வரும் தேர்தலில் பாஜகவுக்கும், திமுகவுக்கும் தான் நேரடி மோதலாம். தனித்து கூட்டணி அமைத்தே அனைத்து தொகுதிகளிலும் வெல்வார்களாம்…!  சண்டைகள், சர்ச்சைகள், அதிரடி வெறுப்பு பேச்சு, கூட்டத்தை கூட்டும் திறமை.. ஆகியவற்றால் பாஜக வளர்கிறதா? அண்ணாமலை  பாஜகவை வளர்த்து விட்டாராம்! உப்புக் கல் வைரமாகுமா..? கூட்டத்தை கூட்டிக் காட்டியதன் மூலம் தன்னைத் தான் பெருந் தலைவராக நினைக்கிறார் அண்ணாமலை. எப்போதும் பேசுபடு பொருளாக சர்சையை ஏற்படுத்துவதால் தலைவராகிவிட்டதாக நினைத்துக் கொள்கிறார். உண்மையில் தனக்கென்று உண்மையான ஒரு நட்பு வட்டத்தைக் கூட ஏற்படுத்த முடியாத தனி மரமாகவே ...

திருச்சி சூர்யா சிவாவின் பேச்சு கொலைவெறிக் கோபாவேசம், அநாகரீகத்தின் உச்சம்! காட்டுமிராண்டித்தனம்!..எனத் தெளிவாக தெரிய வந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க அண்ணாமலையால் இயலவில்லை! சசிகலா புஷ்பா பாதிக்கப்பட்டதற்கும் நடவடிக்கை இல்லை. காரணம் என்ன? பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவரான டெய்சி சரணிடம் போனில் பேசும் சூர்யாவிடம் தன் கோபம் இன்னதற்கானது தான் சொல்லும் நிதானம் கூட இல்லை. ‘எதிர்முனையில் பேசுபவர் பெண் என்பதால் என்ன செய்துவிட முடியும்’ என்று நினைத்திருக்கிறார் போலும்! ”நீ படுத்து தானே பதவி வாங்கினே..?” ”உன்னை  நடுரோட்டில் ...

அகங்காரம், அரைவேக்காட்டுத்தனம், வெறுப்பு, வன்மம் இதையே அரசியல் வழிமுறையாகக் கொண்ட அண்ணாமலையின் அருவெறுக்கதக்க அரசியலும், அடிமேல் அடி விழுந்தாலும் அமைதி காத்து, சுயமரியாதையை தொலைத்து பதவி சுகத்தையே குறிக்கோளாகக் கொண்ட ஸ்டாலினின் அடிவருடி அரசியலுமாக தமிழகம் அதகளப்படுகிறது! பாஜகவின் மீதான மக்களின் குறைந்தபட்ச மரியாதையைக் கூட குழி தோண்டிப் புதைப்பவராக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்! எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வது, எதை வேண்டுமானாலும் பேசிவிடுவது, பேசிய அபத்தங்களுக்கு வண்டி வண்டியாக நியாயம் கற்பிப்பது என அரைவேக்காட்டு அரசியலின் அடையாளமாக அண்ணாமலை திகழ்கிறார்! தடாலடியாக பேசுவது, ...

அடி பணியாத மனோபாவம், அடிமைச் சிறுமதியாளர்களிடம் இருந்து விலகி நிற்கும் தனித்துவம், திராவிட கொள்கைகளில் உறுதிப்பாடு  போன்ற இயல்புகளுடைய பி.டி.ஆர். தியாகராஜனுக்கும் திமுக தலைமைக்கும் இடையே ஒரு பனிப்போர் நிலவுகிறது என்றாலும், அது இந்த அளவுக்கு மோசமாக போகுமா என்பது அதிர்ச்சியளிக்கிறது. பி.டி.ஆர் ஒரு செயல்வீரர், ‘சொல்லுக்கும், செயலுக்கும் அதிக இடைவெளி கூடாது’ என செயல்படுபவர். மேலை நாட்டுக் கல்வி கற்றவர் மட்டுமல்ல, அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும் தனியார் நிறுவனங்களில் உயர்பதவிகள் வகித்தவர். அந்த வகையில் சுதந்திரமான சிந்தனை கொண்டவர். அடிமை அரசியலை அறியாதவர், விரும்பாதவர்! ...