சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளியின் பத்து வயது சிறுமி பாலியல் பலாத்காரக் கொடுமைக்கு உள்ளான விவகாரத்தில் தமிழக காவல்துறையின் அணுகுமுறை என்ன? இதில் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது..? – நீதிபதி ஹரி பரந்தாமனின் கட்டுரை; டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாக வெளியிட்டது. சமூக அக்கறை கொண்ட வழக்குரைஞர் ஏ.பி.சூரியபிரகாசம் அந்த செய்தியை சென்னை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து, உயர் நீதிமன்றமே தானாக முன்வந்து அதை ஒரு பொதுநல வழக்காக விசாரித்தது. இரு நீதிபதிகள் ...