அதிகார அழுத்தம் வெற்றி கண்டது. அரட்டல், மிரட்டல், உருட்டல் அனைத்துக்கும் அமைதி காத்த  அதிமுக இன்று அடிபணிந்துவிட்டது. பொருந்தா கூட்டணி, நிர்பந்த நட்பு வெற்றி பெறுமா? முரண்டு பிடித்த அதிமுக பணிந்தது எப்படி? அமித்ஷா ஏவிய அஸ்திரம் என்ன..? பின்னணியில் நடந்தது என்ன..? ”பாஜக விரித்த வலையில் விழமாட்டோம்” என போக்கு காட்டி வந்த அதிமுக, தானே சென்று சிக்கிக் கொண்டது! கொள்கை சார்ந்த ஒரு அரசியல் இயக்கத்தை நடத்துவதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். அது இன்றைய அதிமுக தலைவர்களிடையே அறவே இல்லை. எம்.ஜி.ஆரும் ...