சமீபகால நிகழ்வுகள் சந்தேகமின்றி தனித்திருக்கும் தவெகவையும், கூட்டணி சேர்ந்துள்ள அதிமுகவையும் விழுங்குவதற்கு பாஜக காய் நகர்த்தி வருவதை கட்டியம் கூறுகின்றன. திரளான வெகுஜனங்களின் ஆதரவு பெற்ற இரு மாநில கட்சிகளும் பாஜகவிடம் இருந்து துணிந்து விடுபடுமா? அதற்கு செய்ய வேண்டியது என்ன..? பெயர் தான் தமிழக வெற்றிக் கழகம்…! மாற்றத்திற்கான தேவை, பெரும் இளைஞர் படை, இரு திராவிடக் கட்சிகளையும் மாறி, மாறி அரியணையில் ஏற்றியதில் ஏற்பட்ட சலிப்பு … ஆகியவை த.வெ.கவிற்கு சாதகமான அம்சங்களாக இருந்தன…! ஆனால், தேர்தல் வருவதற்கு முன்பாகவே அதன் ...