அனகாபுத்தூர் குடியிருப்புகள் இடிப்புக்கு சொல்லப்பட்ட காரணங்கள் பொதுவாக பார்க்கும் போது நியாயமாகத் தோன்றுகிறது. ஆனால், உண்மையும், யதார்த்தமும் நெஞ்சை பிழிகின்றது. இது, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு எடுத்த கொள்கை நிலைபாடுகளுக்கு ஏற்ப தமிழக அதிகாரிகளும், காவல்துறையும்  செயல்படுவதையே காட்டுகிறது; சென்னையை 2015 வெள்ளத்திற்கு  பின்னர் ஆற்றங்கரைகளில், நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஏழை, எளியோர் குடிசை மற்றும் சிறு குடியிருப்புகளால் தான்  அந்த வெள்ளத்தின் போது வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டதாக அதிகார மையங்களின் சார்பாக ஒரு கருத்துருவாக்கம் செய்யப்பட்டது.  இந்த ...