அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு நேர்ந்த கொடூர பாலியல் சம்பவத்தில் குற்றவாளி தண்டிக்கப்படுகிறான் என்பது ஆறுதலும், நிம்மதியும் தருகிறது…என்றாலும், இந்த குற்றம் ஒரு தனிமனிதன் சம்பந்தப்பட்டது மாத்திரமல்ல. இதில் கவனிக்கத் தவறிய அல்லது தப்பித்துக் கொண்ட குற்றவாளிகளின் பட்டியலை  பார்ப்போம்; ஒரு தொழில்முறை குற்றவாளி சுமார் 15 ஆண்டுகளாக கொடூர தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவன் – பல முறை கைதாகியும், பல முறை வழக்கு போட்டும் மீண்டும், மீண்டும் வெளியே வந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகிறான்…என்றால், அவன் ஒற்றை மனிதனல்ல, சில ...