”ஆளுநரைக் கொண்டு மத்திய பாஜக அரசு மாநில அரசை வதைப்பது போல, கிராம பஞ்சாயத்து தலைவர்களை கிளர்க்குகளைக் கொண்டும், பிடிஒக்களைக் கொண்டும் செயல்படவிடாமல் திமுக அரசு வதைக்கிறது” என தமிழ் நாட்டு கிராமங்களின் உள்ளாட்சித் தலைவர்கள் பொங்கி எழுந்து போராடத் துவங்கியுள்ளனர். மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கிறார், கவர்னர்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற மக்கள் பிரதிகளால் இயற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைக்கிறார்! மொத்தத்தில் மாநில அரசை அதிகாரமற்றதாக ஆக்க, மத்திய அரசு கவர்னரை பயன்படுத்துகிறது! இதற்காக தமிழக சட்டமன்றமே கொந்தளித்துள்ளது! உச்ச ...