நடிகரும், கலை உலக மேதாவியுமான சத்யேந்திராவின் மறைவு.  பிரபல நடிகர் அஜித்தின் தயார் மோகினியின் மறைவு. இவை இரண்டையும் இந்தச் சமூகம் எப்படி அணுகியது என்பது பல பட்டவர்த்தனமான உண்மைகளை நமக்கு முகத்தில் அறைந்தார் போலப் படம் பிடித்துக் காட்டுகிறது; யேங்கப்பா! எத்தனையெத்தனை வித உருக்கமான பதிவுகள் மறைந்த கலைஞன் சத்யேந்திரா குறித்து! உலக சினிமாக்களை கரைத்துக் குடித்தவர், சினிமா அறிவு நிரம்பப் பெற்றவர். பன் மொழிப் புலமையாளர், பாசாங்குத்தனமற்ற நிஜமான மனிதன், சினிமாவையே உயிர் மூச்சாகக் கருதி வாழ்ந்த ஒரு ஏழைக் கலைஞன் ...