கலை ரொம்ப நாளா? “தஞ்சையில் உள்ள வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் வைக்கப்படும். அதிக மதிப்பெண் பெறும் வேளாண் கல்லூரி ...
விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி நாதன் மறைந்துவிட்டார். ஊடகங்களும், அரசியல் தலைவர்களும், வி.வி.ஐ.பிக்களும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகிறார்கள்! மறைந்த ஒருவரைப் பற்றி இழிவாகப் பேசுவது நமது மரபல்ல. ஆனால், அவரைப் பற்றிய பொய்யான பிம்பங்கள் கட்டமைக்கப் படுகின்றன. இதோ சில உண்மைகள்; அவரைப்பற்றி கட்டமைக்கப்பட்ட ஒவ்வொரு பொய்யாக எடுத்துக் கொண்டு, அதற்கு மாற்றான உண்மைகளை விளக்குகிறேன்; # இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டது. ஆகவே, பசுமை புரட்சி இல்லாவிட்டால் பசி, பஞ்சம் தலைவிரித்து ஆடியிருக்கும். பசுமை புரட்சிக்கு முடிவெடுத்த நேரத்தில் நம் நாட்டில் உணவு உற்பத்தி ...
இந்தியாவில் அதிக மக்களின் உணவாக அரிசி உள்ளது. அரிசி விளைச்சல் சமீபமாக வீழ்ச்சி அடைந்துள்ளது! இதனால், உள் நாட்டில் அரிசி பற்றாக்குறை நேருமோ…, அரிசி பற்றாகுறை என்பது அரசியல் வீழ்ச்சியாகிவிடுமே.. என்பதால், மத்திய பாஜக அரசு வெளி நாடுகளுக்கான அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. என்ன நடந்தது..? இந்திய மக்களின் முக்கிய உணவான அரிசியில் பற்றாகுறை ஏற்பட்டு, அதன் மூலம் உள்நாட்டில் அரிசி விலை தாறுமாறாக ஆகுமானால், அது 2024 நாடளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு தடுக்கவே முடியாத படுபயங்கர சரிவை உருவாக்கிவிடும்… என்ற பயத்தில் ...
மண் மலடானது. விவசாயம் நஞ்சானது. உணவில் சத்தும், சுவையும் குறைந்து வருகின்றன. நோய்கள் பல்கி பெருகி வருகின்றன. தற்போதும் கூட இயற்கை விவசாயத்திற்கு எவ்வளவு எதிர்ப்புகள்! ‘கார்ப்பரேட் லாபி’ மிக வலுவாக விவசாயத்தில் நிலவுவதை மீறி எப்படி தற்சார்பு விவசாயத்தை சாத்தியமாக்கப் போகிறோம்..? ”விளைச்சலை அதிகரிக்கவே ரசாயன உரங்களை அறிமுகப்படுத்தினோம்” எனச் சொல்கிறார்கள்! அந்த ரசாயன உரங்களால் மண் வளம் குறைந்தது. ஆகவே, ”இன்னும் வீரிய ரசாயன உரங்களைப் போடுங்கள்” என சிபாரிசு செய்தார்கள்! விவசாயிகளும் கூடுதல் பணம் செலவழித்து வீரிய ரசாயன உரங்களை ...
தமிழக வேளாண்மை நிதிநிலை அறிக்கை கண் கவரும் ஜிகினா தோரண அறிவிப்புகளால் களை கட்டுகிறது! இதற்கு இத்தனை கோடி! அதற்கு அத்தனை கோடி! என.. அறிவிப்புகள்! ஆனால், கடைசியில் விவசாயிகள் விழுந்து அழுவதோ.., தெருக் கோடியில்! உண்மையில் யாருக்கானது இந்த வேளாண் நிதி நிலை அறிக்கை..? வெளி நாடுகளுக்கு விவசாயிகளை அழைத்துச் செல்லும் திட்டம், ரூ.14 ஆயிரம் கோடி பயிர்கடன், ரூ.1,500 கோடி வட்டிக்கடன், 77 லட்சம் பனங்கன்றுகள் 15 லட்சம் தென்னங்கன்றுகள், பாரம்பரிய நெல் உற்பத்திக்கு ஊக்கம், தரிசு நில மேம்பாட்டு, சிறுதானிய ...
பார்த்தவுடன் சாப்பிடத் தூண்டும் கோடையின் கொடை தான் தர்பூசணி! சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உட்கொள்ளும் இந்த தர்பூசணி நீர்சத்து நிறைந்தது! வெயிலுக்கு இதமானது! ஆனால், இதில் தற்போது கொட்டப்படும் அளவுக்கு அதிகமான ரசாயன மருந்துகளால் உண்பவர்களுக்கு கேடு தரும் என்பது உறுதி! ”கோடையின் அற்புதமான கொடையாகப் பார்க்கப்படும் தர்பூசணி பல உஷ்ண நோய்களை தடுக்கும் இயற்கை ஆற்றல் கொண்டதாகும்! வெயில் காலத்தில் நம் உடலில் வியர்வை மூலம் வெளியேறும் தண்ணீரை ஈடுகட்ட இந்தப் பழம் பெரிதும் உதவுகிறது. ‘சிறு நீரகச் செயல்பாட்டை ...
‘சத்து சேர்க்கப்பட்ட அரிசியை தருகிறோம்’ என்பதாக செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் அரிசியில் கலந்து தருகிறார்கள்! இதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஏற்கனவே அயோடின் கலந்த உப்புத் திணிப்பால் ஏற்பட்டுள்ள விளைவுகள் என்ன? இதன் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன்கள் என்ன..? என விளக்குகிறார் இயற்கை வேளாண் ஆய்வாளர் பாமயன். அது என்ன செறிவூட்டப்பட்ட அரிசி ((fortified rice) இந்தியக் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் அனீமியா எனப்படும் ரத்தசோகை, நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு உள்ளதால், அவர்களுக்காக அதில் இரும்புச் சத்து, வைட்டமின், ஃபோலிக் அமிலம் போன்ற ...