அரசியலுக்கு வந்த ஐந்தே ஆண்டுகளில் அரசியல் தகிடுதத்தங்களில் கைதேர்ந்தவனாகி, இன்று பாஜகவில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கும் நிலைக்கு வந்துள்ளார், அண்ணாமலை. ஏன் இந்த முடிவுக்கு வந்தார்? எப்படித் திட்டமிடுகிறார்? அவரது அரசியல் வியூகம் என்ன? மத்திய பாஜக அண்ணாமலையை அனுமதிக்குமா..? ஒரு அலசல்; முதலில் ஒரு இயல்பான விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலை பாஜகவில் உள்ள மற்றத் தலைவர்களை போல, சித்தாந்த அரசியலுக்குள் சிக்குண்டவர் அல்ல. மிக, மிக பிராக்டிகல் ஆசாமி. இடத்திற்கேற்ப நிறம் மாறுவதற்கும், எதிர்படும் ஆட்களுக்கு ...











