இன்னும் எத்தனை அணு உலைகளையும் இந்தியா தாங்குமாம். ஆகவே, ”அணு உலை ஆரம்பிக்க விரும்புவர்கள் யாராயினும், ‘பெரிய விபத்துக்கள் ஏற்பட்டால், இழப்பீடு தர வேண்டும்’ என்ற சட்டங்களை கண்டு அஞ்ச வேண்டாம்! அவற்றை நீர்த்து போகச் செய்யத் தானே நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம்…”என்கிறார் நிர்மலா சீதாராமன்! சமீபத்திய பட்ஜெட்டில் பட்ஜெட்டில் நாட்டின் நீண்டகால எரிசக்தி மாற்றத்திற்கான நடவடிக்கையின் ஒரு அம்சமாக அணுசக்தி குறிப்பிட்டு, 2047-ம் ஆண்டுக்குள் 100 கிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனை நிறுவ ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவிற்கான அணுசக்தி இயக்கத்தை ...