அங்கீகாரமின்றி பள்ளி தொடங்கி, பெற்றோர்களிடமே வட்டியில்லா கடனாக முதலீடு பெற்று பள்ளியை விரிவுபடுத்தி, அடிமாட்டுக் கூலிக்கு ஆசிரியர்கள், பணத்தை திரும்ப  கேட்டால் அடியாட்கள் என கல்வித்துறை, காவல்துறை இரண்டையும் கையாலாகாதவர்களாக்க முடிந்தால், இதோ இது போல் நீங்களும் கோடீஸ்வர கல்வி வள்ளலே: தமிழ்நாட்டில் அங்கீகாரமில்லாத பள்ளிகள் பெற்றோர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்து நாமம் போடுகிறார்கள் என்பதற்கும், இது தொடர்பான புகார்களுக்கு கல்வித் துறையும், காவல்துறையும், நீதிமன்றங்களும் எப்படி மதிப்பளிக்கிறார்கள் என்பதற்கும் இது ஒரு  சான்று; செங்கல்பட்டு , காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தின் மண்ணிவாக்கத்தில் இயங்கி ...