அத்தி மரம் ஆன்மீகச் சிறப்பு பெற்றது. அத்தி மரத்தின் காய்,பழம், பட்டை போன்ற அனைத்தும் அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்தவை. அத்தி மரத்தின் பெருமைகளை பறவைகள் கூட நன்கு அறிந்திருக்கின்றன. ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஆர்வமுள்ளவர்கள் தவிர்க்க இயலாத ஒன்று அத்திப் பழமாகும்! நான் சிறுவனாக இருந்த போது  எனக்கு பிடித்த  கதைப் புத்தகங்களில் அரபு கதைகள் எனப்படும் ‘1001 இரவுகள்’ என்னும் கதைகள் ஹாதிம் தாய் முதலியவன முக்கியமானதாகும். அவற்றில் வரும் கதை மாந்தர்கள் அத்திப் பழத்தை மிகவும் ருசித்து  சாப்பிடுவதாக  கதைகளில் வரும். ...