பாஜக எப்படி ஒரு பலமான இயக்கமாக மேலெழுந்து வந்தது? இதன் பின்னணியில் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் எப்படி அடித்தளமாக இயங்கி கொண்டுள்ளது.. என்பதை புரிந்து கொள்ளாமல், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு வெற்றி சாத்தியமில்லை. எத்தனை திட்டமிடல்கள்! எவ்வளவு செயல்பாடுகள்..!வாவ்! பாஜக என்ற அரசியல் கட்சி அடிப்படையில் பலவீனமானது! ஆனால், அதற்கு அடித்தளமாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ் என்ற சித்தாந்த அமைப்பு மிக வலுவானது. இதில் பயிற்சி பெற்றவர்கள் தாம், பாஜகவில் தலைமை பொறுப்புக்கு பெரும்பாலும் வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தும் அரசியல் செயல் திட்டமாகவே பாஜக ...

தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தின் பின்னணியில் மக்களை திசை திருப்பும் நோக்கம் உள்ளது. உண்மையில் தேர்தல் பத்திரங்கள் வழியே அரசியல் கட்சிகள் பெற்றுள்ள பணம் குறைவே! ஆட்சியாளர்களுக்கு மிக நெருக்கமான நிறுவனங்கள் இந்த பட்டியலில் இல்லாததே வேறு வழிமுறைகளில் பணம் பெறுகிறார்கள் என்பதற்கு சாட்சியாகும். தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு மிக அதிக நன்கொடை தந்த நிறுவனங்களை வரிசைப்படுத்தி பார்ப்போம்; ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்-ரூ.1,368 கோடி ‘மேகா என்ஜீனியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ்  -ரூ.966 கோடி ‘க்விக் சப்ளை செயின் பிரைவேட் ...

காங்கிரஸ் கட்சி முதலில் தன்னை தகவமைத்துக் கொள்ளுமா? ஊழல் பெருச்சாலிகள், சுயநலவாதிகள் களை எடுக்கப்படுவார்களா? பாஜக கொண்டு வந்த ஆபத்தான சட்டங்களை வாபஸ் வாங்குமா..? மாநில உரிமைகள் மறுபடியும் மீட்கப்படுமா? சில குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்திற்கு காங்கிரஸ் உடன்படுமா..? பாஜகவின் மதவெறி அரசியல் காங்கிரஸ் கட்சியிடம் கிடையாது! சிறுபான்மை வெறுப்பு கிடையாது! கடவுள் பெயரால் மக்களை மயக்கும் அரசியல் இல்லை. வன்முறை, வெறுப்பு மூலம் மக்கள் ஆதரவை பெறும் அரசியல் குயுக்தியும் இல்லை. எனவே, பாஜகவிற்கு மாற்றாக ஜனநாயக சக்திகள் காங்கிரசை தூக்கி ...

பாஜக வளர்ந்து விட்டதாம்…! மிகைப்படுத்தப்பட்ட ஊடகப் பிரச்சாரங்கள் நடக்கின்றன!ஆனால், யதார்த்தம் என்ன..? இந்தத் தேர்தலை பொறுத்த அளவில் உண்மையில் பாஜகவின் நோக்கம் வெற்றி பெறுவதல்ல..!  தன்னை வலுப்படுத்துவதே! இந்தத் தேர்தலில் ஜனநாயக சக்திகளின் கடமை என்ன..? ”கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, நீலகிரி தொகுதிகளில் பாரதிய சனதா கட்சி வெற்றி பெறும் என்பதை இப்போதே எழுதிக் கொடுத்து விடுகிறேன்” என்று பாசக தலைவர் அண்ணாமலை அடித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். இன்னொருபுறம் தன்னை ஒரு வலதுசாரி சிந்தனையாளராக அறிவித்துக் கொண்டு பேசும் நடிகை கஸ்தூரி, “திமுக ...

ஒரு வழியாக தேர்தல் பத்திர விவரங்களை ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்திற்கு தந்துள்ளது. ஆனால், இதன் பின்னணியில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. தேர்தல் ஆணையர் அருண்கோயல் ராஜினாமா, சி.ஏ.ஏ அமலாக்கம்..என ஒன்றுக்கொன்று தொடர்புள்ள விவகாரங்களை எப்படி புரிந்து கொள்வது எனப் பார்ப்போம்; மோடி அரசின் தேர்தல்பத்திர திட்டம் சட்டத்திற்கு புறம்பானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை , இந்த பத்திரங்களை வாங்கியவர்களின் விவரங்களும், பெற்ற கட்சிகளின் விவரங்களையும் மார்ச் -6 ந் தேதி கொடுக்க உத்தரவிட்டது. ஆனால், ...

1908 ல் அகில இந்தியாவையும் அதிர வைத்தது திருநெல்வேலி எழுச்சி! அப்போது ரஷ்யாவில் புரட்சி நடக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி தோன்றவில்லை. ஆனால், தூத்துக்குடியில் மக்களைத் திரட்டித் தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். திருநெல்வேலியும், தூத்துக்குடியும் தீக் கொழுந்துவிட்டு எரிந்தன! இதன் பின்புலத்தில் இருந்த தலைவர்களின் அர்ப்பணிப்பு, தியாகம், மக்களின் ஆவேசத்தை நினைவு கூர்வோம்; இன்று திருநெல்வேலி எழுச்சி தினமாகப் பெருமிதத்துடன் நினைவுகூரப்படும் நாள். 116 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டவுடன் திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் ...

பசுமை வயல்வெளிகள் பூத்துக் குலுங்கும் கிராமங்கள்! நாற்று நடும் பெண்கள், மாடு பூட்டி ஏர் உழும் உழவன், ஏரிகள், குளம், குட்டைகள். ஆடு, மாடு, கோழிகள் குறுக்கும், நெடுக்குமாக ஓடும் தெருக்கள், கண்ணாம் பூச்சி, சடுகுடு விளையாடும் சிறுவர்கள்..இன்னும் எத்தனை நாள் இந்த அமைதியான வாழ்க்கை அனுமதிக்கப்படுமோ..? எப்போது புல்டோசர்களின் அணிவகுப்பு நடக்குமோ..அப்படி ஒரு சம்பவம் நடந்தால்.., அதற்கு பிறகு நம் வாழ்க்கை என்னாகுமோ..? இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போகும் கிராமம்! பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் மற்றும் ...

போலி லாட்டரி சீட்டு விற்பனையின் சக்கரவர்த்தியாகத் திகழும் மார்ட்டினின் அரசியல் வியூகங்கள் அசத்தலானவை!  அவரது குடும்பம் பல கட்சிகளிலும் ஊடுருவி ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது. அந்த வகையில் ஆதவ் அர்ஜுனா விசிகவில் சேர்ந்ததையும், தற்போது ரெய்டுகள் நடந்ததையும் அலசுகிறது இந்தக் கட்டுரை; இந்தியாவின் அனைத்து தேசிய, மாநில கட்சிகளுக்கும் கொள்ளை கொள்ளையாக நிதி கொடுத்து தன் லாட்டரி சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளவர் தான் மார்ட்டின்! லாட்டரி சீட்டுக்களை பெரும் எதிர்பார்ப்போடு வாங்கி தொடர்ந்து ஏமாறும் ஏழை, எளிய தொழிலாளிகள் தாம் இவரது மூலதனம். எத்தனை உழைத்தாலும் ...

சினிமாக்களை மிஞ்சும் கொடூரங்களால் மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளி இன்று சர்வதேச புகழ் பெற்று விட்டது! பாலியல் சித்திரவதைக்குள்ளான பல நூறு பெண்கள்! முடங்கிய அரசு நிர்வாகம்! பல்லாயிரம் ஏக்கர் நில அபகரிப்புகள்! ஒரு தனி மனிதனின் கண் அசைவுக்கு சேவையாற்றிய அரசு அதிகாரிகள்! இந்த நூற்றாண்டிலும் கூட இப்படி நடக்குமா..? அதிகபட்சம் சுமார் மூன்றரை லட்சம் மக்களைக் கொண்ட ஒரு சிறிய தீவு போன்ற சிற்றூர் தான் சந்தேஷ்காளி! இங்கு சர்வ வல்லமை பெற்ற வில்லனாக வலம் வந்தவரான ஷேக் ஷாஜகான் நடத்தியுள்ள கற்பனைக்கு ...

கால்கள் செயல் திறனற்ற ஊனமுற்ற பேராசிரியரைக் கண்டு இவ்வளவு பயப்படுவானேன்..? உரிய காரணங்களின்றி பத்தாண்டுகள் சிறைவாசம்! அவ்வளவு பயங்கரவாதியா இவர்? செய்த குற்றமென்ன..? மனித உரிமை செயற்பாட்டாளராக இருப்பது மன்னிக்க முடியாத குற்றமா? அரசின் பதற்றத்திற்கு காரணமென்ன..? பேராசிரியர் ஜி.என். சாய்பாபா மும்பை உயர்நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். 5 வயதில் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டது முதல் சக்கர நாற்காலியே கதியாக வளர்ந்த சாய்பாபா தனது விடா முயற்சியாலும், தளராத நம்பிக்கையினாலும் படித்து  தில்லி பல்கலைக்கழக பேராசிரியரானவர். ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ...