அன்வர் ராஜாவின் விலகல் பின்னணி என்ன? திமுகவில் சேர்ந்தது ஏன்? அதிமுகவிற்குள் மன உளைச்சலில் இருக்கும் சிறுபான்மைத் தலைவர்களை அரவணைப்பதில் எடப்பாடிக்கு இருக்கும் இயலாமை இன்னும் பல சேதாரங்களை உருவாக்கலாம். அன்வர் ராஜாவின் விலகல் சொல்லும் செய்தி என்ன? நீண்ட நெடிய திராவிட இயக்க பாரம்பரியமுள்ள ஒரு தலைவரான அன்வர் ராஜாவால் அதிமுகவில் தொடர முடியாமல் போகிறது என்றால், அதிமுக தன் இயல்பில் இருந்து தடம் மாறியதே காரணமாகும். எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார யாத்திரையில் அவர் பேசிக் கொண்டிருக்கும் பாதி விவகாரங்கள், ’பாஜகவின் ஸ்கிரிப்டோ’ ...