ஒய்வறியா உழைப்பு, நேர்மையான அரசியல்,வெளிப்படைத் தன்மை ஆகிய குணாம்சங்களைக் கொண்டவர் கே.பாலகிருஷ்ணன்! யோகேந்திர யாதவ் தலைவராக இருக்கும் ’ஸ்வராஜ் இந்தியா’ (சுயஆட்சி இந்தியா) கட்சியின் தமிழக  தலைவராக இருக்கிறார் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தமிழகத்  தலைவராகவும் உள்ளார்.அவரது நேர்காணல்! ’ஸ்வராஜ் இந்தியா’ கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறிவர்களால் ஆரம்பிக்கப்பட்டது தானே?   ஆமாம், அன்னா ஹசாரே போராட்டம் நடத்தியபோது அதில் நான் ஆர்வமாக கலந்து கொண்டேன். கேஜ்ரிவால், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகிய மூவரும் சேர்ந்து அதன் ...

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் நெல் விற்கச் செல்லும்போது அசல் சிட்டா-அடங்கல் ஆவணம் வேண்டுமென   மாவட்ட ஆட்சியர் கெடுபிடி செய்வதாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சிவ இளங்கோ கண்டன அறிக்கை வெளியிடுள்ளார். டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடந்துவரும் இந்த வேளையில், தஞ்சை உள்ளிட்ட பெரும்பாலான . டெல்டா மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்க செல்லும்போது விவசாயிகளிடம் நகல் (Xerox) சிட்டா- அடங்கல் இருந்தால் போதும் என்ற உத்திரவு அங்கு நடைமுறையில் உள்ளது. ஆனால் திருவாரூர் ...

இந்த அவசர சட்டங்களும் அதிரடிச் சட்டங்களும் எதற்காக? மத்திய அரசு  வேளாண்மை தொடர்பாக மூன்று அவசர சட்டங்களை  பெரும் அமளிக்கிடையில் நிறைவேற்றியது. இந்த சட்டங்கள் மட்டுமல்ல இதற்கு முன் வந்த  சில சட்டங்களும் வேளாண்மையை மேம்படுத்த , விவசாய வருவாயை இரட்டிப்பாக்க என்ற விளம்பர வார்த்தைகளோடு கொண்டு வரப்பட்டன. கால்நடை இனப்பெருக்க சட்டம், மின்சார திருத்தச் சட்டம் – கூட்டுறவு சங்கங்களை மேலாண்மை செய்வதற்கான மாற்றங்கள் போன்றவைகளும் இப்படியான அறிவிப்புகளுடன் தான் வந்தன – சில வெகு முன்பாகவே. பெருவாரியான மக்களின் பார்வையை ஈர்க்காமலேயே. ...

பாஜக ஆட்சியில் விவசாயிகள் தங்கள் விளை பொருள்களுக்கு உரியவிலை நிர்ணயிக்க வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்தனர் ஆனால்,உச்சபட்ச கொடுமையாக விவசாயிகளையே முதலாளிகள் விலை பேசிவிட தோதாக மூன்று மசோதாக்களை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. எதிர்கட்சிகளோடு பாராளுமன்றத்தில் விவாதிக்கவோ, தவறுகளை திருத்திக் கொள்ளவோ மத்திய அரசு முற்றிலும் விரும்பவில்லை! மாநிலங்களவையில் 12 கட்சிகள் பதறின..,கதறின..எதுவும் நடக்கவில்லை! சஸ்பெண்டானவர்கள் வெளியில் அமர்ந்து இரவுபகலாக போராடினர். தற்போது 18 கட்சிகள் ஜனாதிபதிக்கு இந்த மசோதாக்களை ஏற்காமல் பாராளுமன்றத்திற்கு திருப்பி அனுப்ப கோரிக்கை வைத்துள்ளனர். அதுவும் நடப்பதற்கு வாய்ப்பு ...