திடீரென்று அகத்தியரைத் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர்! அகத்தியர் விழாக்கள், கருத்தரங்குகள், கொண்டாட்டங்கள், வழிபாடுகள் என பல விதங்களில் மத்திய பாஜக அரசாங்கத்தால் அகத்தியர் தற்போது முன்னெடுக்கபடுவதன் பின்னணி என்ன? இதில் அரசியல் நோக்கங்கள்  உள்ளனவா? அகத்தியருக்கான விழா கொண்டாட்டத்தை முதலில் சுதா சேஷ் ய்யன் துணைத் தலைவராக உள்ள செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி வைத்தது. அவர்கள் பற்பல பார்ப்பன எழுத்தாளர்களையும், அவர்களையொத்த சிந்தனை போக்குகள்ளவர்களையும் அழைத்து அகத்த்தியர் தான் இந்த தமிழ்ச் சமூகத்தின் அகம், புறம் இரண்டிற்குமே அடிநாதமானவர் என்று விதந்தோத வைத்தனர்! ...