கூட்டணி ஆட்சியாம்…! வேற வினையே வேண்டாம். தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற அதிமுக அடித்தளம் போட்டுத் தருகிறது என்ற பிரச்சாரம் ஒன்றே போதும் அதிமுகவை ஒழித்துக் கட்ட! கூடா நட்பு கேடாய் முடியும். பாலூட்டி வளர்த்தாலும் நச்சுப் பாம்பு கொத்தவே செய்யும்…! என்ன செய்யப் போகிறது அதிமுக? கூட்டணி என்ற வகையில் தமிழகத்தில் பாஜக அதிகாரத்திற்கு வந்துவிடுமே என்று அச்சப்படுவோரே தமிழகத்தில் அதிகம் உள்ளனர். இப்படிப்பட்டவர்களின் பாஜக எதிர்ப்பு ஓட்டுகளை வீரியப்படுத்தி ஒருங்கிணைத்து அமித்ஷா திமுக காலடியில் சமர்பிக்க விரும்புகிறார். இதன் மூலம் திமுக – ...













