தேச பக்தியையும், உயிர்ப்பான காதலையும் ஆழமாக காட்சிப்படுத்தியதில் படம் முழு வெற்றி பெற்றுள்ளது. ராணுவ வீரர்களின் வீரம், தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை மெய் சிலிர்க்க வைக்கின்றன. ஆனால், சொந்த மக்களுக்கு எதிராக ராணுவம் ஏன் இவ்வாறு செயல்பட வேண்டும் போன்ற கேள்விகளை படம் ஏற்படுத்துகிறது; காதல், வீரம், தேசபக்தி, தியாகம்..என கலவையாக வெளிவந்துள்ள அமரன் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள ஒரு திரைக் காவியம் என்பதில் சந்தேகமில்லை. மேஜர் முகுந்த் தாம்பரம் கிறிஸ்துவ கல்லூரியில் படிக்கும் போது இயல்பாக மலரும் காதல், அதை இரு வீட்டார்களும் ...