தமிழ்நாட்டை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்தும் இலக்கை முதல்வர் ஸ்டாலின் நிர்ணயித்துள்ளாராம்! “தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப் பெரிய பாய்ச்சல்” என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார்! உண்மை தான்! ஆனால், இது பின்னோக்கிய பாய்ச்சல்! இந்தக் கட்டுரை தற்போதைய தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எதிரான கட்டுரை என்று வாசகர்கள் உடனடி முடிவுக்கு வந்துவிட வேண்டாம். ஏனென்றால், ‘இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்தியாவிலும் பல மாநிலங்களில் நடப்பதே..’ என முழுமையாகப் படித்து முடிக்கும் போது ...

உலகின் மிகப் பெரிய பணக்கார நாடான அமெரிக்காவிலேயே மூன்று வங்கிகள் திவாலாகி உள்ளன! இவை எப்படி திவாலாகின? என்னென்ன காரணங்கள்? அமெரிக்க மக்களும், அரசும் இவற்றை எப்படி அணுகுகின்றன? இதன் எதிர் வினையாக இந்தியா என்ன பாதிப்பை சந்திக்கும். இந்திய வங்கிகள் பலமாக உள்ளனவா..? ஒரு அலசல்! உலகம் முழுக்க ஒரு வித பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது! அடுத்தடுத்து என ஒரே வாரத்தில், அமெரிக்காவின் மூன்று வங்கிகள் திவாலாகி விட்டன. திவாலானதில் மிகப் புகழ் பெற்ற பெரிய வங்கி, சிலிக்கான் வேலி வங்கியாகும். ...

ஒரு தனி நபரின் பகாசூர மோசடிகளுக்கு துணை போன ஒரு பிரதமரையும், ஆட்சி நிர்வாகத்தையும் இந்தியா இது வரை கண்டதில்லை! ஒரு சாதாரண  அதானியை, உலக பணக்காரனாக்க பாஜக அரசானது சட்டம், விதிமுறைகள் அனைத்தையும் வளைத்து, நீதித் துறையையும் கறைபடுத்தியது அம்பலப்பட்டு உள்ளது! இந்தியாவின் நம்பர் ஒன் கார்ப்பரேட் குழுமம் அதானியின் ஷேர்கள் அதிரடியாக சரிவை சந்தித்ததில் 4,25,000 கோடிகள் இழப்பை சந்தித்துள்ளது. மோடிக்கு மிக நெருக்கமானவரான குஜராத்தின் கௌதம் அதானியின் கம்பெனி ஷேர்கள் சரிந்ததற்கு  அமெரிக்காவை சார்ந்த ஹின்டன்பர்க் ரிசர்ச் என்ற நிறுவனத்தின் ...

நடுத்தர வர்க்க மாதாந்திர சம்பளக்காரர்களுக்கு கிடைக்கும் சம்பளமே போதுமானதில்லை. அதே சமயம், ஆண்டுக்காண்டு கணிசமான தொகை வருமான வரிக்கு போய்விடுகிறது. சட்ட பூர்வமாக வருமான வரியில் இருந்து விலக்கு பெற செய்ய வேண்டியது என்ன? தவிர்க்க வேண்டியது என்ன? வருமான வரி கட்டுபவர்கள் மார்ச் மாதம் வந்தால் எப்படி வரி சேமிக்கலாம் என்று நண்பர்களிடம் ஆலோசனை கேட்க தொடங்கி விடுகிறார்கள். பெரும்பாலானோர் சொல்லும் யோசனை இன்சூரன்ஸ் பாலிசி எடுங்கள் போதும். வரிப் பணத்தை சேமிக்கலாம் என்பது தான்! வரி சேமிப்பிற்கு என்று சில திட்டங்கள் ...

வங்கி வைப்பு தொகைக்கு அதிகபட்சம் 5.5 % வட்டி வழங்கப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்கள் 12% வருமானம் தருகிறது. சில திட்டங்கள் 12% க்கும் அதிகமாக வருமானம் வழங்குகிறது. மியூச்சுவல் பண்டில் என்னென்ன திட்டங்கள் உள்ளன! இது பாதுகாப்பானதா? நீண்ட கால திட்டத்தில் நாம் இருந்தால் 12% வருமானம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அதனால் வங்கி வைப்பு நிதியில் கொஞ்சம் பணமும், மியூச்சுவல் ஃபண்டில் கொஞ்சம் பணமும் முதலீடு செய்யுங்கள். மியூச்சுவல் ஃபண்டில் Large Cap Fund, Mid Cap Fund, Small Cap ...

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பாதுகாப்பானவையா? இவை எப்படி செயல்படுகின்றன? அதை தெரிந்து கொள்வது எப்படி? ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை என்ன? மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தை, கடன் சந்தை மட்டும் இல்லாமல் தங்கத்திலும்  முதலீடு செய்யும் திட்டங்களையும் வெளியிடுகிறது. அன்றைய தங்க விலைக்கு ஏற்ப உங்கள் முதலீடு உயரும், குறையும். ஆனால்,  நாம் முதலீடு செய்யும் தொகைக்குத் தங்கமாக தரமாட்டார்கள்.  பணமாகத்தான் தருவார்கள். அந்த தொகையைக் கொண்டு நாம் வெளியே தங்கம் வாங்கிக் கொள்ளலாம். ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் ...

சேமிப்பு இல்லாத வாழ்க்கை சேதாரமாகிவிடும். தவறான இடத்தில் சேமிக்க கொடுப்பது ஆதாரத்தையே அழித்துவிடும்! சேமிக்கும் பணத்தை என்னென்ன வழிமுறைகளில் முதலீடு செய்யலாம்..? ரிஸ்க் எடுக்க விருப்பமா? ரிலாக்ஸ் சேமிப்பு விருப்பமா? கடந்த 5 கட்டுரைகளில் அரசாங்கம் மக்களுக்காக உருவாக்கிய சேமிப்பு – முதலீடு – பென்சன் திட்டங்களைப் பார்த்தோம். இவை எல்லாம் பாதுகாப்பானவை. குறிப்பிட்டுள்ள வட்டி கொடுத்து விடுவார்கள். ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும். என்றைக்கும் பாதுகாப்பான முதலீடுகளுக்கு வருமானம் அதிகமாக இருக்காது. எந்த அளவு ஒரு முதலீட்டில் ரிஸ்க் அதிகம் உள்ளதோ, அந்த ...

விவசாயக் கூலி, தள்ளுவண்டிக்காரர், தினக் கூலிகள், ஆட்டோ தொழிலாளி, வீட்டு வேலை செய்யும் பெண்கள் இவர்களைப் போன்ற ஏழை, எளியவர்கள் எல்லாம் 60 வயதானதும் பென்ஷன் வாங்குவதற்கு அரசு ஒரு எளிய திட்டம் வைத்துள்ளது! அதை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள், நிரந்தரமில்லாத வேலை செய்து கொண்டு இருக்கும் ஏழை, எளியவர்கள், தினக் கூலியாளர்கள்  எந்த நேரமும் பொருளாதாரச் சிக்கலில் இருப்பார்கள். வருமானம் பற்றாக்குறையாகவே  இருக்கும். 60 வயதுக்கு பிறகு பொருளாதார ரீதியாக எப்படி வாழப் போகிறோம் என்று யோசித்தே ...

தற்போது அரசு ஓய்வூதியம் தருவதில்லை என்பதால் சோர்வடைய வேண்டியதில்லை. நமக்கு நாமே ஓய்வு காலத்தில் பென்ஷன் கிடைக்க ஒரு வழிமுறையை உருவாக்கி கொள்ள முடியும்! அதற்கு என்ன செய்ய வேண்டும்? குறுகிய, நடுத்தர, நீண்ட கால முதலீடு வகைகளில் பெரும்பாலும் அதிகமானோர் முதலீடு செய்வார்கள். இந்த தொகையெல்லாம் நாம் சுறுசுறுப்பாக நன்றாகச் செயல்படும் போது பயன்படும் ஆனால்  இதைவிட  முக்கியமான முதலீடு  ஓய்வுக்கால முதலீடு ஆகும். இவை நாம் செயல்பட முடியாத போது தேவைப்படும். 58 வயது, 60 வயது ஓய்வு என்பதெல்லாம் முடிந்து ...

நிகழ்காலம் போலவே எதிர்காலமும் முக்கியம். நிகழ்காலப் பிரச்சனைகளால் நாம் எதிர்காலத்தை சிந்திப்பதில்லை. இன்றைய வருமானம் எதிர்காலத்தில் சந்தேகமே. இன்றைய வருமானத்தைச் சரியாகக் கையாண்டால் எதிர்காலம் சிரமம் இல்லை. விபரமில்லாமல் பல மோசடித் தனியார் நிதி நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏகப்பட்டவர்கள் ஏமாறுவது ஒரு தொடர்கதையாகி வருகிறது என்பதால், அரசு சேமிப்பு திட்டங்கள் குறித்த ஒரு அறிமுகத்தை இங்கு தருகிறோம். அரசு திட்டங்களில் பயம் தேவை இல்லை! பாதுகாப்பிற்கும் பஞ்சமில்லை! அரசாங்கம் நாட்டிற்கு ஐந்து ஆண்டு திட்டம் உருவாக்குகிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டில் என்ன செய்ய ...