‘ANEK’ வட கிழக்கு மாநில பிரச்சினைகளை கலை வடிவத்தில் பேசுகிறது! இதில் புறக்கணிக்கப்பட்ட அந்த மக்கள் இந்தியாவில் இருந்து அன்னியப்பட்டு வாழ்வதையும், அங்கு தீவீரவாதம் துளிர்ப்பதையும், அதில் அதிகார வர்க்கம் குளிர் காய்வதையும் சமூக அரசியலுடன் சொல்லி உள்ளார் இயக்குனர் அனுபவ் சின்ஹா! “ஆர்ட்டிகள்-15”, “தப்பட்”, “முல்க்” போன்ற படங்களால், சமூக அரசியல் குறித்த விவாதங்களை ஏற்படுத்திய இயக்குனர் அனுபவ் சின்ஹா. இந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா, நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர். அனுபவ் சின்ஹாவும், ஆயுஸ்மானும் ஏற்கனவே ஆர்டிகள்-15 படத்தில் இணைந்து அசத்தி ...