கள்ளச்சாராயம் தயாரித்து, விற்றால் ஆயுள் தண்டனை வழங்கவும், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கமான மதுவிலக்கு சட்டத் திருத்த மசோதா தமிழக சட்டப் பேரவையில்  தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கள்ளச் சாராயத்திற்கு வித்திட்டது யார்? இது மக்கள் நன்மைக்கான சட்டமா? இதில் ஆதாயம் யாருக்கு? கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் விதமாக சட்டத்தை கடுமையாக்கியுள்ளதாகவும், ஏகப்பட்ட பேரை கைது செய்துள்ளதாகவும், சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைத்துள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமைபட்டுக் கொண்டுள்ளார். அங்கீகாரமின்றி விற்கப்பட்ட சாராயம் காரணமாக 60 க்கும் மேற்பட்டோர் ...