’’உள்ளாட்சிகளை ஊனமாக்கிவிட்டு,அதிகாரம் பறிக்கப்பட்ட அமைப்பாக நடத்திக் கொண்டு எந்த ஒரு அரசாங்கத்தாலும் மக்களுக்கு நல்லாட்சி என்பதை ஒரு போதும் தரமுடியாது’’ என்கிறார் தன்னாட்சி இயக்கத்தின் பொதுச் செயலாளரான நந்தகுமார்.தமிழக கிராமங்களில் உள்ளாட்சிக்கான கடமைகள்,உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது தன்னாட்சி அமைப்பு! ‘’அரசர் காலத்து பிரஜை(subject) என்ற நிலமையிலிருந்து குடிமக்கள் (citizen) என்ற நிலைக்கு இப்போது வளர்ந்துள்ளளோம். இதனால் அனைவருக்கும் சம உரிமை கிடைக்கிறது” என்பார் வரலாற்று ஆசிரியர் ரொமிலா தாப்பர். எனவே அரசைக்  கேள்வி கேட்பது ஜனநாயகத்தில் அடிப்படையான ஒன்று. அங்கன்வாடி, ரேஷன்கடை, ...