ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பல ஆண்டுகளாக தன் கைவரிசையை காட்டி வந்துள்ளார் என்றால், அங்கு அவருக்கு தோதாக இருந்தவர்களை ஏன் தூக்க மறுக்கிறார்கள்? ஞானசேகரனுக்கு பல்கலையின் உள்ளேயும் லோக்கல் காவல்துறையிலும் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை; அண்ணா பல்கலைக் கழக மாணவி பாதிக்கப்பட்ட விவகாரத்தை பொறுத்த வரை ஊடகங்களுக்கு அது கொஞ்ச நாளைக்கு பரபரப்புக்கான செய்தி! அரசியல் கட்சிகளுக்கோ தங்கள் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க கிடைத்த வாய்ப்பு. இதனால் மக்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பை அறுவடை செய்வது ...
மாணவி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆதாய அரசியல் செய்கிறார்கள் தான்! ஆனால், இந்த சம்பவத்தில் அரசும், காவல்துறையும் நடந்து கொள்ளும் விதம் பல சந்தேகங்களுக்கு வலு சேர்க்கிறது. பல்கலை கழகத்தின் படுமோசமான நிதி நிலைமைகள் ஒருபுறமும், விடை தெரியாத கேள்விகள் பல மறுபுறமும் பிரச்சினையின் மூலத்தை மறக்கடிக்கிறது; கல்வி வளாகத்திற்குள்ளேயே அதில் படிக்கும் மாணவி வெளியாள் ஒருவனால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளது பெரும் அதிர்வுகளை உருவாக்கி உள்ளது. இதில் 80 சதவிகித சி.சி.டிவி கேமரா வேலை செய்யவில்லை. தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்துள்ளது என்பதும் குற்றவாளி தொடர்ந்து ...