சரணாகதி அரசியலைத் தான் இன்று சகல கட்சித் தலைவர்களும் சாதுர்யமாகச் செய்து கொண்டுள்ளனர். அடிமை அரசியல் தான் அனைத்து இடங்களிலும் நிலை கொண்டுள்ளது! அடிமை அரசியல் குற்றவாளிகளையே கூட்டாளியாக்கிக் கொள்கிறது! தண்டிக்கப்பட வேண்டியவர்களை தலைவர்களாக்குகிறது! மாபெரும் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிறையில் இருந்து தப்பித்து வெளிநாட்டிற்குச் சென்று இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்குவதற்கு முன்பு, கடைசியாக வங்க ஆளுநருக்கு எழுதிய கடிதத்தை வாசிக்க நேர்ந்த போது சிலிர்த்துப் போனேன். ”மனிதனுக்கான மிகப் பெரிய சாபம் என்பதே அவன் அடிமையாக நீடித்து இருப்பதே! ...